Wednesday, June 13, 2012

தேவதைகள்!!




உலகத்தரத்தில், கட்டுப்படியாகும் கட்டணத்தில். சாதாரணர்களுக்கும் எளிதில் கிடைக்கும் வகையில் மருத்துவ சிகிச்சை அளிப்பதே தனது லட்சியமென, விளம்பரித்துக் கொள்ளும், சென்னையில் உள்ள, ஒரு மருத்துவமணை அது.

அந்த மருத்துவமணையில்தான், எனது மனைவி, கேன்ஸருக்காக ‘கீமோ சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்.

இது நான்காவது கீமோ தெரபி. யூஷுவலாக, எனது துணைவியாருக்கு கொடுக்கப்படும் ‘கீமோ ஆறு மணி நேரம் எடுத்துக் கொள்ளும். கீமோ சிகிச்சையளிப் பதற்கான ‘பெட் சார்ஜ், மற்றும் ‘நர்ஸிங் சார்ஜ்ஆகியவற்றை முதலிலேயே வசூலித்துக் கொண்டுவிடுவார்கள். காலை 7.30 சிகிச்சை மணிக்கு துவங்கிற்று. மதியம் 1.30 க்கு முடிய வேண்டும். இரண்டு விதமான கீமோ மருந்துகள் உடலில் ஏற்றப்பட வேண்டும். ஒன்று மூன்று மணி நேரமும், மற்றொன்று ஒரு மணி நேரமும் உடலில் ஏறும். அன்று எனக்கு சற்று அதிர்ஷ்டமில்லாத தினம் போலும். மூன்று மணி நேரம் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்து ஏறுவதற்கு முக்கால் மணி நேரம் கூடுதலாகிவிட்டது.

பொறுமையிழந்த வார்டு நர்ஸ், அதிகமாய் செலவழித்த முக்கால் மணி நேரத்தினை ஈடுகட்ட, இரண்டாவதாக செலுத்தப்பட வேண்டிய ‘கீமோ மருந்தினை ‘சொட்டு-சொட்டாக ஒரு மணி நேரத்தில் ஏற்றுவதற்கு பதிலாக, ‘சற்று வேகமாக வைத்து விட்டார். நர்ஸில் இந்த செயலால், முக்கால் மணி நேரத்திலேயே மருந்து உடலில் ஏறிவிட்டது.(இதனால், அடுத்த பேஷன்டுக்கு, இந்த ‘படுக்கையை விரைவில் ஒதுக்க முடியுமல்லவா?)  இந்த அவசரத்தினாலோ என்னவோ என்னவோ, கடைசி பதினைந்து நிமிடம் இருக்கும் போது மனைவிக்கு, தலை சுற்றலும்-பட படப்பும் ஏற்பட்டு விட்டது. அந்த நர்ஸிடம் போய்ச் சொன்னேன்!

அவரது பதில் தான் மனிதநேயத்தின் உச்ச கட்டம்! “உங்களுக்கான ‘படுக்கை நேரம் முடிந்து விட்டது! எனவே நீங்கள் உங்களது மனைவயை அழைத்துக் கொண்டுபோய், ஒரு ஓரமாக, ஒரு பிளாஸ்டிக் நாற்காலில் உட்காரவைத்துக் கொள்ளுங்கள்!

நானும் பொறுமையாக, “‘சிஸ்டர், தயவு செய்து பெஷன்டின் பல்ஸ் மற்றும் BP செக் செய்யுங்கள். தலை சுற்றுகிறது என்கிறார் என்றேன்.

அந்த சிஸ்டர், பெரிய மனது வைத்து ஒரு ‘போர்டபிள் யூனிட்டை கொண்டு வந்தார். எனது  நேரம், அது வேலை செய்யவில்லை! “பேட்டரி போயிருக்கும் என்று யூனிட்டை டயக்னஸ் செய்தார். பின் ஒருவாறு அந்த கருவியை நோண்டி உயிர்ப்பிக்க, அது பல்ஸ் 120 எனவும், BP 150/110 எனவும் காண்பித்தது.

சிஸ்டர், இந்த அப்சர்வேஷனை எனது டாக்டரிடம், இன்டர்காமில் சொல்லிவிடுங்கள் என்றேன். 

