Thursday, December 8, 2011

சிறார்களுக்கு (9)

9. சம்பளம் குறைவு 

அரசனிடம் மெய்க்காப்பாளராக பணியாற்றிய வீரபாகு, மிகுந்த மன வருத்தத்தில் இருந்தான். “அரசனைவிட்டு கண நேரமும் பிரியாமல், அரசனை காப்பாற்றிக் கொண்டு வருகிறேன். எனக்கு வெறும் ஐம்பது தங்கக்காசுகள் தான் ஊதியம். ஆனால், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, அதுவும் ஒரு அரைமணி நேரம் மட்டுமே, அரசனை சந்திக் கும் மந்திரிக்கு 1000 காசுகள் சம்பளம்இதை மிகவும் ஓரவஞ்சனை யாக நினைத்தான் வீரபாகு. ஒரு நாள், அரசன் உப்பரிகையில்  நின்று கொண்டிருக்கும் போது இதை அரசனிடமே கேட்டுவிட்டான்.

இதைக்கேட்டு சிரித்த அரசன், “அதோ தூரத்தில் தூரத்தில் போய்க் கொண்டிருக்கும் மாட்டு வண்டிகள் எங்கே போய்க்கொண்டிருக் கின்றன என கேட்டு வாஎன ஆணையிட்டான். விர்ரென, குதிரை யில் ஏறிப்பாய்ந்து, அந்த வண்டிக்காரணிடம் போய் விசாரித்துவிட்டு, மூச்சு வாங்க வந்தான் வீரபாகு!  “அரசே, அந்த வண்டிகள் பக்கத்து ஊரான தம்மமபட்டிக்குச் சென்று கொண்டிருக்கின்றன என்றான். அப்புறம் என்ன விசாரித்தாய் என அரசன் கேட்டதற்கு, "தாங்கள் வேறோன்றும் விசாரிக்கச் சொல்ல வில்லையே" என்றான்.

சேவகனைக் கூப்பிட்டு, “நீ போய் மந்திரியை அழைத்து வாஎன்றார். மந்திரி வந்ததும், “அதோ தூரத்தில் தூரத்தில் போய்க் கொண்டிருக் கும் மாட்டு வண்டிகள் எங்கே போய்க்கொண்டிருக்கின்றன என கேட்டு வாருங்கள்என்றார். நிதானமாக புறப்பட்டுச் சென்ற மந்திரி கொஞ்ச நேரம் கழித்து திரும்பி வந்தார். ‘மன்னா, அவை பக்கத்து நாட்டிலிருந்து, மிளகாய் ஏற்றிக் கொண்டு வருகின்றன. தம்மம்பட்டி சந்தைக்கு செல்கின்றன. நமக்கு கட்ட வேண்டிய வரிகள் அனைத் தையும் கட்டிவிட்டனர். அக் கூட்டத்தில் உளவாளிகள் எவரும் இல்லை.  மேலும் நமது அரண்மனைக்கு மிளகாய் தேவைப் படுவதால், ஒரு வண்டி இறக்கச் சொல்லி விட்டேன் என்றார்.

அரசன் மெய்க்காப்பாளனிடம் திரும்பி, “இப்போது புரிகிறதா, உனக்கு ஏன் குறைவான சம்பளம் என்று..?”  புன்னகைத்தார் அரசன்.

 ======================================================================
நீதி:  செக்குமாடு மாதிரியான, வேலைகள் ஒருபோதும் வாழ்க்கை யில் முன்னேற்றத்தை கொணரா. உழைப்புடன் புத்தியும் தேவை.
=================================================================

No comments:

Post a Comment