Tuesday, March 1, 2011

Life After Retirment

ஒவ்வொரு மாதக்கடைசியிலும் தாங்கள் வேலைசெய்து கொண்டிருக்கும்  
நிறுவனத்திலிருந்து பலர் பணி ஓய்வு பெற்றுக் கொண்டுதான் இருக் 
கிறார்கள்.  வேலைக்கு சேரும் போது இருந்த ஆர்வம், உற்சாகம், 
குதூகலம்,  உலகத்தை மாற்றிவிடத்துடிக்கும் உத்தேசங்கள் யாவும் 
வடிந்து,  அடுத்த நாள் முதல் அந்த நிறுவனம் அவருக்கு "மாஜி" என்ற 
அந்தஸ்தை வழங்கிவிடும் அந்த 'ரிடயர்மெண்ட்'  தினத்தை அவர்கள் எதிர் 
கொள்ளும் விதம் சுவாரஸ்யமானது, அலாதியானது.


'ரிடயர்மெண்ட்' பார்ட்டிகளில் - பலர் அழுதுவிடுவதை பார்த்திருக்கிறேன்.  
இந்த அழுகைக்கு என்ன காரணம் என வியந்தபோது 35-40 வருடத்திய 
சொந்தம், பாத்தியதை ஒரு நாள் "சட்டென்று"  அறுபடுவது, இனிமேல் 
நிறுவனத்திற்கு தான் ஒரு 'வெளியாள்' தான் என்ற "விழுங்க இயலாத 
உண்மை"  சுடும் போது அழுகையாக வெளிப்படுகிறதோ எனத் 
தோன்றுகிறது.    இந்த "நிராகரிப்பினை" எதிர்கொள்வது எல்லோருக்கும் 
எளிமையாக இருப்பதில்லை.

(பெண்களை திருமணம் செய்து கொடுத்தபின் தாய்கள் சிந்தும் 
கண்ணீருக்கு காரணமாக - இந்த "பாத்யதை" இழப்பும்  இருக்கிறதோ?)

"ரிடயர்மண்டினை"  ஆண்களும் பெண்களும் எதிர் கொள்ளும் விதம் 
தனித் தனியானவை. பெண்களுக்கு  'சமயலறை' வேலைகளிலிருந்து
எப்போதும் ரிடயர்மண்ட் இல்லையென்பதாலோ என்னவோ அவர்கள் மன ரீதியாக பதிக்கப்படுவதில்லை- தங்களது நண்பிகளை இனி பார்க்க 
இயலாது என்ற 'செண்டிமெண்ட்டைத்' தவிர.

ஆண்கள் 'புருஷ லக்ஷணம்' போய்விடுவதாக எண்ணிக் கொள்வதால், 
மாட்டிக் கொள்கிறார்கள்.

'பொருளாதார' காரணங்கள் பற்றி இப்போது பேசப்போவதில்லை.  அதற்கு முடிவும் இல்லை.  பணியில் இருக்கும்போதே சரியான 
திட்டமிடல்-குடும்ப கடமைகளை கூடுமானவரை முடித்துவிடுவது,
இப்போது பரவலாக கிடைக்கும் 'பென்ஷன்' திட்டங்களை பயன்படுத்திக் 
கொள்வது - போன்றவை மூலம் ஓரளவு பொருளாதார காரணிகளை 
நிவர்த்தித்துக் கொள்ளலாம்.

ஆணால் "மனரீதியான" பாதிப்புகள் எதும் இன்றி எப்படி "ரிடயர்மண்டினை"  எதிர் கொள்வது?


முதலில் தானும் ஒரு சாதாரண ஆசாமி தான்; அலுவலகத்தில் சில 
"காக்கைகள்"   'இந்திரன்-சந்திரன்'  கரைந்ததை உண்மை யென நம்பிக் 
கொண்டு தன்னை "சூப்பர் மேனாக" பாவித்துக் கொள்வதை நிறுத்திக் 
கொள்ள வேண்டும்.  வகித்த பதவிதான் செல்வாக்கினையும்-
பெருமைகளை அளித்தது; பதவி போனபின்னும் நிலைத்து நிற்கும்
புகழ் மட்டுமே (அப்படி ஏதேனும் இருந்தால்) தனக்கு உரியது என உணர 
வேண்டும். 

