இன்று (30/06/2011) காலை ஒரு ஃபோன் வந்தது! +9111... என ஆரம்பித் ததாலே, யாரோ தில்லியிலிருந்து கூப்பிடுகிறார்கள் என அவதானிக்க முடிந்தது. யாராயிருக்கும்? நமது நன்பர் வட்டாரம் தமிழகத்தை தாண்டாதே! உறவினர் வட்டாரம் அமரிக்கா, தில்லி, பெங்களூர், மும்பை என பரவலாக விரவிக்கிடந்தாலும், சாவுச் செய்தி அல்லது ஏதேனும் உதவி கேட்டுத்தான் கால் வரும்! இது இரண்டும் இல்லாவிட்டால் சஷ்ட்டியப்ப பூர்த்தி (60 வயது) பீமரத சாந்தி (70) இது மாதிரி தானே செய்திவரும்..
இதில் ஏதும் இல்லாவிட்டால் "சண்டை" போடுவதற்காகவே" சில சொந்தங்கள் இருக்கிறார்கள். இந்த மகானுபாவர்களுக்கு 'சண்டை வளர்க்க' ஏதேனும் ஒரு காரணம் இருந்து கொண்டே இருக்கும். எனவே சொந்தங்களிடமிருந்து அழைப்பு வந்தாலே எனக்கு கதி கலங்கி 'டாய்லெட்' போகவேண்டி வரும். இந்த சண்டைக் கோழி களிடமிருந்து தப்பிக்க ஒரு வழி கண்டுபிடித்துள்ளேன். மனைவி யைப் பேசச் சொல்லிவிடுவது. அவள் எதாவது சொல்லி சமாளித்து விடுவாள்.
என் 60 வயது வாழ் நாளில், ஒரு நாளாவது "என்னப்பா.. நல்லா இருக்கியா" என ஒரு "சம்பிரதாயத்திற்கு கூட" கேட்டு ஒரு கால் கேட்டதில்லையே.. ஏதேனும் உதவி கேட்கப் போகிறார்கள? அல்லது சொந்தக்காரர்கள் எவராவது மண்டையைப் போட்டு விட்டார்களா என விசனப்பட்டு, கிலேசத்துடன் ஆன்ஸர் பண்ண முடிவெடுத்தேன்.
இந்த யோசனைக்குள் 4-5 ரிங்க்குகள் ஆகிவிட்டது. எங்கே கட்டாகி விடப்போகிறதோ என அவசர கதியில் 'ஹலோ' என விளித்தேன்.
நமது "நதியா" போல தமிழைக் கடித்துத் துப்பிக் கொண்டு ஒருவர் பேசினார். சார்.. நீங்கள் கிரடிட் கார்டு வைத்து இருக்கிறீர்கள்.. அதற்கு தவறாமல், ஏமாற்றாமல் பணம் செலுத்திக் கொண்டிருக்கிறீகள். ஆகவே நாங்கள் உங்களுக்கு ரூ 60,000/- மதிப்புள்ள ஒரு கிஃப்ட் வவுச்சர் அனுப்புவதாக் உள்ளோம். ஆகவே நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால்.........."
"நிறுத்தும்.... நீர் யார்? என்னுடைய தொலைபேசி எண் உமக்கு கிடைத்தது எங்கனம்? நான் ஒழுங்காக கிரடிட் கார்டுக்கு பணம் கட்டினால், அதற்காக(?) ஏதேனும் எனக்கு அவார்டோ அல்லது ரிவார்டோ கொடுப்பதாக இருந்தால் அதை என்னுடைய பேங்கர் தானே செய்யவேண்டும்? நீர் யார் நடுவில்..?
"சார்.. அரசு ஒரு 'கிரடிட் கார்டு பீரோ என்று ஒரு அமைப்பினை வைத்துள்ளது. நாங்கள் அதற்கு ஆதரைஸ்டு ஏஜண்ட். எங்கள் நிறுவனத்தின் பெயர் 'இந்தியா தர்ஷன்" நான் அங்கிருந்துதான் பேசுகிறேன். எங்களை, அரசு உங்களுடன் பேச அங்கீகரித்துள்ளது. எனவே நாங்கள் தரும் ரூ.60,000 மதிப்புள்ள கிஃப்ட் வவுச்சரை நீங்கள் அனுபவிக்க வேண்டுமென்றால் ................"
