நமக்கு யாரையாவது குறை சொல்வது-குற்றம் கண்டுபிடிப்பது விருப்பமான விஷயம். தென் ஆப்பரிக்காவிற்கு எதிரான போட்டியில் தோற்றுப் போனோம். நீட்டி முழக்கிக் கொண்டு ஆளாளுக்கு டீமில் அகப்பட்ட ஆட்களை பிடித்துக் கொண்டு வசைமாரி பொழிய ஆரம்பித்து விட்டனர். ஜெயித்தால் 'பக்தி' மயமாவதும் தோற்றால் 'சபிப்பதும்' நம்
நாட்டின் குணாதிசயமாக மாறிவிட்டது. இன்னமும் போட்டிகள் துவக்க நிலையில்தான் உள்ளன. 'காலிறுதிக்கு' தகுதியும் பெற்றுவிட்டோம். குரூப் 'பி'-ல் இந்த நிமிடம் வரை முதலிடத்தில்தான் உள்ளோம்.
இந்த போட்டியில் இது வரை 1405 ரன்களை பெற்று, 44 விக்கட்களையும் வீழ்த்தியுள்ளோம். சச்சின், யுவராஜ், கம்பீர், கோஹ்லி,சேவாக்
அடிதத் சதங்களை கணத்தில் மறந்து, தூற்ற தயாராகிவிட்டோம். 39.4 ஓவர்கள் வரை தென் ஆப்பரிக்க பவுலர்கள் திணறியதையும்
மறந்துவிட்டோம். சொல்ல வந்த் விஷயம் என்ன வென்றால், போட்டி இன்னும் முடியவில்லை. இப்போதுதான் ஆரம்பித்துள்ளது. Steyn, Morkel, Kallis போன்ற பௌலர்களை நாம் "உண்டு-இல்லை" என செய்ய வில்லையா?. எனவே கோளாறு எங்கே நடந்தது என்று பார்ப்பதை சரியாக
பார்க்கத்தவறினோமானால், அதை சரி செய்யவும் தவறுவோம் தானே?
கடைசியில் ஓவர்களில் தோனி சொன்னது போல 'பந்துக்காகவும்', 'டீமுக்காகவும்' இல்லாமல், 'கேலரிக்காக' அடியதில் தான் தவறு.
தேவையான பாடம் கற்றுக் கொள்ளப்பட்டிருக்கும். குறிப்புகள் கவணத்தில் கொள்ளப்பட்டிருக்கும். எனவே 'மாரடித்துக்' கொள்வதை
விட்டுவிட்டு, நம்மை சரி செய்துகொள்ள நிறைய நேரம் /கேம் உள்ளது என்பதை உணர்ந்து கொள்வோம். நம்மிடம் சற்றேரக்குறைய எல்லாம் சரியாகத்தான் உள்ளது. துணைகண்டத்தின், ஸ்லோவான பிட்சுகளில்-Shaun Tait and Brett Lee போன்றாவர்களே கொழுக்கட்டை தின்னும் போது நமது 'மித வேக' பவுலர்கள் ஏதும் மந்திரவித்தை காட்ட இயலாது.
வாய்த்திட்ட 'பவுலிங்கின்' குறைகளை 'பேட்டிங்க்' மூலம் சரிகட்ட வேண்டும்.
ஏற்கனவே, 100 கோடிப்பேர்கள் 11 பேர் முதுகில் உட்கார்ந்துகொண்டு 'டென்ஷன்' ஏற்றிக் கொண்டிருக்கிறோம். இன்னமும் பதட்டத்தை ஏற்றாமல், டீம் மீது நம்பிக்கை வைப்போம். (யாரேனும் ஒருவர் தானே ஜெயிக்க முடியும்?)
Surprising to see such an optimistic post from you.. i wud really love to know what you think about Dhoni, before and after the World Cup and compare him with Ganguly
ReplyDelete