பாரத் ரத்னா, திரு. லால் கிருஷ்ண அத்வானி அவர்கள், இன்று நவம்பர் 8ஆம் தேதி, தனது வாழ்வின் நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.
இந்த ஆண்டு அவரது பிறந்தநாள், ஶ்ரீராமருடனும் , தீபாவளித் திருநாளுடன் பொருத்தமாக அமைந்துள்ளது.
அதே நேரத்தில், "ஜனசங்கம்" தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதையும், டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளுடனும் இணைகிறது.
சமீபத்தில், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடினோம்.
இந்தியாவின் வரலாற்றுப் பக்கங்கள், பல விதமான திருப்பங்களை உள்ளடக்கியது.
இத்தகைய மாபெரும் வரலாற்றில் ,
தங்களது வாழ்க்கையை இணைத்துக் கொண்டவர்கள் வெகு சிலரே!
திரு அத்வானி அத்தைகையவர்.
1927ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பிறந்தார். 1947ல் பிரிவினையின் துயரத்தைக் கண்டவர்.
அவரது பிறந்த மண்ணான கராச்சியை விட்டுப் பிரிந்தார்.
ஆனால், ஆதற்குக் காரணமான எவரிடமும் வெறுப்பு கொண்டாரில்லை.
ஏற்றுக் கொண்டு, வாழ்க்கையைப் புதிதாகத் தொடங்கினார். எத்தகைய இடர்ப்பாடுகள் வந்தாலும், அஸ்த்திவாரத்தை மீண்டும் கட்டமைக்கும் இந்தப் பண்பு , அவரது வாழ்நாள் முழுவதும் நீடித்தது.
ஜனசங்கத்தை வலுப்படுத்திய போதும், பின்னர் பாரதிய ஜனதா கட்சியை உருவாக்கி வளர்த்தபோதும் இந்தப் பண்பு வெளிப்பட்டது.
அவர் பாஜக தலைவராகப் பொறுப்பு வகித்த காலத்தில்தான், 1989ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் பலம் 400 இடங்களிலிருந்து 200க்கும் கீழாகக் கடுமையாகச் சரிந்தது. 1996ஆம் ஆண்டு பாஜக முதன்முறையாக நாடாளுமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
இவர், பல தலைமுறை கட்சித் தொண்டர்களை வளர்த்தெடுத்ததோடு, 'தேசமே முதன்மை' என்ற கொள்கையை, கட்சிக்குள்ளேயும் தொண்டர்களிடையேயும் வேரூன்றச் செய்தார்.
அத்வானி அவர்களைத் தனித்துவமாகக் காட்டியவை இரண்டு பண்புகள்.
ஒன்று , அவரது கொள்கைத் தெளிவு.
அவரது உரைகளிலும் எழுத்துகளிலும் , இவைகளைக் காணலாம். அவர் உருவாக்கிய ஜனசங்கம் மற்றும் பாஜகவின் தீர்மானங்கள் இன்றும் படிக்கத் தகுந்தவை. அவரது நேர்காணல்கள் எப்போதும் ஆழமான கருத்துகளையும் துல்லியமான வெளிப்பாட்டையும் கொண்டிருந்தன.
இரண்டாவது, இந்திய அரசியலில் பல ஆண்டுகளாக ஒரு பெரும் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட போலி மதச்சார்பின்மையை அவர் அம்பலப்படுத்திய விதமாகும்.
அத்வானி அவர்கள் தமக்கு அளிக்கப்பட்ட ஒவ்வொரு பொறுப்பையும் மிகுந்த அர்ப்பணிப்புடனும் கவனத்துடனும் நிறைவேற்றினார்.
ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக, முதலில் ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றினார். பின்னர், தேசியத் தலைநகரான டெல்லிக்குச் சென்று அடல் அவர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றத் தொடங்கினார்.
பல தசாப்தங்களாக இரு உயர்ந்த அரசியல் தலைவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியாளர்களாக மாறாமல், இணைந்து ஒத்துழைத்துப் பணியாற்றியிருப்பது வரலாற்றில் அரிதான நிகழ்வாகும்.
அத்வானி அவர்களும் அடல் (வாஜ்பாய்) அவர்களும் இதற்கு ஓர் அற்புதமான முன்னுதாரணமாகத் திகழ்ந்தனர். இருவரும் இணைந்து இந்திய அரசியலின் போக்கையே மாற்றியமைத்தனர்.
அத்வானி அவர்கள் டெல்லிக்கு வந்தபோது, பிரிவினையின் கொடூர விளைவுகளிலிருந்து டெல்லி மெல்ல மீண்டு கொண்டிருந்தது. ஜனசங்கத்தை வலுப்படுத்தும் பணியில் அவர் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.
