7. செல்வியும்
கொய்யாப்பழமும்
செல்வத்திற்கு ஒரு
கொய்யாப் பழத்தோட்டம் இருக்கிறது. ஒரு சமயம் தன்னுடைய பழத்தோட்டத்திற்கு தன் மகள்
செல்வியுடன் சென்றிருந்தார். தோட்டத்தில் எக்கச்சக்கமாய் பழங்கள் பழுத்துத்
தொங்கின. தோட்டமெங்கும், ஏராளமான் அணில்களும், பறவைகளும் பழங்களைத் தின்றுகொண்டு விளையாடிக்
கொண்டிருந்தன. செல்விக்கு அந்த
அணில்களையும் பறவைகளையும் காணக் காண மிகுந்த குதூகலமடைந்தாள்.
“அப்பா, இந்த
அணில்களும் பறவைகளும், நம் தோட்ட்த்தில்தான் எப்போ தும் இருக்குமா?”
“இல்லை செல்வி,
நாளை இப்பழங்களையெல்லாம் பறிக்க சந்தையி லிருந்து ஒருவர் வருவார். அவர் இவற்றையெல்லாம் பறித்துக்
கொண்டு, நமக்கு நிறைய பணம் தருவார்”
“பழம் எல்லாம்
பறித்துவிட்டால், இந்த அணில்கள் வேறு இடத்திற்குப் போய் விடுமா அப்பா?”
“ஆமாம் செல்வி! பழம்
இல்லையென்றால் எதற்காக அணில்கள் இங்கு இருக்க வேண்டும்?”
செல்வி
பெருங்குரலெடுத்து ஓலமிட ஆரம்பித்தாள். “வேண்டாம் அப்பா, பழங்களைப் பறிக்கச்
சொல்லாதீர்கள். எனக்கு அணில்களை பார்ப்பதற்கு ஆசையாய் இருக்கிறது”
செல்வம் என்ன
சொல்லியும், செல்வி சமாதானம் ஆகவில்லை. அடுத்த நாள் வரை அழுது கொண்டே இருந்தாள்.
செல்வத்திற்கு அவளிடம் எப்படிச் சொல்லி புரியவைப்பது என விளங்கவில்லை. அப்போது
அந்த சந்தை வியாபாரி வந்தார்.
அவன் சொன்னான். செல்வி
நீ வருத்தப் படாதே! உச்சாணிக் கொம்பில் இருக்கும் பழங்களையும், அணில் கடித்த
பழங்களையும் பறிக்க மாட்டேன். அவைகளை உன்னுடைய அணில்களும்,
பறவைகளும் சாப்பிடலாம். அவை எங்கேயும் போகாமல் இங்கேயே இருக்கும்! நீ சந்தோஷமாக
அவைகளுடன் விளையாடலாம் என்றான்.
=============================================================
நீதி: எல்லாப்
பிரச்சினைகளுக்கும், எல்லோரும் மகிழும்படியான, அல்லதௌ ஒரு சமரசமான ஒரு தீர்வு ஒன்று உண்டு! அதைத் தேடிக் கண்டுபிடி.
=============================================================
No comments:
Post a Comment