எரிபொருள் விலை உயர்வு.
சமீபத்தில் உயர்த்தப் பட்ட எரிபொருட்கள் உயர்வு குறித்து எதற்காக அரசியல் கட்சிகள் கூப்பாடு போடுகின்றன என விளங்கவில்லை. குரூடாயில் பாரல் ஒன்றிற்கு 110 டாலர் (US) என விற்கும் போது, தற்போதைய சில்லறை விலையில், அரசு, எரி பொருட்களை விற்றுக் கொண்டிருக்க முடியாது என்பது, கூப்பாடு போடும் கட்சிகள் உட்பட, விபரமானவர்கள் அனைவரும் அறிந்ததே! இந்தியாவின் எரிபொருள் தேவையில் 84% இறக்குமதி செய்தாக வேண்டிய நிலையில், சர்வதேச சந்த்தையில் கச்சா என்ணை விலை ஏறிய வண்ணம் இருக்கையில், வேறு என்ன தான் செய்ய முடியும்?
ஒன்று விலையை ஏற்றாமல், மத்திய அரசின் 'சப்ஸிடி (மான்யம்) யினை உயர்த்திக் கொண்டே இருக்கலாம். இல்லாவிடில் சில்லறை விற்பனை விலையினை ஏற்றலாம். இதில் எந்த வழியினை தேர்ந்தெடுத்தாலும் பளு யாருக்குக் கூடும்? மக்களுக்கு தானே? இதை ஏன மக்களுக்கு சொல்ல மாட்டேன் என்கின்றனர் எதிர்க்கட்சியினர்?
பேரல் ஒன்றிற்கு 140 டாலராக விலை ஏறினால் எரிபொருள் விலை யினை மீண்டும்,மீண்டும் உயர்த்தத் தான் வேண்டும். இதில் அதிர்ச்சி யடைய ஒன்றுமில்லை.
எரிபொருள் விலையேற்றம் குறித்தும், இதனை எவ்வாறு சமாளிப்பது குறித்தும் கட்சிகளுக்கிடையே அபிப்பிராய பேதம் இருக்கத்தான செய்யும். விந்தையாக, இந்தியாவில், இப்பிரச்சினை குறித்து, ஒரு முதிர்ச்சியான விவாதம் இல்லாமல், வெறும் அரசியல் கூச்சலாக ஆக்கிவிட்டனர்.
இந்த கூச்சலாளிகள் எதிர்க்கட்சியில் இல்லாமல் ஆளும் கட்சியாக இருந்தால் என்ன செய்திருப்பார்கள் என மக்களுக்கு விளக்கமளிக்கத் தயாரா? மீடியாக்களும் மாற்று யோசனை ஏதும் சொன்னதாகத் தெரியவில்லை.
உண்மை என்னவென்றால் இவர்கள் எவருக்குமே, உண்மையான பிரச்சினைகள் குறித்து கவலையில்லை. அரசை எதிர்த்து ஏதேனும் கத்துவதற்கு இந்த விலை உயர்வு ஒரு சாக்கு! அவ்வளவுதான்.
உருப்படியான யோசனை ஏதும் இல்லாத நிலையில், எப்போதும் போல ஒரு டிமாண்ட் வைக்கப் படுகிறது. "அரசு இறக்குமதியாகும் கச்சா எண்ணையின் பேரில் விதிக்கப்படும் வரியினை குறைக்க வேண்டும்" என்பதுதான் அது.
இவர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். மக்களிடமிருந்து விதிக்கப்படும் வரிகள், யாருடைய வீட்டிற்கோ போவதில்லை. திட்டங்களாக மக்களுக்குத்தான் திரும்ப வரும். திட்டமிடுதலுக்கே பணம் இல்லை; எல்லாவற்றையும் மான்யமாகவே வழங்கிவிட்டோம் என்றால், மற்ற பணிகளுக்கு யார் பணம் கொடுப்பார்கள். பணம் இல்லாமல் எத்தனை திட்டங்கள் அறைகுறையாக நிற்கின்றன?