தாசில்தாரின் நாய் செத்துப் போனதற்கு அலுவலகமே திரண்டு வந்ததாம். 
ஆணால் தாசில்தாரே செத்துப் போனதற்கு 'ஒரு பய' வரவில்லையாம். 

எனவே டப்பாவிற்கு மணம் தந்தது பெருங்காயம் தானே தவிர 
டப்பாவிற்கென தனி மணம் எதும் இல்லை என்பதை உணர்ந்தால் நல்லது. 

 'உயர் பதவி' வகித்து ஓய்வு பெற்றவர்கள் சிலர் பாடுத்தும் பாடு 
விபரீதமானது.  இவர்களுக்கு தனியாக ஏதும் செய்துகொள்ள வராது.
தெரியாது!  'ஏவியே'  பழக்கப் பட்டவர்களுக்கு 'எடுபிடிகள்' யாருமில்லை 
என்ற நிலையில் மனைவி மக்களை படுத்துவது சொல்லி மாளாது.  
எனக்குத் தெரிந்த 'Upper Middle Class'  ஆள் ஒருவர் ஓய்வு பெற்றார்.  
பணியிலிருக்கும் போது 'ஓசி' யிலேயே காலம் தள்ளியவர்.  அலுவலக 
காரை, இஞ்சின் காணாமல் போகும் வரை 'சொந்த வேலைக்கு' 
தேய்த்தவர்.  பேனா முதல்,ரயில் டிக்கட்,  ஏர் டிக்கட், மளிகை சாமான், 
ராத்திரிக்கு டிபன் (அப்படியே வூட்டுக்கார அம்மாவுக்கும் ஒரு பார்சல்)  
வரை மங்களம் பாடியவர். திருட்டு பில்கள், கமிஷன்கள் தனி கணக்கு.  
வீட்டிற்கு   அனுப்பப் பட்டபின் அந்த பந்தாவெல்லாம் நடக்கவில்லை.  
அலுவலகத்தில் நாய்கூட வாலாட்டவில்லை.  வெட்டிப் பந்தா வேலைக்காகாத நிலையில், வேகத்தை மகன்களிடமும், மனைவி யிடமும் காட்ட, பொறுத்து - வெறுத்துப் போன குடும்பத்தினர் 
இந்த ஆளை முதியோர் காப்பகத்தில் கொஞ்சம் 'மரை கழண்ட நிலையில்'  
விட்டு விட்டனர்.

எனவே, ஓய்வு பெறுவதற்கு மனதினை' தயார் படுத்திக் கொள்ள 
வேண்டும்.  பணி ஓய்வு என்பது 'அஸ்தமனமல்ல'.   ஒரு 'எபிஸோட்'
முடிந்திருக்கிறது.  அவ்வளவுதான்.  இந்த நிகழ்வு தனக்கு மட்டும் 
பிரத்யேகமானதல்ல.  உலகில் தெரிந்து கொள்வதற்கும், ரசிப்பதற்கும் பல 
விஷயங்கள் காத்துக் கிடக்கின்றன.  கூடுமான வரை அடுத்தவருக்கு
உதவுவதற்கு முயல வேண்டும்.  இதைச் செய்யவில்லையெனில் நாமே 
'உபத்திரவாளிகள்' ஆகி விடுவோம்.  சோம்பியிருப்பதை விட்டு விட 
வேண்டும்.  காசுக்காக இல்லாவிட்டாலும், எதேனும் ஒரு வகையில் 
தங்களை 'பிசி' யாக வைத்துக் கொள்ள வேண்டும். இது மனதையும்
உடலையும் ஆரோகியமாக வைத்துக் கொள்ளும்.


