Tuesday, August 27, 2024

,இந்தீயாவின் மீது அமேரிக்கப் பீடீ

அமெரிக்க டீப் ஸ்டேட் என்பது பத்து தலை ராவணனில்லை. நூறு தலை ராவணன். இதை ஒரு போஸ்டில் எழுத முடியாது. அதன் விஷத்தலை.. ஜார்ஜ் சோரோஸ், அவரின் மகன் அலெக்ஸ் சோரோஸ், இப்போது இவர்களின் புதுத்தலை. சிஐஏ இவரையும் இவரின் பணபலத்தையும் நம்பி, டோனல்ட் லூ போன்ற ஆட்சி மாற்றம் செய்யும் ஆசாமிகள், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகளை, தங்களுக்கு சாதகமாக இல்லாத பட்சத்தில் மாற்ற பல தில்லாலங்கடிகளை செய்வார்கள். இப்போது ஆபரேஷன் ரிமூவ் மோதி சூடு பிடித்துவிட்டது.


இந்தியாவின் அமெரிக்க அம்பாஸிடர் கார்செட்டியின் நாட்கள் எண்ணப்பட்டு விட்டது. அங்கு கம்லா மாமி, ஜெயிக்கும் தூரத்தில் இல்லை என்பது நிதர்சனம். ஓபாமா போன்ற ஓநாய்களுக்கு, மாமி மாதிரி டம்மி பீஸ் கிடைத்தால், ஈரானை அடிக்கலாம். அமெரிக்க புது ராணுவ தளவாடங்களை ஏவி பார்க்கலாம். அமெரிக்க வரிப்பணம் இப்படி மிஸைலாக மாறும். இதில் இந்த டீப் ஸ்டேட் ஆசாமிகள் எண்ணை கிணறுகளை அள்ளுவார்கள்.. உக்ரெயினின் வளப்பமான நிலங்களை பட்டாபோட்டு விட்டார்கள். யூரோப் முழுக்க.. எதுவும் விளைக்காதீர்கள் பணம் தருகிறேன் என்று செயற்கையான பஞ்சத்தை உருவாக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள்.


இந்தியாவில்..நிழலான ஆசாமிகளை அவர்களின் வீட்டுக்கே சென்று கவனிக்கிறார்கள் அமெரிக்க அத்தான்கள். ஓவைசி முதல், விவசாயி என்கிற போர்வைக்குள் ஒளிந்திருக்கும் பெர்மனன்ட் ஃபுல் டைம் போராளிகள்.. ஓமர் அப்துல்லா வரை, சந்தித்து டூல் கிட்டுகின்றனர். பாஜகவை ஓரம்கட்டுங்கள் என்று நட்பு கட்சிகளுக்கே மிரட்டல்கள். ரெட்டிகள், நாயுடுவை நெருக்கும் நாடகம் ஆரம்பிக்கும்போல் இருக்கிறது. கமலா மாமியின் உதவி பிரஸிடன்ட் எக்ஸ்ட்ரீம் இடது. இவர்கள் ஜெயித்தால் உலகம் நாசமாகும் என்பது உறுதி.


சோரோஸின் மகன் ஹூமா அபேதீன் எனும் சவுதிவாழ் பாகிஸ்தானியை திருமணம் செய்யப்போகிறார். மர்ம நபர்கள்.. இந்த தேசத்தில் பல இடங்களில் ஏதாவது விளையாட்டை நடத்துவார்கள். அடிக்கடி ரயில் விபத்து, நேற்று ஜெய்புர் வந்தே பாரத் போகும் பாதையில் கான்க்ரீட் ஸ்லாப் வைத்த மர்ம நபர்கள் போன்ற செய்திகள் அதிகம் வரலாம்.


வாட்ஸப் என்க்ரிப்டட் என்று எதையும் எழுதலாம் என்று நினைத்தால் எல்லா கண்றாவிகளையும், எவனோ படித்துக்கொண்டிருக்கலாம். டெலக்ராம் ஸேஃப் என்று நினைக்கும்போது, அதன் தலைவரை ஃப்ரான்ஸில் கைது செய்து விட்டார்கள். அவரை பலதிலும் சிக்க வைத்து பல விஷயங்களை கறக்கும் வாய்ப்பு உண்டு. 


சோஷியல் மீடியா புயல் 8-9 மாசம் முன்பு, ஜெர்மனியில் இருந்து அரைகுறையாக அள்ளிவிடும் துருவ் ராத்திகள் உருவானார்கள்.. காரணம் DS.


இதைப்பார்த்த அரசு.. வெளிநாட்டு உறவுகளில் அடித்துவிளையாடுவது போல்.. உள் நாட்டு விவகாரங்களிலும் நிறைய பாலிஸி மாற்றங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது. வக்ஃபு முதல் அக்னிவீர் வரை.. அக்னி வீர் ஒரு டாக்டிகல் மூவ். இதை பல மூதேவிகள் எதிர்ப்பதில்கூட இந்த DS பங்கு இருக்கிறது.. 


இந்தியாவின் பிளவுக்கோடுகளை இவர்கள் மிகச்சரியாக, ஜனநாயக ஆட்சி மாற்றத்திற்கு உபயோகிப்பார்கள். பங்க்ளாதேஷ் போன்று இங்கு ஒரு சிவில் வார் வருமா என்றால் தெரியாது. ஆனால்.. மொஹப்பத் கி துகான் பல இடங்களில் விஷச்செடியை நட்டு வைத்து விட்டது. 


நாம்.. டெபாஸிட் வட்டி, இன்டக்ஸேஷன், வரி, ஜிஎஸ்டி, என்று கடுப்பில்.. சரியாக ஓட்டு போடாமல்.. ஷேத்ராடனம் போகும் நேரத்தில்.. நம் வீடு, தேசம் அனைத்தையும் மொத்தமாய் இழந்திடும் வாய்ப்பு நிறைய இருக்கிறது..

No comments:

Post a Comment