தொலைக்காட்சியில்,
திரு ஆமீர்கான் (ஹிந்தி நடிகர்), இந்திய மருத்துவத் துறை சமீப காலங்களில், சேவைத்துறை
என்பதிலிருந்து மாறி, ஒரு லாபம்
கொழிக்கும் தொழிலாகி விட்டது குறித்து கடுமையாகாச் சாடுகிறார்.
தொலைக்காட்சி மட்டுமின்றி, 28/05/2012 தேதியிட்ட ‘தி ஹிண்டு’ நாளிதழில்,
திரு ஆமீர்கான் அவர்கள் ‘பிராண்டெட் மருந்துகள்’ என்ற பெயரில்,
நாம் மருந்துக் கம்பெனிகளால், களவாடப்படு வதை விவரமாகத் தொகுத்துள்ளார்.
உதாரணமாக ரூ.1.20 க்கு கிடைக்க்க் கூடிய ஜலதோஷ மாத்திரைகளை, பிரான்ட் பெயரில் ரூ.35/-க்கும், ரூ.1000-க்கு
கிடைக்கக் கூடிய ஹார்ட் அட்டாக்கிற்கான மருந்துகள் ரூ.5000/- விற்கப்டுவதையும்,
ரூபாய் 25/- விற்கக் கூடிய மலேரியா மருந்தினை ரூ.400/-க்கு விற்கும் அவலத்தையும்
தீவீரமாக அலசியுள்ளார்.
சரியாகத்தான் சொன்னீர்கள் திரு.ஆமீர்கான்! இவை யாவும் விளம்பர யுக்திகளாகவோ அல்லது டி.ஆர்.பி ரேட்டிங்களை மனதில் கொண்டோ சொல்லப் பட்டவை அல்ல என உண்மையாகவே நம்புகிறோம்.
அநியாயமாக வசூலிக்கப் படும் மருந்துக் கட்டணங்கள் குறித்தும், ‘கிளினிகலாக’ டயக்னஸ் செய்யக்கூடிய நோய்களைக் கூட, ‘எவிடன்ஸ் பேஸ்டு’ மெடிசின் என்று சொல்லி, பல்லாயிரம் ரூபாய்களை ‘டெஸ்ட்’ என்ற பெயரில் கறந்து (கவர்ந்து) கொள்ளும் உத்திகளையும், சம்பாதிப் பதற்கு வசதியாக, ஒவ்வொரு டாக்டரும், தனக்கென தனியாக ‘லேபரட்டரிகள்’, ‘எக்ஸ்ரே யூனிட்கள்’, ‘ஸ்கேன் மெஷின்கள்’, ‘மருந்துக் கடைகள்’ வைத்துக் கொண்டிருப்பதையும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்?
உண்மையிலேயே சுருக்கமாக சொல்வதானால், சர்வ சாதாரணமாக 300%, 400% இலாபம் வைத்து, மருந்துகளை, பன்னாட்டு
மருந்துக் கம்பணிகள் விற்கின்றன.
இவர்களின் ஆதார காரணம், நோயாளிகள் எந்த விலை கொடுத்தேனும், இந்த
மருந்துக்ளை வாங்கிச் சாப்பிட்டே ஆகவேண்டும் என்பது தான்.
இது கார்பொரேட் ‘ஆஸ்பத்திரிகளின்’ காலம். மக்கள் உடல் நலனுக்காக இந்த
மருத்துவமணைகளில் மந்தைகள் போல, அடைபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், பன்னாட்டு மருந்துக்
கம்பெனிகள், ஆஸ்பத்திரிகள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், டாக்டர்கள், மருத்துவ
உபகரணங்கள் தயாரிப்பவர்கள், என யாவரும் ‘களவாணிக்’ கூட்டணி
வைத்து மக்களை கொள்ளையடிக்கின்றனர் என்பது தான். (கொள்ளை என்பதைவிட கடுமையான
வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை). இந்த விஷயம் ஒன்றும் ரகசியமானதல்ல!
நோயாளிகளுக்கு, இவர்களை விட்டால் வேறு ஏதும் ‘ஆப்ஷன்’ இருப்பதாகத்
தெரியவில்லை!
ஒரு தத்துவ மேதை சொன்னார். “20% இலாபம் கிடைப்பதாக இருந்தால், எங்கு வேண்டுமானாலும், பெரு
முதலாளிகள் மூலதனம் செய்வார்கள்! 50% இலாபம் கிடைப்பதாக இருந்தால், மூலதனம் திமிர் கொண்டு, மமதையுடன்
செயல்படும். 300% இலாபம் கிடைப்பதாக இருந்தால், மூலதனம் (முதலாளிகள்) எந்தவிதமான
கொலை பாதகச் செயல்களையும், எந்தவிதமான குற்ற உணர்வின்றி செயலாக்க துணியும்” !
கொள்ளை லாபம்
கொழிக்கும் மருந்துத் தொழில், இப்படித்தான் மானுடம் அற்றுப்போய், இலாப வெறி கொண்டு
அலைகிறது!