தத்தமது நம்பிக்கைகளுக்கு ஏற்ற வகையில் 'ஆத்ம விசாரணையில்'  
ஈடுபடுவது நல்லது.  மதம் சாராத 'ஜக்கி வசுதேவோ' அல்லது 
'தெய்வத்தின் குரலோ' படிக்கலாம்.  படித்து, விட்டு விடாமல் 'உணர்ந்து'  
கொள்ள முயலவாவது வேண்டும்.  எவரையும் 'விழுந்து பிராண்டு 
வதில்லை' ,  'என் வேலையை நானே செய்துகொள்வேன்'  போன்ற 
எளிமையான சபதங்களை மேற்கொள்வது அவசியம்.

(முக்கியமாக 'சர்விசின்'   கடைசி சில வருடங்களாவது நேர்மையாக
வேலை செய்ய முயலலாம்)


Friday, February 18, 2011

இஸ்ரோ - அந்தரீக்ஷ் - தேவாஸ்

நம்மில் சிலரேனும் - இஸ்ரோ - தேவாஸ் -எஸ் பாண்ட் ஊழல் பற்றி 
கேள்விப்பட்டு இருப்போம் . நன்பர்கள் சிலரிடம் பேசிப்பார்த்ததில், 
அரசின் எத்தனையோ ஊழல்களில் இதுவும் ஒன்று என தலையை 
ஆட்டிக்கொண்டு சென்று விட்டனர். அப்படி என்னதான் நடந்துள்ளது என 
பார்ப்போமா?


நாம் முன்பெல்லாம் டி.வி எப்படிப் பார்ப்போம்?  மாடியில் படல் போல 
"ஆண்டெனா" கள் அமைத்து. வி.ஹெச்.ஃப்,  யு.ஹெச்.ஃப் முறைகளில்.
ஆரம்பத்தில் UHF, VHF அதிர்வெண்களில் 12 நிலையங்கள் என்று 
தொடங்கி, பின்னர் படிப்படியாக அனலாக் முறையிலேயே 90 
நிலையங்கள் வரை கேபிள் வழியாகக் கொடுக்கமுடிந்தது. இந்த 
தரைவழித் தொலைக்காட்சி தொழில் நுட்பம் நீண்ட நாள் தாக்குப் பிடிக்க 
வில்லை. வானில் செயற்கைக்கோள்களை அனுப்பும் தொழில்நுட்பம் 
முன்னேற முன்னேற, கேபிள் அண்ட் சாடிலைட் தொலைக்காட்சி 
முன்னுக்கு வந்தது. 

பெரும் 'டிஷ்களை' நிறுவி, கேபிள் ஆப்பரேட்டர்கள் சாடிலைட் 
சிக்னல்களை பெற்று, செப்புக் கம்பியால் ஆன கோ-ஆக்ஸ் கேபிள்கள்
மூலம் வினியோகம் செய்தனர். பின்னர் இந்த கோ-ஆக்ஸ் கேபிள்களுக்கு 
பதிலாக 'ஆப்டிகல்' எனப்படும், டிஜிட்டல் முறையில் கேபிள் வழியாக 
சிக்னல்கள் அனுப்பப்பட்டபோது,  200 சானல் களுக்கு மேலும் 
பார்க்கமுடிந்தது. அற்புதமான வீடியோ தரம்.  இந்த ஃபைபர் ஆப்டிக் 
கேபிள்கள் வீட்டுக்கே வந்துவிட்டால்,  ஆயிரக்கணக்கான சேனல்கள் 
பார்க்கலாம். இந்த சூழ்னிலையில் தான் டி.டி.ஹெச் எனப்படும் 
சாடிலைட்ககளிலிருந்து வீட்டிற்கு நேரடியாக சிக்னல்கள் பெறும் முறை 
வந்தது.  கேபிள் அண்ட் சாடிலைட்டும் சரி, டி.டி.எச்சும் சரி, இஸ்ரோ 
அனுப்பியுள்ள இன்சாட் செயற்கைக்கோள்களில் டிரான்ஸ்பாண்டர்களை 
லீஸ் செய்து அதன்மூலமாகவே நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்கின்றன.  
இந்தியாவில்  தூரதர்ஷன், டிஷ் டிவி, சன் டைரைக்ட், டாடா ஸ்கை, 
ரிலையன்ஸ் பிக், ஏர்டெல் என்ற ஆறு நிறுவனங்கள் டி.டி.எச் சேவையை 
தருகின்றன.

