Showing posts with label ஆர்.ஆர் பக்கங்கள். Show all posts
Showing posts with label ஆர்.ஆர் பக்கங்கள். Show all posts

Tuesday, May 5, 2015

திருவதிகை


கடலூரை அடுத்த திருவதிகை என்ற இடத்தில் இருக்கும் பழமையான, மிகப் பிரம்மாண்டமான கோயில் வீரட்டேஸ்வரர் கோயில். இறைவி பெயர் திரிபுர சுந்தரி.  எட்டு வீரட்டத் தலங்களுள் ஒன்று. திரிபுரம் எரித்த இடம்.

16 பட்டைகளுடன்  கூடிய, மிகப் பெரிய மூலவர் (சிவலிங்கம்).  பெரிய குளம். மிக விஸ்தாரமான கோயில்.  ராஜகோபுரதிலும், அதனருகே உள்ள மண்டபத்திலும் ஏராளமான நயமிக்க சிற்பங்கள்.

கோயிலின் கோபுர அமைப்பே மிக வித்தியாசமானது. கோபுரத்தின் அடிப்பகுதியிலிருந்தே, சிற்பங்கள். கர்ப்பக்கிருஹ கோபுரம் பார்ப்பதற்கு மிக அழகாக, ஒரு தேர் போல இருக்கும். சரக்கொன்றை தலவிருட்சம். திருஞான சம்பந்தருக்கு  நடனம் காட்டிய இடம்.
அப்பரின் சகோதரி திலகவதி கோயில் தொண்டு செய்த இடம். திலவதிக்கும் சன்னதி உள்ளது.

ஈசன், நோய் தீர்த்து, ‘மருள்நீக்கி’ என்ற இயற்பெயர் கொண்ட அப்பரை சைவத்திற்கு மாற்றிய இடம். 

இத்தலத்தை மிதிக்க அஞ்சி, தன் கால் அங்கு படக்கூடாது என்பதற்காக ‘சுந்தரர்’ இங்கே நுழைய வில்லையாம்.

கோயிலின் அருகே, கெடிலம்   நதிக் கரையில் சுப்ரமனியத் தம்பிரானுக்கும்-சிவஞானத்தம்பிரானுக்கும் கோயில் இருக்கிறது. இவ்விருவரும் இக்கோயிலுக்கு வாழ் நாள் முழுவதும் கைங்கர்யம் செய்தவர்கள். பார்க்க வேண்டிய கோயில்.


அருகே, திரிபுரம் எரித்த பொழுது, வில்லெடுத்துக் கொடுத்த ‘சர நாராயணப் பெருமாள்’ கோயில் உள்ளது. அலங்காரப்பிரியர் ஆயிற்றே, அழகைத் தனியாக சொல்ல வேண்டுமா?

ராஜ கோபுரம் 

நுழை வாயிலில் இருக்கும் புத்தர் 



வித்தியாசமான சிவா லிங்கம் 

கர்ப்பக்ரஹா கோபுரம் 

சார நாராயணப் பெருமாள் (இது தனிக் கோயில்)


வீரட்டேஸ்வரர் கோயில் உட் கோபுரம் 
வீரடேஸ்வரர் கோயில் குளம்.

Wednesday, January 11, 2012

நான்கு மனைவிகள்


சிறார்களுக்கு (17)
(பெரியவர்களுக்கும் கூட)

பணக்கார வியாபாரி ஒருவருக்கு,  நான்கு மனைவிகள். 

அதில் நான்காவது மனைவியை மிகவும் நேசித்தான். அவளுக்கு விலை உயர்ந்த ஆபரணங்களையும், ஆடைகளையும் அணிவித்து அழகு பார்த்தான். எல்லாவற்றில்லும் சிறந்ததை அவளுக்குத்தான் வழங்குவான்.

மூன்றாவது மனைவி மிகவும் வனப்புள்ளவள். தனது  நன்பர்களிடம், தனது இந்த அழகான மனைவி பற்றி, பீற்றிக் கொள்வான். ஆனாலும், எங்கே அவள் தன்னைவிட்டு ஓடிவிடுவாளோ என அச்சப் பட்டுக்கொண்டே இருப்பான்.