1967ஆம் ஆண்டு, டெல்லி மாநகராட்சிக் குழுவின் தலைவராக அத்வானி அவர்கள் பொறுப்பேற்றார். அப்போது, பின்னர் அதன் தலைமைச் செயல் ஆலோசகராகப் பொறுப்பேற்ற மறைந்த விஜய் குமார் மல்ஹோத்ரா அவர்களுடன் இணைந்து பணியாற்றினார்.
1970ஆம் ஆண்டு அத்வானி அவர்களின் நாடாளுமன்றப் பயணம் தொடங்கியது.
நாடாளுமன்றத்தில் அவரது உரைகளும், விமரிசனங்களும் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்தவர்களின் பாராட்டைப் பெற்றன.
நாடாளுமன்ற உறுப்பினராக, இரு அவைகளிலும் எதிர்க்கட்சித் தலைவராக தனது முத்திரையைப் பதித்தார்; ஆளும் கட்சியாக இருந்த போதும் கூடஃ!
பணிகளுக்கிடைய, அடிக்கடி நாடு முழுவதும் பயணம் செய்து மக்களைச் சந்தித்தார்.
1991ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்! அத்வானி அவர்கள் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது. அவற்றில் ஒன்று காந்திநகர்.
குஜராத்துடன் தொடர்பு இருந்தது. பிரிவினைக்குப் பிறகு அவரது தந்தை கட்ச் பகுதியில்(குஜராத்) குடியேறியிருந்தார்.
எனவே, அது அவர் தமது சொந்த இல்லத்திற்குத் திரும்புவது போன்றதொரு நிகழ்வாக இருந்தது.
அப்போது நான் (மேடிஜி) பாஜக அமைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்ததால், அவரது வேட்புமனுத் தொடர்பான ஆவணங்களைத் தயாரிக்க உதவுவதற்கும், தேர்தல் பிரச்சாரம் முழுவதும் அவருக்குத் துணையாக இருப்பதற்கும் எனக்குக் கிடைத்த வாய்ப்பை ஒரு பெருமையாகக் கருதுகிறேன்.
காந்திநகர் மக்கள் அவரை மீண்டும் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு அனுப்பினர். காந்திநகர் வாக்காளராகிய நான், பலமுறை அத்வானி அவர்களுக்கு வாக்களிக்கும் பெருமையைப் பெற்றேன்.
தமது தொகுதிக்காக அவர் காட்டிய அக்கறையும் கவனமும் நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
நெருக்கடி நிலை (Emergency) என்பது அத்வானி அவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. ஜனநாயகத்தைக் காப்பதிலும் அரசியலமைப்பைப் பாதுகாப்பதிலும் அவர் முன்னணியில் நின்றார். அந்தக் காலகட்டத்தின் அனுபவங்களை 'A Prisoner's Scrap-Book' என்ற நூலில் பதித்துள்ளார்.
அந்த நூலில் 'A Tale of Two Emergencies' என்ற தலைப்பில் உள்ள ஒரு பகுதி, 1975 ஜூன் மாதம் இந்தியாவில் தொடங்கிய நிகழ்வுகளுக்கும், 1933ஆம் ஆண்டு நாஜி ஜெர்மனியில் நிகழ்ந்தவற்றுக்கும் இடையிலான, வியக்கத்தக்க ஒற்றுமைகளை அழகாக விளக்கியுள்ளது.
அத்வானி அனல் பறக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமல்ல; , மிகச் சிறந்த நிர்வாகியும் கூட.
1977ஆம் ஆண்டு ஜனதா அரசு ஆட்சிக்கு வந்தபோது, அத்வானி அவர்கள் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சரானார். அந்தத் துறையில் அவர் ஆற்றிய பணிகள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும்.
துணைப் பிரதமராகவும், இந்தியாவின் நீண்டகாலம் உள்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அவர் முக்கியப் பங்காற்றினார்.
நமது பாதுகாப்புப் படையினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகள் இன்றும் நன்றியுடன் நினைவு கூரப்படுகின்றன.
பயங்கரவாதத்திற்கு எதிராக அவர் எடுத்த உறுதியான நிலைப்பாட்டின் விளைவாக, இந்தியாவுக்கு வலுவான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கிடைத்தது.
அவரது வாழ்க்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணங்களில் ஒன்று,
சோமநாத்திலிருந்து அயோத்தி வரை அவர் மேற்கொண்ட ரத யாத்திரை.
அது இந்தியச் சமூகத்தின் போக்கையே மாற்றியமைத்தது.அந்த யாத்திரையைத் திட்டமிடும் தொடக்கக் கட்டத்திலிருந்து அதைச் செயல்படுத்தும் இறுதிக் கட்டம் வரை அதில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்ததை நான் பெரும் பேறாகக் கருதுகிறேன்.
யாத்திரை தொடங்கியபோது சோமநாத்தில் நான் உடனிருந்தது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவமாகும்.
