Tuesday, December 20, 2011

சிறார்களுக்கு (13)


 ஊதியத்தின் அருமை எதில்?


செல்வம், ஒரு நூறு சத சோம்பேறி! ஏதோ ஒரு டிகிரியை முடித்துவிட்டு, வீட்டில் சோம்பியிருக்கிறான்.

எந்த வேலைக்கும் போவதில்லை; வேளாவேளைக்கு வீட்டில் தின்றுவிட்டு, ஊர் சுற்றிக் கொண்டிருப்பது தான் அவனது ஒரே வேலை. அவனது தகப்பனார், வேலைக்குப் போகா விட்டாலும் பரவாயில்லை; தனது கடைக்கே வந்து, தொழில் கற்றுக் கொள்ளுமாறு சொல்லிப் பார்த்தார். ஆனமட்டும் உபதேசம் செய்து பார்த்தார். பிறரைவிட்டு உபதேசம் செய்யச் சொன்னார்.  ம்.ம்..ஹூம். அவன் எதற்கும் படிவதாக இல்லை!  ஒரு நாள் பொறுமை இழந்த அவர், நாளை முதல் நீ பத்து ரூபாயாவது சம்பாதித்து வந்தால்தான் சோறு; இல்லை எனில் பட்டினி கிட என சொல்லிவிட்டார்.

முதல் இரண்டு நாள் தனது தாயிடமே கெஞ்சிக் கூத்தாடி தினம் பத்து ரூபாய் வாங்கிக் கொண்டான்.

தாய்ப் பாசத்தினால் அவளும் கொடுத்தாள்! அந்த பத்து ரூபாயை தந்தையிடம் கொண்டுபோய்க் கொடுத்தான். தந்தை, அவண் கொண்டு வந்து கொடுத்த பத்து ரூபாயை சாக்கடையில் விட்டெறிந்தார். மனைவியிடம் ஃபோனில் கூப்பிட்டு அவனுக்கு சோறு போடுமாறு சொன்னார்.  

மகன் பதிலேதும் சொல்லாமல் வீட்டிற்குப் போய், தின்றுவிட்டு தூங்கினான். மூன்றாம் பொறுக்க மாட்டாமல், தாயார் அவனுக்கு பணம் தர மறுத்துவிட்டார்.  நண்பர்கள், உறவினர்கள் என, பலரிடம் பத்து ரூபாய் வாங்கி தகப்பனாரிடம் காண்பிப்பதும், அவர் உடணடியாக அந்த பணத்தை சாக்கடையில் எறிவதுமாக சில நாட்கள் கழிந்தன. கொஞ்ச நாளில் உறவினர்களும், நண்பர்களும் பணம் தறுவதை நிறுத்திவிட்டனர். பசி வயிற்றைக் கிள்ளியது! வேறு வழியின்றி, பக்கத்து மண்டிக்குச் சென்றான். அங்கு ஒரு மணி நேரம் சரக்குகளை லாரியில் ஏற்றும் பணியினைச் செய்தான். முப்பது ரூபாய் கூலியாகக் கிடைத்தது.

அதைக் கொண்டுபோய் தந்தையிடம் கொடுத்தான். அவர் வழக்கம் போல சாக்கடையில் எறியப்போனார். பாய்ந்து சென்று கையைப் பிடித்தான் செல்வம். “அப்பா,  நான் இதை ஒரு மணி நேரம் மூட்டை சுமந்து சம்பாதித்தது; இதை சாக்கடையில் போட்டால் தெரியும் சேதி என கர்ஜித்தான்.

தந்தை புன் சிரிப்போடு அந்த பணத்தினை கண்களில் ஒற்றிக் கொண்டு, மகனிடம் ‘ நீ வீட்டிற்குப் போய் சாப்பிடு என்றார்.

===============================================================    
    நீதி: ஊதியத்தின் அருமையும் பெருமையும், உழைப்பில் தான்.
===============================================================
    

2 comments:

  1. உழைப்பின் அருமையை அழகாகப் பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள்..

    இரசித்தேன்

    ReplyDelete
  2. Thanx Shri Guna Thamizh. I am publishing short stories especially for kids under lable "R.R PAGES' of my block http://orbekv.blogspot.com
    Thanks again

    ReplyDelete