“சொல்கிறேன், முதலில் உங்களது பெட்டை காலி செய்யுங்கள். அடுத்த பேஷண்டுக்கு தேவைப்படுகிறதுஎன மறுதலித்தார்.

“இன்னும்கூட உங்களுக்கு பணம் கட்டுகிறேன். பேஷண்டால் உட்கார முடியவில்லை. ஒரு மணி நேரம் பெட்டை ஒதுக்குங்கள் என்றேன்.

எனது கோரிக்கை உடனடியாக மறுக்கப்பட்டு விட்டது!

வேறு வழி? ஒரு தூணின் ஓரமாக, நாற்காலியில், மனைவியை உட்கார வைத்தேன். அவர் அமர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் ‘கேஸ் ஷீட்டைட்’ பார்த்தேன். அதில் பல்ஸ் / BP  யாவும் நார்மல் என எழுதியிருந்தார். இந்த ரீடிங் ‘கீமோ கொடுக்கப் படுவதற்கு முன்னால் எடுக்கப்பட்டு, ரெக்கார்டு செய்யப்பட்டது.   இந்த ரீடிங்கை எடுத்தவரும் ஒரு நர்ஸ்தான். அவர் எடுக்கும்போதே BP 130/100 இருப்பதாகச் சொன்னார். ஆனால் எழுதும் போது ‘நார்மல் என எழுயுள்ளார்.

‘என்ன சிஸ்டர் இது? காலையில் எடுத்த ரீடிங்குக்கும், எழுதியதற்கும் சம்பந்தமே இல்லையே? உங்களது ரிப்போர்ட்டைப் படித்துத் தானே டாக்டர் முடிவெடுப்பார்?

“அப்படியா? மாற்றி எழுதிவிடுகிறேன்.

அட.. கடவுளே!

அதற்குள் எனது துணைவியார், தனக்கு மீண்டும் தலை சுற்றுவதாகச் சொல்லவே, நர்ஸினை விளித்து, “சிஸ்டர், தயவு செய்து டாக்டரிடம் சொல்லிவிடுங்கள். கீமோவுக்குப் பின் தான் இந்த மாதிரி இருக்கிறது. அவர் ஏதாவது சிகிச்சை அளிக்கக்கூடும்"


பேசினார்! டாக்டர் என்ன சொன்னாரோ தெரியவில்லை!

‘வார்டின் உள்ளே, கன்ஜஷனாக இருக்கும். எனவே நீங்கள் வெளியே போய் விடுங்கள். இன்னும் ஒரு மணி  நேரம் கழித்து வாருங்கள். அப்போது BP பார்க்கலாம். அப்போதும் அதிகமாக இருந்தால், நீங்களே போய் ‘எமர்ஜென்ஸியில் போய் அட்மிட் ஆகிக் கொள்ளுங்கள்

“என்ன சிஸ்டர் இது? மனசாட்சியே இல்லையா?  நீங்கள் சிகிச்சையளிக்கும் போதுதானே, பிரச்சினை ஏற்பட்டது? எதற்காக வெளியே போகச் சொல்கிறீர்கள். எங்கு போவது?கொஞ்ச நேரம் ‘பெட்டையூஸ் செய்துகொள்கிறோமே?

‘சாரி.. பெட் காலி இல்லை.. நீங்கள் ஒரு மணி நேரம் கழித்து வாருங்கள். அப்போதும் தலை சுற்றல் இருந்தால், எமர்ஜென்ஸியில் போய்ச் சேர்ந்து கொள்ளுங்கள்

அந்த மருத்துவ மணையில் ‘எமர்ஜென்ஸி அட்மிஷன் என்றால் என்று எனக்குத் தெரியும்.  முதலில் ஒரு கனிசமான தொகையைக் கட்டினால்தான், பேஷன்டையே தொடுவார்கள்.

மனைவியை வெளியே அழைத்துக் கொண்டு வந்தேன். ஒரு ஓரமாக அமரவைத்துவிட்டு, ‘சீராக மூச்சு விட்டுக் கொண்டு, மனதிற்குள் ‘ஓம்..சாந்தி... ஓம் சாந்தி என சொல்லிக் கொண்டு, மனதை அமைதியாக வைத்துக்கொள் என்றேன்.

