அது என்ன மகளிர் தினம்? மார்ச் 8 ஆம் தேதிக்கும் மகளிருக்கும் என்ன சம்பந்தம் என்று உழைக்கும் கீழ்த்தட்டுப் பெண்கள் வர்க்கமே அறிந்து கொள்ளாத தினமாகத்தான் இந்தப் பெண்கள் தினம் இன்றும் இருக்கிறது.
சர்வதேசப் பெண்கள் தினம் என்று ஒருநாள் வருவதற்குக் காரணமே இந்த உழைக்கும் பெண் வர்க்கம் தான் என்பது தங்கமுலாம் பூசப்படாத உண்மை!
மார்ச் 8 என்றால் சர்வதேச மகளிர் தினம் என்று நாமனைவரும் அறிவோம். ஆனால், எதற்காக மார்ச் எட்டாம் திகதியைக் குறிப்பாக தேர்ந்தெடுத்தார்கள்? சற்று வரலாறுகளில் பின்னோக்கித் தேடினால்
வியப்பூட்டும் பல தகவல்கள் நமக்குக் கிடைக்கும். (To continue this article
Click the below link) :
Read more
=========================================================================
அது சரி!...சும்மா கொஞசம் பேரிடம் (பெண்களிடம் தான்) சர்வதேச
பெண்கள் தினம் பற்றி கேட்டேன். அவர்களது "ரெஸ்பான்ஸ்" இப்படி
இருந்தது!
--
70 வயது மூதாட்டி: .....ஆமா.... இது இல்லாங்காட்டி (மகளிர் தினம்) இன்னா
போச்சு... பையனை பெத்தாலும்-பொண்ணப் பெத்தாலும் சோத்துக்கு
லோலடிக்க எந்தலியில எளுதியிருக்கு...
50 வயது பெண்: "பொம்பளைங்க பாடு என்னிக்குதான் நிம்மதியா ஆச்சு...
ஆத்தா கையால இடி...புருஷன் கையால இடி.. இப்ப .. எம் பையன், பொண்டாட்டி பேச்ச கெட்டுக்கிட்டு என்னிய போட்டு வாட்டறான்..
கையில் நாலு காசு இருந்தாக்க...அல்லாரும் கொண்டாடு வாங்கதான்...இல்லாங்காட்டி என்னிய மாரி அல்லாட வேண்டியது தான்.....
35 வயது பெண்: மீட்டிங் போடுவாங்க சார்.. பேசுவாங்க...இது வருஷா
வருஷம் நடக்கும் .. இந்த காலத்திய பெண்கள் இப்பவெல்லாம் பரவாயில்லை சார்..நல்லா படிக்கிறாங்க...நல்லா சம்பாதிக்கிறாங்க
...மத்தபடி பெரிய அளவில் மாறுதல் இல்ல ....
30 வயது: இந்த நாளுக்கு யாராவது "Offer" கொடுக்கிறாங்களா...Cheap-ஆ
இருந்தா எதாவது வாங்கிப் போடலாம்.
21 வயது (Just finished her Engineering..and entered into a job): Is it.. ? I dont know all these things sir.. People will always do something...Anyway thanks.... for giving this information.. If I receive any message or greetings I will have to send thanks card..."
வீட்டு வேலை செய்யும் பெண்: சும்மனா பொம்பளைங்க நாள்னு சொன்ன
எப்புடி? எதனாச்சும் அரிசி..மண்ணெண்னை பிரியா கொடுத்தா சரின்னு சொல்லலாம்....
(லேசாக தலை சுற்றுவது போல இருந்தது - இனி யாரையும் கேட்ப
தில்லை என வந்துவிட்டேன். அனால் கொஞ்சம் வரிகளுக்கிடையேயும்
படித்தால் செய்தி இருக்கத்தான் செய்கிறது. )
No comments:
Post a Comment