சிலநாட்கள் முன், நண்பரொருவர் இல்லத்திற்கு சென்ற வேளையில், விஜய் டி.வி யில், நிகழ்ச்சியொன்றைக் காண நேர்ந்தது.
கைத்தறிப் பட்டுச்சேலை நெசவு செய்யும் குடும்பத்தைச் சார்ந்த பெண் ஒருவர், நசிந்துவரும் கைத்தறித் தொழில் பற்றி உண்மையிலேயே நெகிழ்ச்சியான நாட்டுப்புறப் பாடலொன்றைப் பாடினார்.
விஜய் டி.வி தனக்கே உரிய பகட்டுடனும், டிராமாவுடனும் அதை ஒளிபரப்பியது! வழக்கம் போல விஐபிக்கள் வசனங்களை உதிர்த்தனர். கண்ணீர் சிந்தினர். சோக இசை ஓடியது!
இந் நிகழ்ச்சியின் நாடகங்கள் ஒரு புறமிருக்க, கைத்தறியினால் மட்டுமே, நாட்டின் துணித் தேவைகள், விரும்பும் டிசைன்கள், தேர்வுகள் அனைத்தையும் பூர்த்தி செய்வது சாத்தியமா என்ற புராதன கேள்வி எழும்பியது!
பல தொழில்கள், தொழில்நுட்ப புரட்சியின் காரணமாக வழக்கொழிந்து போயிற்று. தந்திச் சேவைஅளித்தோர், சுவர்களில் விளம்பரம் செய்வோர்/ஓவியம் வரைவோர், அச்சு கோர்ப்போர், கைத்தறி செய்வோர்...... என எண்ணற்றோர் தங்களது தொழிலைவிட்டுவிட்டு வேறு தொழில்களுக்கு தங்களை மாற்றிக் கொண்டு விட்டனர்.
விடாமல், தாங்கள் அறிந்திருக்கும் வழக்கொழிந்த தொழில்களையே புரிவோர் மீது அனுதாபம் கொள்வதா அல்லது கால ஓட்டத்திற்குத் தகுந்தாற்போல, தங்களைத் தகவமைத்துக் கொள்ளாத இவர்கள் குறித்து வருந்துவதா எனப் புரியவில்லை!
காலத்தைப் பின்னோக்கித் செலுத்துவது சாத்தியமானதல்ல; நவீனமயம் எவராலும் புறக்கணிக்கணிக்கக் கூடியதே அல்ல! வளர்ந்து வரும் மக்கள் தொகையின் பகாசுர தேவைகளை இயந்திரங்களின் துணையின்றி பூர்த்தி செய்வது சாத்தியமல்ல!
எனினும் புராதனத் தொழில் புரிவோரின் உற்பத்தியை Antique என்ற வகையில், விலை அதிகமாயினும், இயன்றவர்கள் வாங்குவது அவர்களது ஜீவனத்திற்கு உதவக் கூடும்!! கோபிநாத் மட்டுமே, சரியாக core Point ஐப் பிடித்தார்.
தொ.கா யினைப் பார்ப்பதை நிறுத்தியது தவறோ என்ன எண்ணம் அவ்வப்போது தோன்றும்! விஜயின் ஸ்டேஜ் ஷோவைப் பார்த்தபின் தொ.கா.பெ யை மூடியது தவறெனத் தோன்றவில்லை!