நீங்கள் படித்திருப்பீர்கள்! 1970 முதல், கல்லீரல், கிட்னி ஆகிய இடங்களில்
வரும் ஒரு புற்று நோய்க்கு Sorafenis Tosylate என்னும்
மருந்தினை 'பாயர்' நிறுவனம், Nexavar என்ற பெயரில் விற்பனை செய்து வந்தது! எந்த
விலைக்கு தெரியுமா? ரூபாய்.2,80,000/- க்கு! இதே மருந்தினை இந்திய நிறுவனம் NATCO PHARMA ரூ.8000/- உற்பத்தி செய்ய இப்போது தான் சுப்ரீம்
கோர்ட் தீர்ப்பளித்துள்ளது! அப்படியென்றால், இந்த மருந்துக் கம்பனி இதுவரை, எத்தனை
கோடிகள் சுருட்டியிருப்பார்கள்!
இது ஒரு சாம்பிள்தான். அப்படி யென்றால், இந்த களவாணிக் கூட்டணி, இன்னும் எந்த-எந்த விதத்தில் எல்லாம், நம்மை கொள்ளையடித்துக்
கொண்டிருக்கின்றன என்பதை நினைத்தாலே தலை சுற்றுகிறது!
இவர்களை “மருத்துவ பயங்கரவாதிகள்” என்று அழைத்தால் என்ன தவறு?
இதற்கு தீர்வுதான் என்ன? பணக்காரர்களும் ஏழைகளும் ஒரே தரத்திலான மருத்துவ
சிகிச்சை பெறவே முடியாதா? தீவீரமான வியாதிகள் உடையவர்கள், இவர்களின் கொள்ளைக்கு
ஈடுகொடுக்க முடியாது, சாவதைத் தவிர வழி இல்லையா?
திரு ஆமீர்கான் அவர்கள், பிராண்ட் பெயரில் மருந்துகளை எழுதாதீர்கள்,
ஜெனரிக் பயரில் மருந்துகளை எழுதுங்கள என்கிறார். இது மருந்துகளின் விலையை
பெருமளவில் சரியவைத்துவிடும் என்கிறார். அனைத்து தர மக்களும், கட்டுபடியாகும் விலையில்
மருந்துகளைப் பெறமுடியும் என்கிறார்.
ஆனால், திரு. ஆமீர்கான் அவர்களே! மருத்துவர்களிடமும், ஆஸ்பத்திரிகளிடமும் மனித
நேயத்தோடு நடந்து கொள்ளுங்கள் என கோரிக்கை வைப்பதாலோ அல்லது கெஞ்சிக் கேட்பதாலோ
ஒரு பொழுதும் பணிய மாட்டார்கள்.
கணக்கில் அடங்காத அளவில் கூட்டுக் கொள்ளை, காட்டு தர்பார் நடத்தும் இந்த
பன்னாட்டு மருந்துக் கம்பனிகளும், கார்பொரேட் ஆஸ்பத்திரிகளும், இவர்களுக்கு “இசைவாக
நடந்து கொள்ளப் பழக்கப் படுத்தப் பட்டிருக்கும் டாக்டர்களும்” –
கோரிக்கைகளுக்கு இசைவார்கள் என நம்புவது பேதமை.
இந்த கொள்ளைக் கூட்டத்தை அடித்து நொறுக்கி (பிஸிக்கலாக அல்ல, அமைப்புகளை
மாற்றி/சீர்திருத்தி!), அனைத்து தரப்பு மக்களும், தரமான மருத்துவமும்,
சுகாதாரமும், சிகிச்சைகளும் பெறவைக்க, அரசாங்கம் நினைத்தால் மட்டுமே முடியும்.
யதார்த்தமும், சோகமும் என்னவெனில், நமது அரசாங்கங்களும், அரசியல் வாதிகளும்
இந்த “களவாணிக் கூட்டதின்” ஒரு அங்கமாக மாறிப் போய் விட்டனர் என்பதுதான்!
அப்படியானால், நிலைமைகளை மாற்றவே முடியாதா?
முடியும். 'நமக்கு எந்த வகையான அரசு வேண்டும்' எனத் தீர்மாணிக்கும் சக்தியும், தெளிவும் நமது மக்களுக்கு வேண்டும்! அரசாங்கம் என்பது நமக்காகத்தான் என்பது புரிய வேண்டும்! 'அத்தகைய
அரசினை யாரால் அளிக்க முடியும்' என்ற தெளிவு வேண்டும். அரசியல் விழிப்புணர்வு
வரவேண்டும்!
அதுவரை?
நமக்காக யாராவது, எங்கிருந்தாவது போராடுவார்கள் நம்பிக் கொண்டு நாம், சாராயக்
கடைகளிலும், இலவசங்களிலும், சினிமாவிலும் தாராளமாக மூழ்கிக் கொண்டிருக்கலாம்.
ஜெய் ஹிந்த்!