Friday, February 4, 2011

அநித்யம்.


நேற்று எனது பின் வீட்டுக்காரர் காலமானார். வாழ்வின் அநித்யம் ஒன்றும் புதிய 
விஷயமில்லை. பிறந்த கணம் முதற்கொண்டே இறப்பை நோக்கிய பயனம் தான். 
இறப்புத் தேதி தெரிந்து விட்டால் அதைப்போல நரகம் வேறோன்றுமில்லைதான்.  


ஆயினும் காலையில் ஆரோக்கியமாக என்னுடன் பேசிக் கொண்டிருந்த மனிதர்
மதியம் மறைந்தார் என்பது திடுக்கிட வைக்கிறது.


இறப்பிற்கு 10 நொடிகள் முன்வரை கலகலப்பாக பேசிக்கொண்டு, வேலை 
செய்துகொண்டிருந்தாராம். நொடியில் மரணம் சம்பவித்து விட்டது.  வாழ்வின் 
"நிச்சயமான அநித்யம்"   நேராக முகத்திற்கெதிரே வந்து நிற்கும்போது - 'மனித 
வாழ்வு' எவ்வளவு அற்பமானதாகத் தெரிகிறது?


இவை யாவும் தெரிந்தும் நாம் "விட்டேனா பார்",  "வெட்டி வீழ்த்து அவனை" 
என்ற சூளுரைகளை விடுவதாக இல்லை. தனி மனிதனுக்கும் - ஏன் நாட்டிற்கும் 
கூட இது பொருந்தும்!


'யக்ஞ ப்ரஷ்னத்தில்" யக்ஷன் கேள்வி கேட்டானாம்..."உலகில் ஆச்சரியமானது 
எது?" "நிதமும் மனிதன் மடிந்து கொண்டே இருக்கிறான்.. அதை பார்த்துக்
கொண்டேயும் இருக்கிறான். ஆனாலும் தான் மட்டும் சாசுவதமாக இருப்பது போல 
பாவித்து கொண்டு நடந்து கொள்கிறானே அது தான் ஆச்சரியம"  என தர்மர் 
பதிலளித்தாராம்.



1 comment:

  1. சார்,
    இதில் ஆச்சர்யபட் ஒன்றும் இல்லை. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் 'என் வாழ் நாள் முடிவதற்குள் என்னென்ன முடியுமோ, அவ்வளவையும் அனுபவிக்க வேண்டும்' என்ற உந்துதல் இருக்கிறது. அதனாலேயே அவன் எதற்கும் துணிகின்றான். "எல்லோரும் ராமராக இருந்தால், ராமருக்கு ஏது மதிப்பு"

    ReplyDelete