Friday, June 24, 2011

பாடம் படிப்போம்!

கருணாநிதி ஒரு பேட்டியில் தான் தோற்றதிற்கு ஒரு ஜாதியினர் தான் காரணம் என பகன்றுள்ளார்.

நிரம்ப கஷ்டம். இம்மாதிரியான அரசியல்வாதிகள் தமிழ் நாட்டின் துர திர்ஷ்ட்டம். கருணாநிதி கடந்த ஐந்து ஆண்டுகளாக, அரசாங்கத்தினையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை. கட்சியையும் கட்டுப் பாட்டில் வைத்திருக்க வில்லை. குடுப்பத்தினர், பெரிய வட்டம், சின்ன வட்டம் என அனைவரும், மக்களையும், அரசாங்கத்தினயும் கொள்ளையடித்தனர். தமிழகமே பங்குபோடப்பட்டு, அவரது குடும்பத்தினருக்கு, சுயராஜ்யம் போல வழங்கப்பட்டிருந்தது.  வடக்கே இவர்.. தெற்கே அவர்.  தில்லிக்கு இண்னொருவர் என.. இது தவிர குட்டி சமஸ்த்தானங்கள் தனிக் கணக்கு!

கனிமொழி உள்ளே இருப்பது பெரியவருக்கு சிரமமாய் உள்ளது. உப்பைத்தின்றால் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும்.  1,76,000 கோடிகளை யார் கொள்ளையடிக்கச் சொன்னது? அல்லது கொள்ளைக்கு துணை போகச் சொன்னது? உள்ளே இருப்பவர்கள் என்ன சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதற்காகவா இருக்கிறார்கள்? 

தோற்றதற்கு உண்மையான காரணத்தை இவர் கூற விரும்பாவிட்டாலும், இத்தனை வயது முதிர்ந்த் அரசியல் தலைவருக்கு, உண்மையான காரணம் தெரிந்தே இருக்கும்.  எப்போதும் போல, தோற்றதிற்கு அவருக்கு ஏதாவது ஒரு காரணம் சொல்லத்தீர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  பார்த்தார்.  எதற்கும் பதில் சொல்லாமல், தன் வேலையை பார்த்துக் கொண்டிருக்கும் பார்ப்பனர்கள் அகப்பட்டார்கள்.

மொத்தம் பதிவான ஓட்டுகளில் 1% இருக்குமா இவர்கள் ஓட்டு? இவர்கள் மொத்தமாக கருணாநிதி கட்சிக்கு ஓட்டு போடாவிட்டாலும், முடிவுகளில் எந்த மாறுதலும் ஏற்படாது! 

இவர் கூற்றுப்படியே வைத்துக் கொண்டாலும்,  ராமதாஸ் தோற்றதிற்கு யார் காரணம்?  காங்கிரஸ் தோற்றதிற்கு யார் காரணம்?  இவை எல்லாவற்றிற்குமே பார்ப்பனர்கள் தானா?  கம்யூனிஸ்ட்கள் ஜெயித்ததற்கு யார் காரணம்?     

1967 தேர்தலில், ராஜாஜி யாருக்காக ஓட்டுக் கேட்டார்? மறந்துவிட்டாரா கருணாநிதி? 

சென்றமுறை கருணாநிதி ஜெயித்தபோது, இந்த பார்ப்பணர்கள் எல்லோரும் அமரிக்காவிற்கு சென்றுவிட்டார்களா என்ன ?

பாழாய்ப் போன இந்த ஜாதி அரசியல் தமிழ் நாட்டைவிட்டு என்று ஒழியப்போகிறதோ தெரியவில்லை.  

பசுமாடு போல், சாதுவான இவர்களை கரித்துக் கொட்டுவதில் இவருக்கு என்ன லாபம்? வேறு ஜாதியினரை இதுபோல சொல்லிவிட்டு, சும்மா இருக்க முடியுமா? இன் நேரம் 10 பஸ்ஸையாவது எரித்து இருக்க மாட்டார்கள்?   உண்மைக்காரணத்தை காண மறுத்துவிட்டால் அடுத்த தேர்தலிலும் இதே கதிதான் ஏற்படும்.   இதில் வேடிக்கை என்ன வென்றால், எனக்கு தெரிந்த இந்த பார்ப்பனர்கள் பலர் கருணாநிதி கட்சிக்கு பரிபூரண விசுவாசிகள். 

50%க்கும் மேலான மக்கள் அ.தி.மு.க வை தேந்தெடுத்துள்ளனர் என்ற தேர்தல் முடிவினை, ஏற்க மறுக்கும் இம்மாதிரியான அரசியல் வாதிகள், ஜன நாயகத்திற்கே இலாயக்கற்றவர்கள்.  தமிழுக்கும், தமிழினத்திற்கும் இவர் மட்டுமே 'குத்தகை' எடுத்துள்ளாரா என்ன? தோற்கும் போதெல்லாம் தமிழ்-தமிழினம் என இனவாதம் பேசி,ஜாதிவெறியினை கிளப்புதலை வாடிக்கையாகக் கொள்வதற்கு?

அ.தி.மு.க விற்கு விழுந்த ஓட்டுகள் கருணா நிதி கட்சிமேல் உள்ள கோபம், ஆத்திரம் ஆகியவற்றின் வெளிப்பாடுதானே தவிர, ஜெ. ஏதும் 'பொற்கால ஆட்சி தந்துவிடுவார்' என்ற நம்பிக்கையால் அல்ல!

குடும்ப பரிவாரங்களை முற்றிலும் தள்ளிவைத்து, கூட்டுக் கொள்ளைகளை கைவிட்டு, சாமாணியர்களுக்கான, நிஜமான அரசியல் நடத்த ஆரம்பித்த்தால் மக்கள் ஆதரவு என்றும் அவருக்கு உண்டு.   தமிழக மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல.. அவர்கள் யாவற்றையும் கவணித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.  இல்லையென்றால் இவ்வளவு தீர்மாணமாக எந்த மாநிலத்தில், எல்லா கருத்துக் கணிப்புகளையும் மீறி, ஒரு முடிவு வந்திருக்கிறது?

ஒழுங்கான ஆட்சி இல்லையென்றால், இப்போது கருணாநிதிக்கு ஏற்பட்ட தோல்வியினை, ஜெ.க்கும் அளிக்கத் தயங்க மாட்டார்கள்.

உண்மை என்னவெனில், மக்கள் அளித்த இந்த தோல்வி பாடத்தில் கற்றுக் கொள்ள வேண்டியது , கருணாநிதிக்கு மட்டுமல்ல.. ஜெ.யும் தான்.  

No comments:

Post a Comment