இரண்டாவது மனைவி மிகவும் நம்பிக்கையானவள். புத்திசாலியும் கூட. இவனுக்கு பிரச்சினை வரும்போதெல்லாம், தீர்வுக்கு இவளைத்தான் நாடுவான்.


முதல் மனைவி, இவனுக்கு பூரண விசுவாசி. வீட்டை பராமரிப்பதிலும், குடும்பத்திற்காக உழைப்பதிலுமே இவளது நேரம் கழியும். ஆனால், இவளைக் கண்டால் வியாபாரிக்கு பிடிக்கவே பிடிக்காது.  இவளைப் பற்றி எந்த அக்கறையும் கொள்ள மாட்டான்.


ஒரு நாள் வியாபாரி, நோயில் விழுந்தான். மரணம் நெருங்குவது தெரிந்துவிட்டது. தனியாக சாவதற்கு அச்சப்பட்டான். நான்காவது மனைவியைக் கூப்பிட்டு, “அன்பே,  நான் இறந்துவிடுவேன். வாழும்போது, உன்னை எவ்வளவு சிறப்பாக கவனித்துக் கொண்டேன்? நான் இறக்கும் போது என்னுடன் இறக்கத் தயாரா?” என வினவினான். ஒரே வரியில் பதில் கிடைத்த்து. ‘முடியவே முடியாது!’ இந்தபதில், அவனுள் கத்திபோல இறங்கியது.


மூன்றாவது அழகு மனைவியை கேட்டான்.  ‘முடியாது! நீ செத்தால், நான் வேறு ஒருவனை மணந்து கொள்வேன். வாழ்க்கையை அனுபவிப்பதை விட்டு, உன்னோடு சாக முடியாது” என்றாள். விதிர்ந்து போனான் வியாபாரி.


இரண்டாவது மனைவியிடம், ‘நீ எப்போதும் எனக்கு உதவியிருக் கிறாய். இப்போதும் அவ்விதம் உதவ முடியுமா? என்னோடு இறக்கத்தயாரா?” என்றான். ‘இந்த முறை அவ்விதம் உதவ முடியாது! வேண்டுமானல் சுடுகாடு வரை வருகிறேன்; அவ்வளவுதான்” என்றாள். இந்த பதில் இடி போல தாக்கியது அவனை.


அப்போது ஒரு குரல் “நான் உன்னைவிட்டு, என்றும்  அகல மாட்டேன். நீ எங்கு சென்றாலும் வருவேன்” என்றது. நிமிர்ந்து பார்த்தான், எலும்பும் தோலுமாய், வற்றலாக நின்று கொண்டிருந்தாள், முதல் மனைவி! இவ்வளவு அன்பான மனைவியை, உடல் நன்றாக இருக்கும் போது,  மிக நன்றாக கவணித்துக் கொள்ளாமல், வெறுத்துக் கிடந்தேனே? என மிகவும் வருத்தமுற்றான் வியாபாரி.

உண்மையில்,  நாம் அனைவருக்குமே நான்கு மனைவிகள் உள்ளனர். நாம் விவரித்த நான்காவது மனைவி, நமது ‘உடல்’.  என்னதான் அலங்கரித்து வைத்தாலும், இறந்தபின் நம்மைவிட்டு விலகிவிடும். உபயோகப்படாது!


மூன்றாவது மனைவி? அதுதான் நமது செல்வம். இறந்தபின் வேறு ஒருவரை நாடிச் சென்றுவிடும்.


இரண்டாவது மனைவி, நமது சுற்றமும் நட்பும். எவ்வளவுதான் நமக்கு உதவி யிருந்தாலும், சுடுகாடு வரைதான் வரமுடியும்.


முதல் மனைவிதான் நமது ஆன்மா!  வாழும்போது புலன் இன்பத்திலும், பொருளைத் தேடு வதிலும், உறவுகளைத்  நாடுவதிலும் நேரத்தை செலவிட்டு விட்டு, உதாசீனப்படுத்திய முதல் மனைவி.


