சமூக நலத்திட்டங்கள் மக்களுக்கு தேவைதான். ஆனால் எந்த அளவு என்பது, அந்த நாட்டின் எதிர்காலத்தையும், மக்களின் மனோபாவத்தையும் தீர்மாணிக்கும்.
இலவசம் ஒரு போதை! கம்யூனிசம் ஒரு போதை! சில வருடங்களுக்கு எல்லாம் நலமாகத்தான் - சுகமாகத்தான் இருக்கும். இறுதியில் பெரும் சரிவைவும் வீழ்ச்சியடையும் சந்தித்தாக வேண்டும். சரித்திரம், பல வெட்டி-வீராவேச முழக்கங்களின் பின்னே சென்று , முட்டுச் சந்தில் மோதிக் கொண்ட வரலாற்றை சந்தித்திருக்கிறது.
நேற்று வெனிசுவேலா!
உலகிலேயே இலவசங்களால் அழிந்த நாடுகளில் முதன்மையானது வெனிசுவெலாதான். அந்த அளவிற்கு இலவசங்கள் அங்கு அதிகம்.
வெனிசுவெலா சாதாரணமான நாடில்லை. உலகிலேயே பெட்ரோலிய வளத்தில் முதலிடத்தில் இருக்கும் நாடு. சவூதி அரேபியாவைவிடவும் அதிகமான எண்ணெய் அங்கு இருக்கிறது. அங்கிருக்கும் எண்ணெய் வயல்கள் அனைத்தும் அமெரிக்கர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. எண்ணெய் விற்றுக் கிடைத்த பணத்தைக் கொண்டு வெனிசுவேலா கொழித்தது. அதன் அருகாமை நாடுகள் அனைத்தும் பொறாமைப்படும்படியான வாழ்க்கையை வெனிசுவெலா மக்கள் வாழ்ந்தார்கள். அப்படி வாழ்ந்த காலத்தில் தங்களது அண்டை நாட்டு எழை, எளிய நாடுகளை சாதாரண வெனிசுவெலாக் குடிமகன் கேலி செய்து வாழ்ந்தான்.
இப்படிச் சென்று கொண்டிருந்த வாழ்க்கை ஹ்யூகோ ச்சாவேஸ் என்கிற மூடனின் மூலமாகக் கீழே சரிந்தது. வெனிசுவேலா அதிபராகப் பதவியேற்ற ச்சாவேஸ், தன்னை ஒரு "பொதுவுடமைவாதியாக'க் கருதிக் கொண்டார். வெனிசுவேலாவிலிருந்து அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் விரட்டியடிக்கப்பட்டன. அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டது. அந்த நாட்டுக் குடிமக்களுக்கு அனைத்தும் இலவசமாக வழங்க உத்தரவிட்டார் ச்சாவேஸ்.
ஆரம்பத்தில் எல்லாம் நல்லபடியாகவே நடந்து கொண்டிருந்தது. ஆனால் எண்ணெய் எடுக்கும் கருவிகளை இயக்கும் அளவிற்கு டெக்னிகல் சமாச்சாரங்கள் வெனிசுலாவின் மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. எண்ணெய் உற்பத்தி குறைய ஆரம்பித்தது. இதன் காரணமாக கஜானாவில் இருந்த பணம் கரைய ஆரம்பித்தது.
எந்த வேலையும் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருந்த வெனிசுவெலா மக்களுக்கு உலகின் அத்தனை பகுதியிலிருக்கும் உயர்தரமான பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. இதன் காரணமாக எவனும் எந்தவேலையும் செய்யவில்லை. விவசாயிகள் விவசாயம் செய்வதைக் கைவிட்டார்கள். இதையேதான் பிற தொழில் செய்பவர்களும் செய்தார்கள். விவசாயம் அழிந்தது. உள் நாட்டுத் தொழில்கள் நசிந்தன.
எனவே அரிசியிலிருந்து எல்லாப் பொருட்களும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் நிலைக்கு ஆளானது. எண்ணெய் எடுப்பது நின்றுபோனது. அதற்கும் மேலாக அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை இட்டு நிலைமையை மோசமாக்கியது.
இதற்கிடையே, இதற்கெல்லாம் காரணமான கோமாளி ஹ்யூகோ ச்சாவேஸ் கேன்சரால் இறந்தார்.
அவருக்குப் பின்னர் அவரது நண்பர் மடூரோ அதிபரானார். காரகாஸ் நகரில் பஸ் ட்ரைவராகப் பணிபுரிந்தவர் இந்த மடூரோ. எந்தவிதமான நிர்வாகத் திறமையும் இல்லாத மடூரோ, வெனிசுலாவை இரும்புக்கரம் கொண்டு சர்வாதிகாரியாக ஆட்சி செய்தார். பணமில்லாததால் இலவசங்கள் நின்றுபோயின. நேற்றுவரையில் சுகபோக வாழ்க்கையில் திளைத்த வெனிசுவெலா மக்களை பஞ்சமும், பட்டினியும் சூழ்ந்தன. அதிலிருந்து இன்றுவரையில் அவர்களால் வெளிவர இயலவில்லை.
இலவசங்கள் முற்றிலும் நின்றுபோயின.
இந்தத் தகவல்களையெல்லாம் பெரும்பாலோர் அறிந்தேயிருப்பார்கள் என்றாலும், வெனிசுவெலா நமக்கெல்லாம் ஒரு பாடம்.
நேற்றைக்கு அமெரிக்கா அதிரடியாக வெனிசுவெலாவைத் தாக்கி மடூரோவையும், அவர் மனைவியையும் கைது செய்து அமெரிக்காவிற்குக் கொண்டு சென்றிருக்கிறது. அதன் நோக்கம் என்னவென்பதனைவிளக்கத் தேவையில்லை. இனி வெனிசுவெலா அமெரிக்காவின் அடிமை நாடு.
சோவியத் சீட்டுக் கட்டு வீழ்ந்த கதை நினைவிருக்கும்.
நம் நாட்டை , இலவசம் என்னும் ஒட்டுண்ணி மெல்ல மெல்ல அரித்துக் கொண்டிருக்கிறது.
கட்சி அரசியல் போட்டி காரணமாக, சகட்டு மேணிக்கு இலவசம் எனும் வியாதி, பிஜேபியையும் விட்டு வைக்க வில்லை. மாதம் 2000₹ free. பெண்களுக்கு பேருந்து பயணம் free. பொங்கலுக்கு 3000₹ free. மின்சாரம் free (100 to 200 units)
மக்களுக்கு தரமாகக் கிடைக்க வேண்டிய கல்வி, மருத்துவம் சாலை போன்றவைகள் மெல்ல மெல்ல விற்பனைப் பொருட்களா மாறத்துவங்கி விட்டன.
சங்கம் உழைப்பைத்தான் போற்றுகிறது. "தானங்களை" மட்டுமே அல்ல! அது ஒரு பகுதி! அவ்வளவே!!
மோகன் பகவத்ஜி சொல்கிறார்:
Don't try to understand the ideology of RSS through the BJP or VHP; they work independently and are not remote controlled by the Sangh”
Attempting to understand the RSS through its affiliated organisations were making a fundamental mistake.



