டீசல் விலை உயர்வால், விலைவாசி உயரும்-பணவீக்கம் அதிகரிக்கும் என அலறுபவர்கள், அரசு திட்டங்களுக்கும், பல்வேறு பணிகளுக்கும் எங்கனம் பணம் கிடைக்கும் என்பதையாவது சொன்னால் நல்லது. டிசல் விலையினை உயர்த்தாவிட்டால் அரசு என்ன செய்யும்? மீதி வரிகளை உயர்த்து வார்கள். (வருமான வரி, கஸ்டம்ஸ், எக்ஸைஸ் போன்றவை). இந்த வரிகளை யார் கட்டு வார்களாம்? மக்கள் தானே? இல்லாவிட்டால் நோட்டு அடிக்கலாம்! அதன் விளவு என்ன வாகும்? அப்போது பணவீக்கம் உயராதா? இது எல்லாம் ஒரு B.COM படித்த பையனுக்கு கூட தெரியும். சும்மா நடிக்கிறார்கள். இந்த வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, எரிபொருள் விலையினை உயர்த்தவே இல்லையா?
The TIMES OF INDIA சொல்வது போல வரிகளை “ad valorem” முறை யிலிருந்து “specific duties” (“fixed” taxes) மாற்றுவது சொல்வதற்கு வேண்டுமானல் எளிது; செயலில் மிகவும் கடினமானது. . Ad valorem means that the taxes are a function of pre-tax prices. Every time pre-tax prices increase, the tax increases and every time pre-tax prices fall, the tax falls. In an environment when pre-tax prices are climbing, it appears a logical formula to keep taxes intact (have “specific duties”). But what would happen if the pre-tax prices fell? Would the taxes be held intact then also? If pre-tax prices were falling, the ad valorem tax structure would be more beneficial to the public. But what would happen if the pre-tax prices fell? Would the taxes be held intact then also? If pre-tax prices were falling, the ad valorem tax structure would be more beneficial to the public.
மேலும், நமது அவ்வப்போதைய சௌகரியத்திற்கு ஏற்ப டாக்ஸ் அமைப்பினை மாற்றிக் கொண்டே இருக்க முடியாது. இது மேலும் பொருளாதார குழப்பத்தினையே ஏற்படுத்தும். இது நிரந்தர - நம்பிக் கைகுரிய தீர்வாகவும் இருக்க முடியாது.
எனவே இந்த உயர்வினை தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும். சப்தம் காட்டாமல் ஒவ்வொரு மாதமும், பேஸ்ட், சோப், ஷாம்பூ, சாராயம், பருப்பு விலைகள் ஏறிக் கொண்டே இருக்கின்றனவே, டீசல் விலை ஏறா திருக்கும் போதே? இதைப் பற்றி எந்த அரசியல் வாதியாவது வாயைத் திறந்தார்களா?
நீண்டகால, நம்பத்தகுந்த திட்டம் என்னவென்றால், நாம் பெட்ரோலியப் பொருள்களையே முழுவதும் நம்பிக் கொண்டிராமல், மாற்று ஏற்பாடுகளை யோசிக்க வேண்டும் என்பது தான். நான் மரபு சாரா - மாற்று எரிபொருட்களை மட்டும் சொல்லவில்லை.
உதாரணமாக, ஆரம்பமாக , பொருட்கள் போக்கு வரத்திற்கு ஏராளமான டீசலைக் குடிக்கும் லாரிகளை மட்டும் நம்பாமல், எலக்ட் டிரிக் ட்ரையின்களை மிகுதியாக பயன்படுத்தாலாம். வசதியானவர்களின் போக்குவரத்திற்கு 'கார்களை' பயன்படுத்துவதை 'டிஸ்கரேஜ்' செய்யும் விதமாக 'பப்ளிக் டிரான்ஸ்போர்ட்டை' வலுப்படுத்தலாம். உதாரணமாக, திருச்சியிலிருந்து சென்னை செல்வதற்கு, நாலு விதமான பஸ்களை விடலாம். (1) எப்போதும் போல (3+2) சீட்கள் உள்ள பஸ்கள். (2) 2+2 உள்ள நல்ல பஸ்கள். (3) ஏ.ஸி வொல்வோ பஸ்கள். இதில் தனியார் பஸ்களையும் பயன்படுத்தலாம். தங்களது வசதிக்கு ஏற்றாற்போல், மக்கள், தங்களது பஸ்களை தேந்த்தெடுக்கலாம்.
