Showing posts with label Elanmusk. Show all posts
Showing posts with label Elanmusk. Show all posts

Friday, October 9, 2026

கரப்பான்களும் தாய்க்கரப்பான்களும்

சர்வதேச ராட்சசக் கம்பெனிகள், தங்களுக்குக் கொள்ளை லாபம் கிடைக்கவில்லை என்றாலோ அல்லது தங்களின் கொள்ளையை யாராவது தடுக்க நினைத்தாலோ, அவர்களை ஒழித்துக்கட்டவும், அந்த நாட்டை உடைக்கவும், அப்படிப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்க்கவும், தேசத்தை ரத்தக்களறியாக்கவும் சற்றும் தயங்காத ரத்தம் குடிக்கும் காட்டேரிகள்.

​வெனிசுவேலா நாட்டின் தேர்தல்கள் சரியில்லை என ஈலான் மஸ்க் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பேசத் தொடங்கினான். அவனைத் தொடர்ந்து அந்நாட்டுத் தேர்தல்கள் பற்றியும், அந்நாட்டின் அதிபர் பற்றியும் தவறான கருத்துகளைப் பரப்பிக்கொண்டே இருந்தான்.

​நம் ஊர் கரப்பான் பூச்சிகள் மாதிரி, அங்கேயும் சில பூச்சிகள் கலவரம் செய்தன.

​தொடர்ந்து, அமெரிக்கப் படைகள் அங்கே நுழைந்து ஆட்சி மாற்றம் நடந்தது. இப்போது அங்கே அமெரிக்காவின் எடுபிடி அரசாங்கம் நடைபெறுகிறது.

​அதே கிராதக மஸ்க், இப்போது இந்தியத் தொழிலதிபர்களைப் பற்றிப் பேசத் தொடங்கியுள்ளான். அதற்குப் 'பப்பு' ஒத்து ஊதுகிறான். அதை மீண்டும் ஈலான் மஸ்க் மறுட்வீட் செய்கிறான்.

​அவர்களுக்கு என்ன வேண்டும்?

​அவர்கள் விரும்புவது ஆட்சி மாற்றம்! பிரதமர் மோடி பதவி விலக வேண்டும்; 'பப்பு'வை அரியணையில் அமர வைக்க வேண்டும்; இந்தியா அமெரிக்காவின் ஆளுமைக்குள் அடங்க வேண்டும். கட்டுப்பாடின்றி இந்தியச் சந்தையைக் கைப்பற்றி, முடிந்தவரை இந்தியாவைக் கொள்ளையடித்து, அதை அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

​பேராசை கொண்ட எலன் மஸ்க், இந்தியா பற்றிச் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிப்பது இது முதன்முறையல்ல. அவனின் ஒரே விருப்பம், உலகின் எல்லா நாட்டுச் சந்தைகளையும் கைப்பற்றுவதுதான்.

​மிகப்பெரிய சந்தைகளான இந்தியாவும் சீனாவும் அவனுக்குப் பெரிய சவாலாக உள்ளன.

​சீனா தன் நாட்டு மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடு; அவர்களது தொழில்வாய்ப்பை உறுதி செய்யும் நாடு.

​இதனால் அவனுக்கு அங்கே அனுமதி இல்லை. இந்தியாவும் அதையே பின்பற்ற முயல்கிறது. அதற்காகத்தான் பிரதமர் மோடி நாடு நாடாகச் சென்று, இந்தியாவின் உலகளாவிய நிலையை உறுதிப்படுத்துகிறார்.

​என்ன செய்வது? 70 ஆண்டுகளாக நேரு குடும்பம் நாட்டைச் சீரழித்து வைத்துள்ளது.

​எலன் மஸ்க் இந்தியாவின் கார் சந்தையைக் குறிவைத்தான். நமது தேசத்தின் கார் சந்தை மிகவும் பெரியது. அதை எலன் மஸ்க் அள்ள முயன்றபோது, மோடி அரசு தடுத்தது. விட்டுவிட்டால் அவன், இந்தியாவின் மஹிந்திரா உள்ளிட்ட பெரும் நிறுவனங்களை விழுங்கிவிடுவான்.

​இதன் காரணமாகவே, எலன் மஸ்க்கின் டெஸ்லா காருக்கு இந்தியா அனுமதி அளிக்கவில்லை.

​இதனால் கடுப்பாகித் திரும்பிச் சென்ற மஸ்க், இப்போது இந்தியாவின் இணையதள சேவை மற்றும் செயற்கைக்கோள் சேவையான ஸ்டார்லிங்க் (Starlink) குறித்து மறுபடியும் சர்ச்சை செய்கிறான்.

​"இந்தியாவில் தன்னால் மிகக் குறைந்த விலையில் சேவை செய்ய முடியும், இணையம் வழங்க முடியும்; ஆனால் மோடி அரசு தடுக்கிறது" என்று சினம் கொண்டு பாய்கிறான். இவன் பிற நாடுகளில் செய்த விஷமங்கள் உலகறிந்தவை.

​இதற்கு இந்திய அரசு முறைப்படி தன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

​"உலகிலேயே இணையச் செலவு குறைந்த நாடு இந்தியா. அதுமட்டுமின்றி, இந்தியா சொந்தமாகச் செயற்கைக்கோள் வான்பலம் கொண்ட நாடு. எனவே, ஸ்டார்லிங்கை நம்ப வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை; எங்கள் நாட்டுச் சேவையை நாங்களே கவனித்துக் கொள்வோம்" எனத் தெளிவாகச் சொல்லிவிட்டது.

​இப்போது தன் கொள்ளை பிசினஸை உள்ளே நுழைக்க முடியவில்லையே என்ற ஆவேசத்தில் இருக்கிறான்.

​மோடி ஏன் அந்நியருக்கு வேப்பங்காயாக இருக்கிறார் என்பதும், இந்தியாவிற்கு அவர் ஏன் அவசியம் என்பதும் இப்போது விளங்கும்.

​அதனால்தான், கரப்பான் பூச்சிகளின் பின்னால் மறைந்துகொண்டு உலக முதலைகள் இயங்குகின்றன. கரப்பான்களைத் தூண்டிவிட்டு, பண உதவி செய்வதும் இத்தகைய முதலைகளே.

​கரப்பான்களுக்குப் பின்னால் இருக்கும் கருநாகங்களும் மலைப்பாம்புகளும் ஒவ்வொன்றாக வெளியே வர வேண்டும். கரப்பான்களையும், தாய்க் கரப்பானாகிய 'பப்பு'வையும் இயக்குபவர்கள் யார் என்பது வெளிச்சத்திற்கு வர வேண்டும்.

​நாட்டை நேசிப்பவர்கள் விழிப்புடன் செயலாற்ற வேண்டிய நேரம் இது!



# Elanmusk #Illumibatty #Anti Modi #CJP