நீர் சொல்லும், இந்த விபரங்களை எல்லாம் நான் எனது பேங்கருக்கு அனுப்பப் போகிறேன்...". "அவர்களிடம், எதற்காக, என் சம்மதமின்றி என் பற்றிய தகவல்களை மற்றவர்களுக்கு கொடுத்தீர்" என வினவப் போகிறேன். அவர்கள் கொடுக்கும் பதில் எனக்கு திருப்தி அளிக்க வில்லை யென்றால் கோர்ட்டுக்கு போக தயங்கமாட்டேன்...உம்மையும் அந்த கோர்ட் கேசில் சேர்ப்பேன்.. . எனவே தெளிவாக பதில் கூறும்.."
மறு முனையில் மயான அமைதி...
" ஹலோ இந்தியா தர்ஷன்... லைனில் இருக்கீகளா..."
மறுகணம் இணைப்பு துண்டிக்கப் பட்டது
இன்று, இந்தமாதிரியான ஆட்கள், என்னை வதைத்தாக வேண்டும் என தீர்மாணித்து விட்டார்கள் போலும். ஒரு மணி நேரம் கழித்து இன்னொரு கால். அது +9122... எனத் துவங்கியது.. ஓஹோ...தில்லி ஆயிற்று , இப்போது பம்பாயா?
இப்போது என்னுடன் பேசிய அம்மனிக்கு, நல்ல வேளையாக தமிழ் தெரியவில்லை. ஆயினும் தேனான குரல். கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இனிமை.
ஆங்கிலத்தில், கடுமையான அமரிக்கன் உச்சரிப்பில், பேசுவதில் பாதி புரியாமல், உரையாடினார். நொடிக்கு ஒரு மிஸ்டர் பலராமன்... மிஸ்டர் பலராமன் என விளித்துக் கொண்டே, என்னை "டாடா நேனோ" கார் வங்க வற்புறுத்தினார்.
"இதோ பாரம்மா... இந்த மாதிரி சும்மா..சும்மா என்னை, பெயரைச் சொல்லிக் கூப்பிடாதே.. நான் அதை விரும்பவில்லை. சும்மா 'சார்..' எனக் கூப்பிடு! இலையெனில் என்ன சொல்ல விரும்புகிறாயோ அதைமட்டும் சொல்.. இந்தமாதிரி மண்டையில் அடிக்கிறமாதிரி பெயரை நிமஷத்திற்கு நூறு முறை சொல்லாதே.. புரிந்ததா?"
"அடுத்து நான் கார் வாங்கப் போவதாக உனக்கு யார் சொன்னது? என் நெம்பர் உனக்கு எப்படி கிடைத்தது? இதற்கு முதலில் பதில் சொல்லு!... பிறகு டாட்டா நேனேவோ அல்லது பிர்லா நேனோவா என முடிவு செய்யலாம்!
'ஸார்... நீங்கள் கார் வாங்காவிட்டாலும் பரவாயில்லை.. எங்கள்து கார் பற்றி உங்களுக்கு விளக்கியாக வேண்டும்.... ஒரு பத்து நிமிஷன் எனக்காக ஒதுகினால்.... "
"கொஞ்சம் பொறு "நானோ" பெண்ணே !....எதுவாக இருந்தாலும் முதலில் நான் எழுப்பிய வினாக்களுக்கு நீ பதில் சொன்னால்தான் ஆச்சு... "
"....."
"நான் இந்தியன் இங்கிலீஷில் சொல்லுவது உன்னுடைய அமரிக்கன் இங்கிலீஷுக்கு புரியவில்லை எனில் மீண்டும் சொல்லத்தயார்.. சொல்லவா?"
சப்தமின்றி டெலிபோன் கட் செய்யப் பட்டுவிட்டது.

"ஓய்... இந்தியா தர்ஷன்...உம்மை எச்சிரிக்கை செய்கிறேன். நான், நமது உரையாடல்களை பதிவு (Record) செய்து கொண்டுள்ளேன்.. உமது பெயர் என்ன? கிஃப்ட் வவுச்சருக்கு, என் பெயரை, நீர் எப்படி தேர்வு செய்தீர்? முதலில் நான் கிரடிட் கார்டு வைத்திருக்கிறேனா - இல்லையா என்பதை உமக்கு சொல்லியது யார்? அதைவிட முக்கியமாக என் தொலைபேசி எண்ணை உமக்கு கொடுத்த நபர் யார்?