இதனால் திருச்சியிலிருந்து சென்னைக்கு செல்லும் 3000 கார்களில், 2000-த்தையாவது குறைக்கலாம் தானே? (பெங்களூருக்கு சென்று பாருங்கள், மைசூர் செல்ல- ரூ70/-க்கு சாதாரண் பஸ்கள், ரூ150/-க்கு 2+2 பஸ்கள், ரூ300/-க்கு வோல்வோ பஸ்கள். ) இப்படி பப்ளிக் டிரான்ஸ்போர்ட்கள் வலுவாக இருந்தால் கார்களுக்கு செலவாகும் பெட்ரோல் குறையும் அல்லவா?
"டிரெயின்கள்" மற்றும் கூடுமானவரை ஆலைகள் முற்றிலுமாக மின்சாரத்திற்கு மாறியாக வேண்டும். மின்சார உற்பத்திக்கு சூரிய சக்தி, மேலும் பொடன்ஷியல் உள்ள காற்றாலைகள், மற்றும் மரபு சாரா முறையில் மின் உற்பத்தி ஆகியவற்றை, வியாபார ரீதியில் செய்ய சீரியஸாக ஆராயலாம்.
நாம் அணுமின் நிலையம் ஆபத்து என்றும், தெர்மல் பவர் நிலையங்கள் பாதுகாப்பானவை என்ற் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது போல நாம் பல நம்பிக்கைகளை (myth) வைத்துள்ளோம். விமான பயணம் பாதுகாப்பானது. சாலை பயணம் பாதுகாப்பானது என்பது போல.
ஆனால் உண்மை என்ன? சராசரி வருடத்திற்கு 1.25 இலட்சம் பேர் சாலை விபத்தில் உயிர் இழக்கின்றனர். விமான விபத்தில்? வெறும் 120 பேர்.
தற்போது அணுமின் சக்தியைப் (ஃபுக்குஷிமா)பற்றி பேசினால் அடிக்க வருவார்களோ என்னவோ? ஆனால் முறையாக கையாண்டால் அணுமின் நிலையங்கள் பாது காப்பனவையே! என்ன? தர்மல் பவர் நிலையங்கள், மெல்ல நம்மை கொல்லும் (பொல்லியூஷன் மூலம்). அணு சக்தி உடனடியாக. அவ்வளவு தான் வித்தியாசம்.
எனவே அனைத்து உபயோகங்களுக்கு மின்சாரத்தை நம்புவது, பெட் ரோல்-டீசலை நம்புவதை விட பல மடங்கு நமக்கும், நாட்டுக்கும் நல்லது. (பேட்டரி கார்- பைக்)
நீங்கள், ஐரோப்பாவும் மற்ற வளர்ந்த நாடுகளும் அணுமின் நிலையங்களை ஒழித்துவிடுவாதா பேசுகின்றனவே என் சொல்லலாம். உலகமயமாக்கலின் ரகசியமே இது தான். புத்திசாலித்தனமாக, அனைத்து கனரக் தொழிற்சாலைகளையும் வளரும் நாடுகள் தலையில் கட்டுவது; (உழைப்பு சகாயமாக கிடைக்கிறதல்லவா?) பயனை மட்டும் அவர்கள் அனுபவிப்பது. உங்களுக்கு தெரியுமா? சென்னையில் உற்பத்தி ஆகும் கார்களில் பெருவாரியானவை ஏற்றுமதி தான் செய்யப் படுகின்றன. அதிக மின்சாரம் தேவைப்படும், உற்பத்தி ஆலைகளை நம் தலையில் கட்டிவிட்டால், மின்சார தேவைக்கு என்ன தேவை அவர்களுக்கு? அவர்கள் தாராளமாக அணுமின் ஆலைகளை மூடலாம். சுற்றுச்சூழல் மாசுபடுதல் எல்லாம் நமக்கு.
எனவே வளர்ந்த நாடுகளுக்கான பிரச்சனைகளும்- நமது பிரச்சனைகளும் (இந்தியா-சீனா போன்றவை) வெவ்வேறு விதமானவை. எனவே அமரிக்காவைப் பார்த்து நாம் மாரடித்துக் கொள்ளத் தேவையில்லை.