முன்பு,  இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு 150 மெகா 
ஹெர்ட்ஸ் அலைக்கற்றை கொடுக்கப்பட்டு இருந்தது. இதற்கு எஸ் 
பாண்ட் அலைக்கற்றை என்று பெயர். இந்த அலைக்கற்றையில்தான் 
முன்பு தூர்தர்ஷன் போன்ற சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. 
பின்னர், இந்த எஸ் பாண்ட்டில் இருந்து, க்யூ பாண்ட்டுக்கு மாறிக் 
கொண்டனர். இதில் இருந்துதான் இப்போது சன், டாடா, ஏர்டெல் என்று பல 
சேனல்கள் டி.டி.ஹெச். ஒளிபரப்பை நடத்துகின்றன. காலியாக இருந்த 
எஸ் பாண்ட்-ஐ வைத்து இஸ்ரோ வியாபாரத்தைத் தொடங்கத் 
திட்டமிட்டது.  இந்த காலியான எஸ் பாண்ட் மூலம்,  பிராட் பேண்ட் 
சேவை தரமுடியும் (வாண் நோக்கிய கிண்ணங்களை அமைத்து). 
இம்முறையில்,அமெரிக்காவில் டி.டி.எச் சேவை வழியாக இண்டெர்நெட் 
இணைப்பும்கூடத் தருகிறார்கள். இந்தியாவில் யாரும் இன்னமும் 
இதனைச் செய்யவில்லை. 


இந்த சமயத்தில், இஸ்ரோவைச் சேர்ந்த டாக்டர் எம்.ஜி.சந்திரசேகர் ஓய்வு பெற்றும், இன்னும் சிலர், இஸ்ரோவிலிருந்து வெளியேறி,தேவாஸ் மல்டி 
மீடியா பிரைவேட் லிமிடெட் கம்பெனியை தொடங்கினர். இவர்கள் 
இஸ்ரோ வசம் உள்ள அதிக சக்தி வாய்ந்த 70 மெகா ஹெர்ட்ஸ் 
அலைக்கற்றையை, இலவசமாக, தங்கள் வசம் கொண்டுவரும் 
முயற்சிக்கு வித்திட்டனர்.  இதை 4ஜி என்று குறிப்பிடலாம். 12 
வருடங்களுக்கு இவர்களுக்கு லைசென்ஸ் தரப்படுகிறது. இஸ்ரோ 
நிறுவனம் தன்னுடைய வர்த்தகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் 
கார்ப்பரேஷன் மூலம் இந்த ஒப்பந்தத்தை செய்தது. இந்த 
ஒப்பந்தத்தின்படி, 12 வருட காலத்துக்குப் பின்னரும் இதைப் 
புதுப்பித்துக்கொள்ளலாம்.


