பொருளாதார ரீதியில் பல்வகைப்பட்ட நபர்களுக்கு ஏற்றாற் போல, சமீபகாலங்களில், முதியோர்களுக்காக, நாட்டில்
பல்வேறு இடங்களிலும், முதியோர்
/ அனாதை இல்லங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. இலவசம் முதல் ஸ்டார் அந்துஸ்துள்ள
ஹோம் வரை கிடைக்கின்றன.
சில தலைமுறைகளுக்கு முன்னர் கூட, முதியவர்கள்
ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை. மாறாக வரமாகவே இருந்தனர். குழந்தைகளுக்கு வரும்
பிணிகளுக்கான நிவாரணம் முதல், பயிர்களுக்கு வரும் நோய்வரை அவர்களிடம் ஒரு தீர்வு இருக்கும்.
குடும்ப-மத சடங்குகளிலும் கூட, வழிகாட்டிக் கொண்டிருந்தனர். கூட்டுக் குடும்ப முறை
சிதைந்தபின், முதியோர்கள், அடுத்த தலைமுறையினருகு பாராமாக மாறிவிட்டனர்.
இந்த பிரச்சினை, பொருளாதாரத்தில் உயர்தரத்தவர்களிடமும், தாழ்ந்தவர்களிடமும் இல்லை. காரணம் உங்களுக்கே தெரியும். அதிகம் பாதிக்கப்படுபவர், மத்திய தர வர்க்கத்தினர் தான். சென்டிமென்ட்களில் சிக்கிக் கொள்கின்றனர்.
இந்த தலைமுறையின் போக்கில் பார்த்தால், மத்திய வர்க்க பெரியவர்கள், இவர்களுக்கு ஒரு இம்சை. இவர்கள் சீக்கிரம் இறந்து போய்விட வேண்டும் அல்லது எங்கேயாவது கண்காணாமல் சென்றுவிட வேண்டும் என விரும்புகிறார்கள்.
நகரத்தின் இண்டு-இடுக்கு அபார்ட்மென்ட்களில், ஒரு அல்லது இரு அறைகள் கொண்ட வீடுகளில் அவர்களே, குழந்தைகளோடு நெருக்கியடித்து வாழ்ந்து கொண்டு, கன்ஸ்யூமரிஸம் வழங்கும் பல்வேறுவகையான பொருட்களால் வீட்டை நிரப்பிக்கொள்ளும் பொழுது, பெரியவர்களுக்கும், உறவுகளுக்கும் இடம் இல்லாமல் போய்விடுகிறது.
இக்காலத்தில் எந்தப் பொருளை வேண்டாம் என ஒதுக்குவீர்கள்? குழந்தைகளுக்கு தனியறை என்பது பல்வேறு காரணங்களை உத்தேசித்து, அவசியமாகிறது.
இரண்டாவது முக்கியமான இடர், தலைமுறை இடைவெளி. முன்பெல்லாம் கூட,
தலைமுறைகள் ஒரே இடத்தில் வாழ்ந்து கொண்டிருந்தனர்
தான். ஆனால் இந்த அளவு தலை முறை இடைவெளி எந்தக் காலத்திலும் இல்லை. காலை எழுந்து
முதல் - காஃபி அருந்துவதில்
துவங்கி இரவு படுக்கும் வரை, குடும்பத்தில்
எத்தனையோ நிகழ்ச்சி நிரல்கள்... அத்தனையிலும் இரு தலைமுறையினருக்கும் தீராத முரண்பாடுகள்.
இதுவே சரி... இல்லை அதுவே சரி... எவரும் விட்டுக்கொடுப்பதாகக் காணோம். இருவருக்கும் ஈகோ .
உணவு முதல், டி.வி வரை அனைத்துமே, சண்டைக்கான களமாகி விடுகிறது. எனக்குத் தெரிந்த ஒரு வீட்டில், டி.வியின் சப்தம் குறித்தே அப்பாவுக்கும் மகனுக்கும் சண்டை – தினசரி
அடுக்கு வீடுகளில், சம்பந்தமே இல்லாத ஒரு அணுகுமுறையோடு, இரு தலைமுறைகளே சேர்ந்து வாழ இயலாத நிலையில், மூன்று தலைமுறைகள் (தாத்தா பாட்டி - மகன் - பேர பேத்திகள் ) சேர்ந்து வாழ்வது மிகக் கடினம். இதைப் பெரியவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
இது குறித்து, பெரியவர்கள் இனியும் புலம்ப வேண்டியது இல்லை; சுய இரக்கம் கொள்ளவும்
தேவையில்லை! இத்தகைய
அணுகுமுறை சரியா அல்லது தவறா
என்று விவாதிக்க வேண்டாம். எப்படி இருந்தாலும் இதுதான்
எதார்த்தம். விவாதம்
சூழலை மாற்றாது; எனவே நிலைமையை ஏற்றுக்
கொள்ளுங்கள். பின்னர்
மனது தானாக சமாதானம் ஆகிவிடும்.
அரவணைக்க வேண்டியவர்களே, முதியோர்களை, அக - புறக் காரணிகளால்,
வெறுப்புடன் நோக்கும் பொழுது, முதியோர் இல்லங்களை நாடுவதில் தவறில்லை என்றுதான்
கருதுகிறேன். துரத்தப் படுவதைக் காட்டிலும் வெளியேறுவது கௌரவம் அல்லவா?
அங்கே (இல்லங்களில்), உங்கள் வயதுக்கேற்ற நன்பர்கள் கிடைக்கக் கூடும்..
ஏதோ ஒரு சாப்பாடு கிடைத்துவிடும். நல்ல ஹோம்களாக இருந்தால், மருத்துவ வசதியும்
இருக்கக் கூடும். புத்தகங்கள் இருக்கும். அங்கே தம்பதியாரகக் கூட தங்கிக்
கொள்ளலாம்.
என்போன்ற தனியாளருக்கும் அங்கே இடம் இருக்கிறது. உங்களுக்கான ‘ஸ்பேஸ்’
கிடைக்கிறது என்பது முக்கியம் அல்லவா?
குடும்பத்தில், உங்களை அனுமதித்தால் இருந்து கொள்ளுங்கள். இல்லாவிடில் உங்கள் குழந்தைகள் உங்களைத் துரத்துவதற்கு முன்னரே, அவர்கள் நிலை உணர்ந்து, காலத்தினைக் கருத்தில் கொண்டு, கௌரவமாக ஒரு நல்ல ஹோமாகத் தேடிக் கொள்வது உத்தமம்.
என்ன? அவ்வப்பொழுது உங்கள் குழந்தைகளை / பேர-பேத்திகளைப் பார்க்க வேண்டும் எனத் தோன்றலாம்.
யாதும் ஊரே .. யாவரும் கேளிர் – இதைக் கைக்கொள்ள வேண்டியதுதான்.
(சமீபத்ய நிகழ்வு ஒன்று இவ்விதம் யோசிக்கத் தூண்டியது)
Nice. Still there are lot of Joint families having elderly people well respected . It is very difficult to identify the reasons for disrespect to earlier generation. Bt Arasu.
ReplyDeleteGood suggession
ReplyDelete