அம்மா இறந்துவிட்டாள்!
இனி நான் இரவுகளில் நிம்மதியாகப் பட்டினி கிடக்க முடியும்!
இனி குளித்துவிட்டுத் தலை துவட்டாமல் இருக்க முடியும்!
இனி நான் கிணற்று மதின்மேல் அமர்ந்து தூங்கிவழிந்தபடி புத்தகம் வாசிக்கலாம்!
இனி இரவில் வெளியே கிளம்பும்போது டார்ச் எடுக்க வேண்டியதில்லை!
இன்று சமையல் சரியாக வந்ததா என எவரும் கேட்டுத் துளைக்கப்போவதில்லை!
இனி நான் சென்ற இடத்திலேயே தூங்கிக் கொள்ளலாம்!
என்னைக் கடிந்து கொண்டு,அழுதுகொண்டிருக்கும் ஒரு பிறவி!
உடலால் சுமந்து,பின் மனதால் ஆயுள் முழுதும் சுமந்தவள்; இனி அவளுக்கு பாரமில்லை!
எல்லா விளக்குகளும் எரியும்போதே வீடு இருள்மண்டிக் கிடக்கிறது!
ஆசுவாசம்...
அவளுக்கா? எனக்கா?
------
-கல்பற்றா நாராயணனின் (Kalpatta Narayanan) புகழ்பெற்ற மலையாளக் கவிதையான "அம்மா மரிச்சு" (Amma Marichu) வரிகள் தழுவல்.
No comments:
Post a Comment