மீண்டும் எழு!
பிரமிப்பூட்டும் பர்வதங்கள் அச்சமூட்டுமா?அவற்றின் உச்சியை நோக்கி நப! அவை ஓடப்போவதில்லை;
வெல்லக்கூடியவையே அவை.
வழியை அறிதல் — அதுவே ஞானம்.
விடியற்காலங்கள் சோர்வூட்டுமா?அமைதியாக படுத்திரு;
அலைகள் அடங்கட்டும்
குடி மூழ்கிவிடாது!
திட்டங்கள் சிதைந்தனவா?
அஞ்சாதே!
மீண்டும் திட்டமிடு,
மீண்டும் தொடங்கு!
ஒவ்வொரு விழுதும் எழுச்சிக்கான முன்னுரை!
அருவருப்பான நீள் முடிகள்
மழிக்கப்படலாம்;
ஆனால் —
உன் கிரீடம் தாழ்த்தப்படக் கூடாது!
இன்றைய நாள் வாழ்வின் முடிவல்ல;
ஓய்வு தோல்வி அல்ல;
இடைநிறுத்தம் ஓர் இளைப்பாறல் —
அதற்குப் பின் எழுச்சி!
முட்டி மோதுவது வியூகம் அல்ல;
பின்வாங்கி பாய்வதே விவேகம்!
மெதுவாய் செல்வதுதான் சில போரில் வெற்றி.
சிதைந்த மனம் தடுமாறுவது இயல்பு;
ஆழ்ந்து சிந்தி — சீரமை!
எதுவும் சாத்தியமே,
உயிர் இருக்கும் வரை நம்பிக்கை தழைக்கும்!
உன்னை நீயே நேசி,
உன்னை நீயே மன்னி;
உன்னை மீட்டெடுப்பது —
உனக்கே உரியது!
No comments:
Post a Comment