ஒரு யாத்திரை என்பது மிகுந்த உடல் உழைப்பையும் பொறுமையையும் கோரக்கூடியது. நீண்ட நேரப் பயணம்.
இடைவிடாத அலைச்சலுக்கு மத்தியில், , உடல் ஒத்துழைப்புடன், இலக்கிலிருந்து கவனம் சிதறாமல் இருப்பது ஆகியவை அவசியம்.
இதைச் செய்து காட்டியவர் திரு அத்வானி.
பீகாரில் அவர்கள் கைது செய்யப்பட்ட துயரமான தருணங்களும் எனது நினைவில் உள்ளன.
அதன்பின்னர் குஜராத்தில், பாஜக சிமன்பாய் படேல் அரசுக்கான தனது ஆதரவை விலக்கிக்கொண்டது. இதன் மூலம் ஒரு தெளிவான செய்தி தெரிவிக்கப்பட்டது. நமது கொள்கை மற்றும் ராமர் கோயில் என்ற விஷயத்தில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை என்பதே அந்தச் செய்தி.
என்ன நடந்தாலும் சரி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டியே தீருவோம் என்று நமது மூத்த தலைவர்களும் கட்சித் தொண்டர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
பல ஆண்டுகளுக்குப் பின்னர், இந்திய மக்களின் ஆசியுடன், ராமருக்கு பிரம்மாண்டமான கோயில் கட்டப் பட்டது.
அத்வானி அவர்களின் கனவு நனவானது.
சிறப்புகளைப் பற்றிக் கூற இன்னும் எவ்வளவோ உள்ளன.
அவற்றில் ஒன்று அவரது எளிமை. நவநிர்மாண் இயக்கத்திற்குப் பின்னர், அத்வானி அவர்கள் ஜூனாகத் பகுதிக்கு வந்தார். அங்கு ஒரு சாதாரணக் கட்சித் தொண்டராக ஒரு மாதம் தங்கியிருந்து, சட்டமன்றத் தேர்தலுக்கான கட்சிப் பணிகளை மேற்கொண்டார். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி நிராகரிக்கப்பட்டது.
பொது வாழ்வில் நேர்மையும் தூய்மையும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு அவர் எப்போதும் முன்னுதாரணமாகத் திகழ்ந்துள்ளார்.
அவர் ஒரு தீவிரமான வாசகர். அவருடன் நேரம் செலவிட்டவர்கள், செய்தித்தாள்களை அவர் எவ்வளவு கவனமாகவும் ஆழமாகவும் படிப்பார் என்பதை நன்கு அறிவார்கள்.
திரைப்படங்களிலும் நாடகங்களிலும் அவருக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. திரைப்பட விமர்சகராகவும் அவர் ஆர்வத்துடன் செயல்பட்டு வந்துள்ளார்.
வரலாற்றைப் பற்றிய அவரது ஆழமான புரிதலும், அதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்த அவரது அக்கறையும், 'My Country My Life' என்ற அவரது நூலில் தெளிவாக வெளிப்படுகின்றன.
அத்வானி அவர்கள் எப்போதும் சிந்தி கலாசாரத்துடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்தார்.
லே அருகே நடைபெறும் சிந்து தரிசன பூஜையைப் பிரபலப்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சியும் குறிப்பிடத்தக்க தாகும். நானும் அத்வானி அவர்களும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களும் இணைந்து ஒரு முறை அந்தப் பூஜையில் கலந்துகொண்டோம்.
அத்வானி அவர்களின் குறிப்பிடத்தக்க வாழ்க்கைப் பயணத்தைப் பற்றிய எந்தவொரு பதிவும், கமலா அத்வானி அவர்களைப் பற்றிக் குறிப்பிடாமல் முழுமையடையாது. அவரது பொது வாழ்க்கை முழுவதும் அவர் அத்வானி அவர்களுக்கு நிலையான ஆதரவையும் மன வலிமையையும் அளித்துவந்தார்.
கராச்சியில் வளர்ந்த அத்வானி அவர்கள், தமது வாழ்க்கை இத்தகையதொரு பாதையில் செல்லும்
என்று ஒருபோதும் கற்பனை செய்திருக்க மாட்டார்.
அவரைக் கௌரவிக்கும் விதமாக, இந்திய மக்கள் 2024ஆம் ஆண்டு அவருக்கு 'பாரத ரத்னா' விருதை வழங்கினர்.
நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த வேளையில், அவர் நல்ல உடல்நலத்துடன் நீண்ட காலம் வாழவும், இதுவரை செய்ததைப் போலவே தொடர்ந்து , நம் அனைவருக்கும் ஊக்கமளிக்கவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
- பிரதமர் திரு மோடிஜியின் உரையிலிருந்து சில அம்சங்கள்..