Tuesday, December 6, 2011

சிறார்களுக்காக (6)


6. பத்து படி அரிசி
ஒரு குருவின் ஆசிரமம். அன்றைய வகுப்பிற்கு சிலர் தாமதமாக வந்தனர். குரு, சீடர்களிடம் “தாமததிற்கான காரணத்தை கண்களால் வினவு, “ஐயா,  பக்கத்துத் தெருவில் ஒருவர் மரணம் அடைந்து விட்டார். அந்த தெருவை சுற்றிக்கொண்டு வந்ததால் தாமதம் என்ற னர் சீடர்கள். 

“இறந்து போனது யார் என்றார் குரு.

“எப்போதும் தெருவில் எல்லோரிடமும் தகராறு செய்து கொண்டிருப் பானே அவன் தான். குருவுக்கு நினவுக்கு வரவில்லை.

“தனது தகப்பனாரை, சதா தெருவில் இழுத்துப்போட்டு அடித்துக் 
கொண்டிருப்பானே”  அவன் தான். அப்போதும் நினைவில்லை.

“எப்போதும் குடித்துவிட்டு ஆடிக்கொண்டிருப்பானே....”

ம்.. ஹூம். நினைவில்லை.

இப்படி பலவற்றை நினைவில் கொண்டுவந்து சொல்லியும் பலனில்லை.

இறுதியாக, “நம் ஆசிரமத்துக்கு ஒரு தடவை 10 படி அரிசி கொடுத்தானே.. அவன் தான்

உடனடியாக நினைவுக்கு வந்துவிட்டது குருவுக்கு.


========================================================================
நீதி:  உயர்ந்தோரின் உள்ளங்களில் தங்க வேண்டுமாயின் அல்லன தவிர்த்து, நல்லன மட்டுமே செய்யுங்கள்.
=========================================================================

No comments:

Post a Comment