Saturday, January 28, 2012

ஆஸ்திரேலிய மண்ணில் டோனி...


ஆஸ்திரேலியர்களே! நீங்கள், கிரிக்கெட்டில் எங்களை புரட்டி எடுத்துவிட்டிர்கள்! ஒத்துக் கொள்கிறோம். இன்னமும் டெஸ்ட் ரேங்கில் நாங்கள் இரண்டாம் நிலைதான்! மறக்க வேண்டாம்


ஆனால் ஆஸ்திரேலியர்களே! உங்களுக்கு வெற்றியை, இயல்பாக, அடுத்த டீமை அவமதிக்காமல், வசைபாடாமல் பெறத் தெரியாதா? 

நீங்கள் மைதானத்தில், போட்டி அணியினரை வெறியேற்றி, அவமரியாதையாகப் பேசி, அவர்கள் உங்களது நாகரீகமற்ற  நடத்தையின் காரணமாக நிலை தடுமாறும் போது, வீழ்த்துவது எந்த வகையில் நியாயம்?

மைதானத்தில் நீங்கள்  நடந்து கொள்ளும் முறை எந்த நாகரீகத்தின் பாற்பட்டது என விளங்கவில்லை. நீங்கள் நடந்து கொள்ளும் முறையிலேயே, உங்களுக்கு திரும்ப பதிலளித்தால் உங்களுக்கு அதைப் பொறுத்துக் கொள்ளும் பொறுமையும், பெருந்தன்மையும் இருக்கிறதா கங்காரு நாட்டவரே? இருக்காது! ஏனெனில் உங்களுக்கு தோல்வியை பெருந்தன்மையாக ஏற்கும் மனோபாவம், என்றைக்கும், சற்றும் இல்லை என்பது உலகறிந்த ரகஸ்யம்.

“ஆஷஸ்தொடர் உங்கள் நாட்டில் துவங்கும் முன்னரே, ஃபீல்டுக்கு வெளியே இங்கிலாந்தை திட்டி தீர்த்துவிட்டு, அவர்களை மன ரீதியாக பலவீனப்படுத்தவதை, கொள்கையாகவே வைத்திருக்கிறீர்கள். ஆனால் ‘இங்கிலாந்து நாட்டினர் என்னதான் முயன்றாலும், வசை பாடுவதில் (ஸ்லெட்ஜிங்) உங்களுக்கு நிகராக முடியவில்லை.  

முரளிதரனுடைய பந்தை அடிக்க, நீங்கள் சிரமப்படும்போது, அவரைப் போட்டு படுத்தி எடுத்ததை எவரும் மறக்கவில்லை.  

கபில்தேவ் ஒரு முறை பேட்டிங் செய்யும் போது, அவர் அடித்த பந்து ‘சீ கல் பறவை மீது பட்டு, இறந்த போது, மனதளவில் பாதித்த அவருக்கு, ஒரு பாட்டில் தண்ணீர் கூட தர மாட்டேன் என அடம் பிடித்தவர்கள் தானே நீங்கள்?

ஃபீல்டில் எதிரணியினரை வசைமாரிப் பொழிவதை “ஸ்டீவ் வாஹ்மனதளவில் எதிரணியினரை, கான்சன்டிரேஷன் இழக்கச் செய்து, பலவீனப்படுத்தி, இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல், தவறிழைக்க்ச் செய்து, தோற்கடிப்பது என புகழ்ந்துரைக்கிறார். கிரிக்கெட் “ஜென்டில்மேன் கேம் என்பதை கேள்வியாவது பட்டிருக்கிறீர்களா ஆஸிக்களே?

ஆஸ்திரேலியர்களே, உங்கள் கண்டத்தில் வாழும் அனைத்து ஆங்கிலேயரும், இங்கிலாந்திலிருந்து வெளியேற்றப்பட்ட ‘குற்றவாளிக் கூட்டத்தின் வழித்தோன்றல்கள் தான் என்று சொன்னால் இனிக்குமா? 

உள் நாட்டின் பழங்குடியினரை என்ன செய்து வெளியேற்றினர்கள் என்பது அனைவருக்கும் தெரியுமல்லவா?  இந்தமாதிரி குற்றம் சாட்டுவது தவ று  என்று, எங்களுக்குத் தெரியும். நீங்கள் அடுத்த டீமை வசைபாடுவது, இந்த வகையைத்தான் சாரும் என்பதை, உங்களுக்கு புரியவைக்கவே இது.