============================================================================
 நீதி:  ஆன்மா மட்டுமே உடன் வருவது! அதுவேதான் நாம்.
       மற்றவை அல்ல! எனவே மரணம் வரை காத்திராமல், 
       இப்பொழுதே ஆன்ம வளர்ச்சிக்கு தேவையானதை செய்து 
       விடுவதே நல்லது.
============================================================================

Saturday, December 24, 2011

சிறார்களுக்கு (16)


ஆயுத பூஜை (16) 

அது ஒரு அலுவலகம். மறுநாள் ஆயுத பூஜை. ஆயுத பூஜையைக் கொண்டாடுவதற்காக, ஒரு மீட்டிங் போட்டார்கள். அலுவலகர்கள் யாவரும் மிகவும் ஊற்சாகத்துடன், ஆளுக்கு ஒரு வேலையினை ஏற்றுக் கொண்டனர்.

ஒருவர், தான் 'சரஸ்வதி' படத்தினை அளிப்பதாகச் சொன்னார். மற்றொருவர் 'சர்க்கரைப்பொங்கல்' கொண்டுவருவதாகச் சொன்னார். மற்றோருவர் 'சுண்டல்', இன்னொருவர் அலுவலகத்தை சுத்தம் செய்வதாகச் சொன்னார். மற்றும் ஒருவர் அலுவலகத்தை அலங்காரம் செய்வதாகச் சொன்னார்.

அந்த அலுவகலத்தில், ‘சோனாசலம்’ என்று ஒருவர் இருந்தார். எங்கே மீட்டிங்கில் இருந்தால் தானும் ஏதாவது செய்ய வேண்டிவருமோ என அச்சம் எழுந்தது அவருக்கு!. மீட்டிங்கிலிருந்து ‘நைசாக’  நழுவினார்.

மறுநாள் ஆயுத பூஜை! ஆளுக்கு ஒன்றாக பங்களிப்பு இருந்ததால் பூஜை மிகச் சிறப்பாக நடந்தது. பூஜையின் முடிவில் அனவருக்கும் பிரசாத ‘பாக்கட்டுகள்’ அளிக்கப்பட்டன.  அனைவரும் மிக்க மகிழ்ச்கியுடன் பாக்கட்டுகளைப் பெற்றுக்கொள்ள, நமது ‘சோனாசலம்’ பாக்கட்டை வாங்கிக் கொள்ளும் போது தலை குனிந்தவாறு, சற்று ‘வழிந்தபடி தான்’ வாங்கிக் கொள்ள முடிந்தது.

நீதி: எவர் பங்களிப்பு செய்வதில்லையோ, அவர் பங்கு பெறுவதிலும், தானாகவே, உரிமையற்றவராகிறார். கடமையைச் செய்யாதவர்கள், உரிமைகளைக் கோருவதிலும்,  தயங்கத்தான் நேரிடும்.



Thursday, December 22, 2011

சிறார்களுக்கு (14)


14.திரும்பத் திரும்ப......

தியாகு என்று ஒருவர். அவர், எந்த நேரமும் தனக்கு தீங்கு செய்தவர் களைப்பற்றியே, நினைத்து நினைத்து மருகிக் கொண்டிருப்பார். அவர் இப்படி எனக்கு தீங்கிழைத்தார்; இவர் எனக்கு இப்படி தீங்கிழைத்தார் என பார்ப்பவர்களிடமெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பார். அப்படியும், மனம் நிம்மதி அடையவில்லை!

ஒரு நாள், அவர், ஒரு அறிஞரை சந்திக்க நேர்ந்தது! அவரிடமும் போய், தனது உறவினர்கள், தனக்கு தீங்கிழைத்த கதையினை விபரமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்!

தியாகுவை, ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றார் அந்த அறிஞர். “உனக்கு பிடிக்கவே பிடிக்காத சினிமாவின் பெயர் ஒன்று சொல்” என்றார்.  தியாகுவும் சொன்னார்.

