சலிப்பான நிகழ்வுகள் சில, சுவாரஸ்மானதாகவும், எதிர்பார்த்து சென்ற நிகழ்வுகள் 'கொட்டாவி' யாக முடிவதும் கூட நடப்பதுவே!
It was a closed family function invitation
ஆனால், சுவாரஸ்யம் நிகழ்வில் இல்லை.
அதில் கலந்து கொண்ட, எனது ஒரு நன்பரின் சந்திப்பில்தான்.
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய நட்பு அது.
வாழ்க்கையின் அசுர வேகம்,
மூச்சை அடக்கி தெறித்தோட வைக்கும் பொழுது, நட்பை நினைத்து அசைபோட
நமக்கு அவகாசமிருக்காதல்லவா? இன்று அது கிடைத்தது.
எங்களின் நட்பும் அப்படித்தான.
காலத்தின் ஓட்டத்தில்,
காலமும் சூழலும்
எங்களை எல்லாம்
மூலைக்கு ஒருவராகச் சிதறடித்துப் போட்டிருந்தன.
எத்தனையோ சுழல்கள்,
சடார்சடாரென மாறிய காட்சிகள்.
அவரவர் போக்கில்
அவரவருக்கான அனுபவங்கள்—
சிலரை மென்மைப்படுத்தி இருக்கும்;
சிலரை முற்றிலும் வேறொரு மனிதராக மாற்றியிருக்கும்.
ஆனாலும்,
நன்பர்கள் சந்திக்கும் பொழுது
விட்ட இடத்திலிருந்தே தொடங்குகிறார்கள்.
அந்தத் தருணம்
nostalgic…
thrilling…
curious…
என்று எல்லாம் சேர்ந்து
ஒரே உணர்வாக மாறுகிறது.
இவரைச் சந்தித்த போதும் அப்படித்தான்.
சில நிமிடங்கள்
2013-இல் சிக்கிக் கொண்டதுபோல் தோன்றினாலும்,
அந்த நினைவுகள் இனிமையான அசைவுகளாகவே இருந்தன.
இடையறாது பேசவும்,
தடையின்றி தொடரவும்
சற்று வெகுளித்தனம் வேண்டும்,
சற்று innocence வேண்டும்,
பாசாங்கில்லாத வாஞ்சை வேண்டும்,
சிறிதளவு உண்மையான அக்கறையும் வேண்டும்.
இப்படி மனிதர்கள் அமைவது அரிதுதான்.
ஆனால், அப்படிப்பட்வர்கள் இல்லாமலில்லை.
இந்தக் காலமும் கூட,
இன்னமும் எளிமையோடும்
பாசாங்கற்ற இயல்போடும் வாழ்பவர்களை
அவர்கள் போலவே தொடர உலகு அனுமதிக்கிறது என்பதே
ஒரு பாலைவனச் சோலை போன்ற உணர்வு.
இரண்டு மணிநேரம்!
அது நேரம் அல்ல—
ஒரு time travel.
ரிடையர் ஆனதை மறந்து,
பேரன்களையும் பேத்திகளையும் மறந்து,
நாங்கள் திரும்ப 90-களில் நின்றிருந்தோம்.
இருபது வருடங்களை
இரண்டு மணிநேரத்தில் கடப்பது
வேறொரு நிலை அனுபவம்.
அடுத்தமுறை சந்திக்கும் பொழுது,
விட்ட இடத்திலிருந்தே
மீண்டும் தொடரலாம்.
அழைக்கப்பட்ட நிகழ்வு முடிந்ததும்,
அவரவர் வாழ்க்கையின்
அடுத்த நாளின் அன்றாட கவலைகளோடு
பயணம் தொடரத்தான் போகிறது.
ஆனாலும், இந்தச் சிறு refreshment,
நட்பு வருடிய ஹிதம்,
சில நாட்களுக்கு
மனதில் தங்கி விடும்.
ரயில் நட்புகள் மறந்துபோகலாம்.
ஆனால் வாழ்க்கையே
ஒரு நீண்ட ரயில் பயணம்.
இந்த வகை நட்பு
இடை நிலையத்தோடு இறங்குவதில்லை.
மறக்கப்படுவதுமில்லை.
இறைவன் அனுமதிக்கும் காலம்வரை, அவரது காலம்
சந்தோஷத் தருணங்களால்
வாழ்வு ததும்பட்டும்.
No comments:
Post a Comment