நான் சொல்ல விரும்புவது, இந்த விலை ஏற்றம் குறித்து உண்மையான தேச பக்தனாய், ஒரு உண்மையான விவாதமே தவிர, நான் செய்தால் சரி.. நீ செய்தால் தப்பு என்ற அரசியல் "லாவானி" அல்ல.
அறியாமை மிகுந்த இந்திய மக்களை குறை சொல்ல ஏதுமில்லை. ஏனெனில் அவர்களை சிந்திக்க விடாமல் ஜாதி, மத, மொழி வெறி களுக்குள், நமது கட்சிகளும், மீடியாக்களும் வைத்திருக்கின்றன. மக்கள் அவ்வாறு இருப்பது தான் அவர்களுக்கு சௌகரியம்.
மீடியாக்கள் மக்களுக்கு உண்மையான விஷயங்களை சொல்லுவதே இல்லை. இவைகள் வியாபாரத்திலும், அரசியலிலும்தான் மிகுந்த நாட்டம் உள்ளவை. உள் நோக்கம் கொண்டவை.
எல்லாவற்றிற்கும் ஆளும் அரசை குறை,குற்றம் சொல்லிக் கொண்டே பிழைப்பை நடத்துவது தான் இவர்கள் நோக்கம். என்றாவது, எதற்காக வாவது, நாடு தழுவிய, உருப்படியான யோசனை கொண்ட விவாதங்களை செய்திருக்கிறார்களா? எதிர்க்கட்சிகள் ஆளும்போது விலைவாசியினை ஏறாமல் / ஏற்றாமல் பார்த்துக் கொண்டார்களா? இல்லையே?
இந்த 'லாவாணி' கச்சேரியில் விஷயத்தில் மட்டும் பி.ஜே.பி யும் இடது சாரி கட்சிகளும் ஒன்று சேர்ந்துவிடும்
முடிவாக: நம் நாட்டிலேயே, நமக்குத் தேவையான எரிபொருட்களை, நாமே உற்பத்தி செய்ய முடியாத நிலையில், நமது தேவையில் 84% இறக்குமதி செய்யவேண்டிய நிலையில், உலக சந்தையில் எரிபொருள் விலை ஏறிக்கொண்டே இருக்கும் சூழ்நிலையில், நாமும் சில்லறை விற்பனை விலையை ஏற்றத்தான் வேண்டும். ஏனெனில்,உலக சந்தை நமது கையில் இல்லை. இது விபரமறிந்தவர்கள் யாவரும் அறிவர்.
மாற்று என்பது, பெட்ரோலியப் பொருட்களிலிருந்து கூடுமானவரை விரைவில் மின்சாரத்திற்கு மாறுவதே!
நாம் வாங்கும் விலையில் பாதிக்கு மேல் வரியாக வாங்கிக்கொண்டு, அதில் கொஞ்சம் வீசி எரிவதை அரசு மானியம் என்கிறது. அது சரி என்கிறீர்களா? அது போகட்டும், 2008 -இல் பெட்ரோல் பேரலுக்கு $130+ லிருந்து $70 -க்கு சரிந்ததே, அப்போது நமக்கு விற்கும் விலை குறைந்ததா? உலக சந்தையில் கடந்த ஒரு மாதத்தில் $110 -லிருந்து $95 -க்கு விலை சரிந்திருக்கிறது. அப்படியிருக்கும்போது இந்த விலை உயர்வு எந்த விதத்தில் நியாயம்?
ReplyDeleteசார்.. முக்கியமாக, நான் சொல்லவந்தது, எல்லா முக்கிய பிரச்சினைகளிலும், நமது 'எதிர்க் கட்சிகள்' நடந்து கொள்ளும் பாங்கு பற்றி! மேலும், பேரல் 130 டாலராக இருந்த காலத்திலும், 70 டாலராக குறைந்த போதும், மான்யத்தின் அளவு கூடி/குறைந்ததே தவிர, அடக்க விலைக்கோ (வரி உட்பட) அல்லது இலாபத்திற்கோ விற்கவில்லையே!
ReplyDelete