4. சிங்கம்
வழிப்போக்கன் ஒருவன் காட்டின் வழியே சென்று கொண்டிருந்
தான். வழியில், முன்னங்கால்கள் இரண்டினையும் இழந்த நரி ஒன்றினைக் கண்டான். இதற்கு எவ்வாறு உணவு கிடைக்கும் என ஆச்சரியப் பட்டான். அப்போது, ‘கடவுள் தருவார்’ எனறது அசரீரியின் குரல். அதெப்படி கடவுள் கொடுக்கக் கூடும் என வியந்த அந்த வழிப்போக்கன், ஒரு மரத்தின் பின்னே ஒளிந்துகொண்டு கவனிக்கலானான்.
தான். வழியில், முன்னங்கால்கள் இரண்டினையும் இழந்த நரி ஒன்றினைக் கண்டான். இதற்கு எவ்வாறு உணவு கிடைக்கும் என ஆச்சரியப் பட்டான். அப்போது, ‘கடவுள் தருவார்’ எனறது அசரீரியின் குரல். அதெப்படி கடவுள் கொடுக்கக் கூடும் என வியந்த அந்த வழிப்போக்கன், ஒரு மரத்தின் பின்னே ஒளிந்துகொண்டு கவனிக்கலானான்.
சற்று நேரத்தில்
சிங்கம் ஒன்று ஒரு மானை வேட்டையாடி, இழுத்துக் கொண்டு வந்தது. தனக்கு வேண்டியதை
தின்றுவிட்டு, மீதியை அங்கேயே போட்டுவிட்டுச் சென்றது. மானின் மிச்சத்தை, ஊனப்பட்ட நரி தின்று
பசியாறியது.
“அட... இது நல்லா
இருக்கே! வேலை எதுவும் செய்யாவிட்டாலும் கூட, நமக்கு எப்படியும் உணவு
கிடைத்துவிடும் போலிருக்கே” என வியந்த வண்ணம், வீடு வந்து சேர்ந்தான். வேலை ஏதும் செய்யாமலேயே சும்மா கிடந்தான்.
எவரும் உணவு கொடுக்கவில்லை! உடல் மெலிந்து நலிவுற்றான். கடவுளைப் பார்த்து
முறையிட்டான். நரிக்கு மட்டும் உணவு அளித்தாயே? எனக்கு ஏன் உணவு இல்லை என
வினவினான்!
அசரீரி பதிலளித்த்து!
கால்களிழந்த நரியிடமிருந்து சோம்பியிருக்க பாடம் கற்றுக் கொண்ட மூடனே! நரிக்கு
உணவளித்த சிங்கத்திடமிருநது என்ன கற்றுக் கொண்டாய் எனக் கேட்டது!
நீதி: உலக நிகழ்வுகளிலிருந்து, உனக்கு சௌகரியமாய்,
வசதியாய் இருப்பதை மட்டும் கற்றுக் கொள்ளாதே!
===================================================================
நல்ல பகிர்வு..
ReplyDeleteதங்கள் இடுகையோடு தொடர்புடைய இடுகை..
http://gunathamizh.blogspot.com/2011/12/blog-post.html
Thank U Shri r. Gunaseelan.
ReplyDeleteஇன்று தான் தங்கள் வலைப்பதிவை கண்டேன். மிக்க மகிழ்ச்சி. வாரமலரில் தங்களது சிறுகதையையும் வாசித்தேன். வாழ்த்துகள், தொடர்ந்து எழுதுங்கள்.
ReplyDeleteவி.பாலகுமார்,
பி.எஸ்.என்.எல்.
மதுரை.
Thank U Shri V.Balakumar
ReplyDeleteThank You Balaraman. Convey my wishes to Sri R.R sir. Best wishes to both of you. Continue this .
ReplyDelete