ஹர்பஜன் ‘மா கி.. என்று ஹிந்தியில் சொன்னதை ‘மங்கி என்று சொன்னதாக (சிமன்ட்ஸ்) என்ன குதியாட்டம் போட்டீர்கள்? இனத் துவேஷம் என, ஃபிலிம் காட்டினீர்களா இல்லையா? ஒருவேளை ஃபீல்டில் தங்களது செயல்கள் குறித்து சிம்பாலிக்கா சொல்லிவிட்டார் என புரிந்து கொண்டீகளோ என்னவோ?

நீங்கள் கிரிக்கெட்டில் வசைபாடாத் டீம் ஏதாவது உண்டா? ஜிம்பாப்வே பாட்ஸ்மேன் பிராண்ட்ஸைப் பற்றி மெக்ராத் அடித்த கமெண்ட் என்ன? இயான் போத்தம் அவர்களையும், ஆடம் பரோர் அவர்களையும் நீங்கள் வெறுப்பேற்றும் அளவிற்கு (தனிப்பட்ட முறையில்) திட்டியதை எவரும் மறக்க முடியாது. ரோட்னி மார்ஷ் போத்தம் அவர்களை திட்டியது, தெருக்குடிகாரன் பேச்சைவிட மோசமானதல்லவா?

அதுவும் எதிரணியினர் ஆங்கிலத்தில் கொஞ்சம் வீக் எனத்தெரிந்தால், உங்களது ‘நாகரீகம் கொடிகட்டி பறக்கும். உதாரணம் தான் ஹர்பஜன் கேஸ்.

ஆக, ஆஸ்திரேலியாவில் 4-0 எனற கணக்கில் தோற்றோம். பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கட்களை எறிந்துவிட்டு வந்தனர் என்று சொல்ல முடியாது. அவர்களால், ஆஸ்திரேலிய ‘ஸ்விங்கிங் கண்டிஷனில், எகிறிவரும் ஷார்ட்பிட்ச் பால்களை சமாளிக்க முடியவில்லை. இது தவிற ஆஸ்திரேலியர்களின் ‘கொலைவெறி கமென்ட்ஸ்

ரவி சாஸ்திரி போன்ற சிறந்த ஆங்கில புலமை கொண்டவர்களுக்கு ஆஸ்திரேலியர்களின் ‘வசை களுக்கு, அவர்கள் பாணியிலேயே திருப்பிக் கொடுக்கும் வல்லமை இருந்தது. அவர் அந்த மாதிரி வசைகளை ஆதரிப்பவர் இல்லையென்றாலும், அம்மாதிரியான பதில்கள்தான், ஆஸிக்களை ஒரளவுக்காவது அடக்கி வைக்கும் எனப் புரிந்தவர். ஆஸ்திரேலிய மண்ணுக்கு அதுதான் சரி.

இறுதியாக: ஆஸிக்களே! நீங்கள் வெற்றிக்குத் தகுதியானவர்களே! ஆனால் அதை நாகரீகமாக அடையுங்கள். ‘ஸ்லெட்ஜிங் என்பது விளையாட்டுக்கு எதிரானது (Un sportsman like).  கிரிக்கெட் ஜென்டில்மேன்ஸ் விளையாட்டு எனக் கூறப்படுவது உங்களுக்கு எக்காலத்திலும் பொருந்தாதா? மைதானத்தில் போராடுவது, அக்ரஸிவாக இருப்பது வேறு! வசை பாடுவது வேறு! புரிகிறதா?

2 comments:

  1. நல்ல அலசல். ஆனால் நம் டீமிற்கு இந்த ஆஸி. டூரில் இன்னும் கொஞ்சம் போராட்ட குணம் இருந்திருக்கலாம். அவர்களின் விளையாட்டு ஜஸ்ட் ஐபிஎல் க்கு முந்திய ஒரு ஜாலி டூர் சென்ற மாதிரி தான் இருந்தது.

    நம் டீமில் உள்ளவர்கள் ஏற்கனவே பலமுறை ஆஸி.யை எதிர்த்து விளையாடிய அனுபவஸ்தர்கள் தான். எனவே அவர்களின் ஆட்ட அனுகுமுறை தெரிந்தது தானே. பயிற்சியும், அர்ப்பணிப்பும் போதவில்லை என்பதே உண்மை.

    ReplyDelete
  2. //ஹர்பஜன் ‘மா கி..” என்று ஹிந்தியில் சொன்னதை ‘மங்கி’ என்று சொன்னதாக (சிமன்ட்ஸ்) என்ன குதியாட்டம் போட்டீர்கள்?//
    உண்மையாக பார்த்தால், "மா கி.." என்பது மங்கி என்பதை விட கெட்ட வார்த்தை. அதுவும் அவர்கள் அம்மாவை குறித்து.. ஏதோ இதோடு விட்டார்களே..

    ReplyDelete