செருப்பு
ஒரு இளம் பெற்றோர். அவர்களுக்கு,
இரண்டு வயதில் ஒரே பெண் குழந்தை.
மிகவும் ஆசைப்பட்டு, கடைக்குச் சென்று, அக்குழந்தைக்கு ஒரு விலை உயர்ந்த செருப்பு வாங்கினர். அதை, அக்குழந்தையின் காலில் அணிவித்து, டவுன் பஸ்ஸில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். பஸ்ஸில் கூட்டம் அதிகம். உட்கார இடமில்லை. நின்று கொண்டு பயனித்தனர். குழந்தையை, அம்மா தூக்கிக் கொண்டு நின்று கொண்டிருந்தார்.

சட்டென்று குழந்தையின்
அப்பா, குழந்தையின் காலைக் கவணித்தார்.
அதிக விலை கொடுத்த வாங்கிய செருப்பில் ஒன்று மட்டும்தான் காலில் இருந்தது. இன்னொன்றைக்
காணோம்! தனது மனைவியிடம் எங்கே இன்னொரு செருப்பு என வினவினான். தனக்குத் தெரியவில்லை என பதிலளித்தார் தாய். பஸ்ஸில்
கும்பல் அதிகமாக இருந்ததால், தேடிப்பார்க்க இயலவில்லை.
தகப்பனுக்கு ஆத்திரம்
மேலிட்டது. ஒரு செருப்பைக்கூட உன்னால் கவனமாகப் பார்த்துக் கொள்ளத்தெரியவில்லையா
என மனைவியைத் திட்டினான். கோபத்துடன், அக்குழந்தையின் காலில் மிஞ்சியிருந்த ஒரு
செருப்பைக் கழற்றி, பஸ்ஸின் ஜன்னல் வழியே வீசி எறிந்தான்.
சற்று நேரத்தில்,
அவர்கள் இறங்க வேண்டிய ஸ்டாப்பிங் வந்ததும், கடுகடுத்த முகத்துடன் கீழிறங்கினான். குழந்தையின்
தாய் பஸ்ஸைவிட்டிறங்கியதும், தனது முந்தானையை உதறினார். முந்தானையினுள்ளிருந்து,
காணாமற் போய்விட்டதாக கருதிய இன்னொரு செருப்பு பொத்தென்று கிழே விழுந்தது.
நீதி: ஆத்திரமாய் இருக்கும் போது, எந்த முடிவும்
எடுக்காதே. அத்தகைய முடிவுகள் யாவும் ஆபத்திலோ, நட்டத்திலோதான் முடியும்.
===========================================================
No comments:
Post a Comment