1. உண்மையை விதையுங்கள்
இவர் குழந்தைகளுக்காக சிறு-சிறு கதைகளை, கட்டுரைகளைச் சொல்ல விரும்புகிறார். அவரது உருவாக்கங்களை, இந்த வலைப்பூவினில், அவரது பங்களிப்பு இருக்கும் வரை, தொடர்ந்து வெளியிட, மகிழ்ச்சியுடன் சம்மதித்திருக்கிறேன். கருத்து அவருடையது, நடை எனது.
திரு. ஆர். ராஜேந்திரன் என்னும் ஆர்.ஆர்., கடலூர் நகராட்சி,
மேல் நிலைப்பள்ளியில், உதவித் தலைமை ஆசிரியர். பெரியவர்களிடம் மன்றாடு வதைவிட,
சிறார்களை வளைப்பது சுலபம் என்கிறார்.
நல்ல விஷயங்களை, சிறுவர்களிடம் இப்போது விதைத்து வைத்தால், நூற்றில்
ஒருவரது மனதிலாவது அது தங்கி, எதிர்காலத்தில் நல்ல குடிமகனாக உருவாகலாம் என
நம்புகிறார்.
இவர் குழந்தைகளுக்காக சிறு-சிறு கதைகளை, கட்டுரைகளைச் சொல்ல விரும்புகிறார். அவரது உருவாக்கங்களை, இந்த வலைப்பூவினில், அவரது பங்களிப்பு இருக்கும் வரை, தொடர்ந்து வெளியிட, மகிழ்ச்சியுடன் சம்மதித்திருக்கிறேன். கருத்து அவருடையது, நடை எனது.
========================================================================
மன்னனுக்கு வாரிசு இல்லை. எனவே
குடிமக்களிடமிருந்து அரசனைத் தேர்தெடுக்க முடிவு செய்தான் அரசன். கல்வியிலும்,
அறிவிலும், வீரத்திலும் சிறந்த 100 பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம், ஆளுக்கு
ஒன்றாக, ஒரு விதையினைக் கொடுத்தான்.
இவ் விதையினை தொட்டியிலிட்டு
வளர்த்து, ஆறு மாதம் கழித்து அரசவைக்கு கொண்டுவந்து காண்பிக்க வேண்டும். எவரது
செடி நன்றாக, செழிப்பாக வளர்ந்துள்ளதோ அவருக்கே அரச பதிவி என அறிவித்தான்.
ஆறு மாதம் கழித்து, ஒரு குறிப்பிட்ட
நாளில், அனைவரும் தாங்ள் வளர்த்த செடியினை அரசருக்கு கொண்டுவந்து காண்பித்தனர். மன்னர்
அனவரது செடிகளையும் பார்வையிட்டார். எல்லா செடிகளும் மிகவும் செழிப்பாக
வளர்ந்திருந்தது. “யாருக்கு அரச பதவியைக் கொடுப்பார் மன்னர்” என மந்திரிகள்
யோசித்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் ஒருவரது தொட்டியில்
மட்டும் செடி முளைக்கவே இல்லை. அவர் சொன்னார்: “அரசே தாங்கள் அளித்த விதையினை,
முறையாகத்தான் தொட்டியிலிட்டு வளர்க்க முயற்சித்தேன். ஆனால் அது முளைக்கவே இல்லை”
அரசன் சொன்னான்: நீங்கள் அனைவரும் கல்வியிலும், வீரத்திலும்
சிறந்தவர்கள் தான். ஆனால், அரசாள்வதற்கு அது
மட்டும் போதாது. நேர்மையும், பொய்யாமையும் தேவை. உங்களனைவருக்கும் கொடுத்தவை அனைத்தும் வேகவைத்த விதைகள. அவை முளையா. எனவே, நீங்கள் வளர்த்து வந்த செடிகள் அனைத்தும்
நான் கொடுத்த விதையிலிருந்து வந்தவை அல்ல.
முளைக்காத தொட்டியைக்
கொண்டுவந்தவன் அரசனா நியமிக்கப் பட்டான். மற்றவர்கள்
பொய் சொன்னதற்காக சிறைக்குச் சென்றனர்.
=============================================================================================
நீதி: பொய்யினை விதைப்பவர்கள் அதற்குண்டான
விளைவை அனுபவித்தே தீரவேண்டும். வேறெந்த திறமையைவிட நேர்மையே முக்கியமான குணம்.
=================================================================
No comments:
Post a Comment