உடனே, அந்த அறிஞர், அந்த சி.டி யை வரவழைத்து, DVD பிளேயரை 'ஆன்' செய்துவிட்டு, ரூமின் கதவுகளை வெளிப்புறமாகத் தாளிட்டுவிட்டு, இந்த சினிமா முழுவதையும் பார் என்றார். சொல்பவர் அறிஞர் ஆயிற்றே? மறுக்காமல் மூன்று மணி நேரம் சங்கடத்துடன், நெளிந்தவாறே உட்கார்ந்து பார்த்தார்!  படம் முடிந்தது! உள்ளே வந்தார் அறிஞர். அதே சி.டி யைப் போட்டு,  மீண்டும் அந்த சினிமாவைப் பார் என்று சொல்லிவிட்டு, கதவை தாளிட்டுக் கொண்டு சென்று விட்டார். இந்த முறை தாங்கமாட்டாத சலிப்புடன் அதைப் பார்த்தார். அறிஞர் விடவில்லை! முன்றாம் முறையாக, மீண்டும் பார் என்றார்.

வெகுண்டெழுந்தார் தியாகு! “பைத்தியமா நீ? இந்த பாடாவதிப் படத்தை ஒரு முறை பார்ப்பதே தண்டனை! மூன்று முறை பார்ப்பதற்கு நான் என்ன கிறுக்கா? நீர் அறிஞரே அல்ல; சரியான மூடன்” என சீறிப் பாய்ந்தார்.

சிரித்தவாரே கேட்டார், அறிஞர். “நீ பார்த்தது சினிமாதானே?

“ஆம்”

“அதில் நடந்தது நிஜம் அல்லவே?”

“இல்லவே இல்லை!”

“இந்த சினிமா உன்னை, உண்மையாக கொடுமைப் படுத்தியதா?”

“நிஜமாக இல்லை தான்! அதற்காக ஒரு மோசமான சினிமாவை எதற்காக திரும்ப திரும்ப பார்க்கவேண்டும்? அது என்னை கோபமுற வைக்கிறதே?”

“உனக்கு பிடிக்காத ஒரு பிம்பத்தை, மூன்று முறை திரும்ப திரும்ப பார்ப்பதே உனக்கு கிறுக்குத் தனமாகத் தோன்றுகிறதல்லவா?”

“வேறு எப்படித் தோன்றும்? இது சரியான பைத்தியக்காரத்தனம் தான்!”

"ஆனால், நீ உனக்குப் பிடிக்காத நினைவுகளை (உனக்கு கெடுதல் செய்தவர்களின் நினைவுகளை) மட்டும் எதற்காக தினமும் மனதில்,திரும்ப திரும்ப போட்டு பார்த்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாய் ?”

தியாகுவிற்கு சட்டென்று எல்லாம் புரிந்தது!







“உண்மைதான்! வேண்டாத நினைவுகளை ரிவைண்ட் செய்து, ரிவைண்ட் செய்து பார்ப்பதினால் என் மன நிம்மதிதான் கெடுகிறது! இந்த கணமே அவைகளை தூக்கி எறிந்தேன் என கூறிவிட்டு, மகிழ்ச்சியுடன் வெளியேறினார் தியாகு!

========================================================================
நீதி:  உனக்கு கெடுதல் செய்தவர்களை மற! அந்த நினைவுகளினால்
      பலனொன்றும் இல்லை! உன் மன நிம்மதியை இழப்பதைத் தவிர!
========================================================================



Tuesday, December 20, 2011

சிறார்களுக்கு (13)


 ஊதியத்தின் அருமை எதில்?


செல்வம், ஒரு நூறு சத சோம்பேறி! ஏதோ ஒரு டிகிரியை முடித்துவிட்டு, வீட்டில் சோம்பியிருக்கிறான்.

Sunday, December 4, 2011

சிறார்களுக்கு (4)


4.  சிங்கம்

வழிப்போக்கன் ஒருவன் காட்டின் வழியே சென்று கொண்டிருந்

Saturday, December 3, 2011

சிறார்களுக்காக (3)


                                          செருப்பு

ஒரு இளம் பெற்றோர்.   அவர்களுக்கு,  இரண்டு வயதில் ஒரே பெண் குழந்தை.

Thursday, December 1, 2011