ஒரு மணி நேர தியானம் முடிந்து, உள்ளே அழைத்துச் சென்று BP பார்த்தபோது 130/100 என இருந்தது!

‘போதும்டா சாமி.. என கடலூர் வந்து சேர்ந்தோம்.

எனது கேள்விகளெல்லாம்:

-உங்களது மருத்துவ மணையில், உங்கள் பார்மஸியிலேயே வாங்கிய மருந்தினை, உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படிதானே, பணம் செலுத்தி சிகிச்சை பெறுகிறோம்? ஏதாவது காம்ளிகேஷன் ஏற்பட்டால் நீங்கள் எந்த விதத்திலும் பொறுப்பில்லையா? அன்று ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருந்தால் கூட உங்களுக்கு ஏதும் பொறுப்பு இல்லை, அப்படித்தானே?

-மிக முக்கியமான, எதிர்விளைவுகள் நடக்கக் கூடிய ‘கீமோ வார்டில் கூட ஒரு ‘பொறுப்பு (In-charge)  டாக்டர் போட மாட்டீர்களா?

-பேஷண்டின் நிலைமை தடுமாறுகிறது எனத் தெரிந்தும், அவரை வெளியேற்றிவிட துடியாய்த் துடிக்கிறீகளே ஏன்?

-சேவை, கனிவு, உலகத்தரம் என விளம்பரிப்பதெல்லாம் பேனரில் எழுதிக்கொள்ள மட்டும் தானா? நடைமுறையில் ‘காசு பார்பதுமட்டும் தான் குறிக்கோளா?

-நீங்கள் ஆஸ்பத்திரி என்ற பெயரில் நடத்துவது, நல்ல இலாபம் தரும் ஒரு தொழில்தான். நடத்துங்கள்! அதில் கடுகளவாவது ‘கருணையும் ‘மனிதமும் கொண்டு செயல்படுங்கள்!

6 comments:

  1. படிக்க அதிர்ச்சியாய் இருந்தது
    பணம் தின்னிப் பேய்கள்
    மருத்துவத் துறை சேவைத் துறையைச் சார்ந்தது எனச்
    சொல்வதெல்லாம் பெரும் பித்தலாட்டமே
    அது வியாபாரமாகி வெகு நாளாகிவிட்டது
    பூனைக்கு எப்படி மணி கட்டுவது ?

    ReplyDelete
  2. Sathyameva Jayathe... If you find time please read:
    http://orbekv.blogspot.in/2012/05/blog-post_30.html
    Thank U

    ReplyDelete
  3. சேவை மனப்பான்மையுடன் இந்த பணிக்கு வர வேண்டியவர்களே இப்படி நடந்துக்கொள்வது வருத்தமளிக்கிறது.

    ReplyDelete
  4. So sad!. You might have drawn attention, by making a scene there and make them realise what they are doing is wrong. Would that have helped? May be writing a letter to the hospital / concerned doctor, could atleast change their attitude.

    ReplyDelete
  5. முதலில் உங்கள் மனைவி நலமடைய இறைவனிடம் வேண்டுகிறேன்,

    சேவை செய்யும் பணியில் இருந்து கொண்டு பணம் பணம் என்று னைப் போல் நாக்கைத் தொங்கப் போடும் ஜாதி இருக்கும் வரை நமக்கு விடுவு களம் ஒரு போதும் கிடைக்காது, என்ன ஒரு கேவலமான கீழ்த்தரமான செயல், அவள் குடும்பத்தில் ஒருவருக்கு இப்படி என்றால் சும்மா இருப்பாளா. மனிதாபிமானமற்ற ஜென்மங்கள்

    ReplyDelete
  6. மிகவும் வருத்தம் தரும் அனுபவங்கள். என்றாலும், இதெல்லாம் மருத்துவத் துறையில் சகஜமாகிவிட்டது என்பதால், பதற்றமோ, அதிர்ச்சியோ தரவில்லை. நீங்கள் எழுதியுள்ள ”கொண்டு வந்தான் ஒரு தோண்டி.....” கதைதான் ஞாபகத்திற்கு வருகிறது. இறைவன் எல்லாரையும் பாதுகாக்கட்டும்.

    ReplyDelete