2-ஜி விவகாரத்தில் நாடே கொதித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் 4-ஜி 
விவகாரம் ஒப்பந்தமும் வெளியானதைக் கண்டு பிரதமர் 
அலுவலகத்துக்கு பயங்கர அதிர்ச்சி. இந்த விவகாரம் அரசுக்கு தெரிந்து 
நடந்ததா? இல்லை அரசை ஏமாற்றிவிட்டு அவரைச் சுற்றி இருக்கும் 
பரிவாரங்கள் அலைக்கற்றையை முழுங்கியதா?’ என்ற கேள்விக்குத்தான் 
பதிலை பத்திரிகைகள் தேடுகின்றன.  தெரியாமல் நடந்துள்ளது என்றால், 
இதைவிட கோமாளித்தனம் ஒன்றும் இல்லை. தெரிந்து நடந்தது என்றால், 
நடந்தவைகளுக்கு அரசு பதில் சொல்லியாக வேண்டும். இந்திய அரசிடம் 
இருக்கின்ற சென்சிட்டிவ்வான பல துறைகளில் ஒன்று விண்வெளி. 
இதில் என்ன நடக்கிறது என்பதுகூடத் தெரியாமல் ஒரு அரசு இருந்தால், 
என்ன சொல்ல?  தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், இந்த 
தனியார் நிறுவனம் பேச்சுவார்த்தையை தொடங்கி 2005 ஜனவரி 28-ல் ஓர் 
ஒப்பந்தத்தைப் போட்டது. அந்த ஒப்பந்தம், மத்திய அமைச்சரவைக்கு 
சரியாக விளக்கப்பட்டதா என்று தெரியவில்லை. இந்த ஒப்பந்தத்தின்படி 
இரண்டு செயற்கைக்​கோள்களை இஸ்ரோ விண்ணில் ஏவியாக 
வேண்டும். இதைத்தான் தெரியாது என்கிறது மத்திய அரசு. சாதாரணமாக 
ஒரு செயற்கைக்கோள் தயாரிக்க நூற்றுக்கணக்கான கோடிகள் 
செலவாகும். சம்பந்தப்​பட்ட அமைச்சருக்கோ, பிரதமருக்கோ தெரியாமல் 
இந்த செயற்கைக்கோள் திட்டம் தொடங்கப்படாது. ஆனால், 
பிரதமருக்குத் தெரியாது என்று இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் 
வெளிப்படையாகப் பத்திரிகையாளர்களிடம் ஒப்புக் கொண்டார். அப்படி​
யானால், பிரதமருக்குத் தெரியாமல் மறைத்தவர்கள் யார்?  

 2-ஜி-யில் சிக்கிக் கொண்ட சில தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள், 
கடந்த ஆண்டே இந்த விவகாரத்தை வெளியே லீக் செய்தார்கள். சட்ட 
அமைச்சகம், ''மற்ற போலீஸ் துறைக்கும் ராணுவத்துக்குமே ஸ்பெக்ட்ரம் 
அலைக்கற்றை பற்றாக்குறையாக உள்ள நிலையில், மல்டி மீடியாவுக்கு 
ஒதுக்கத் தேவையில்லை!'' என்று அறிவுரை கூறியது.  2005-ம் ஆண்டு 
ஒதுக்கப்பட்டு, எல்லா பணிகளும் முன்னோட்ட நடவடிக்கைகளும் 
முடிக்கப்பட்ட பின்னர், 2010 ஜூலை மாதம்தான் கூடுதல் சொலிசிட்டர் 
ஜெனரல் மோகன் பராசரனின் பரிசீலனைக்கு இந்த ஃபைல் அனுப்பி 
வைக்கப்பட்டு இருக்கிறது. 2005-ல் தேவாஸ் நிறுவனத்துக்காகத் 
தயாரிக்கப்பட இருந்த செயற்கைக்கோளுக்கு அனுமதி கேட்டு, 
கேபினெட்டுக்கு இஸ்ரோ ஃபைல் அனுப்பும்போது, சட்டப் பரிசீலனை 
செய்யப்படவில்லை என்பதுதான் உண்மை.  அதற்குப் பின்னால்  
பரிசீலனை செய்யப்பட்டதா?  அப்போதும் இல்லை. இவர்களுக்குப் பயம் 
வந்ததே ஸ்பெக்ட்ரம் 2-ஜி விவகாரம் வெடித்து... சி.பி.ஐ. வழக்குப் பதிவு 
செய்த பிறகுதான். அதன் பிறகும்கூட தடுப்பு நடவடிக்கையில் 
இறங்காமல், மறைக்கும் காரியங்களில்தான் இறங்கினர் அதிகாரிகள்.


கடந்த 7-ம் தேதி, பத்திரிகைகளில் செய்தி வெளிவந்ததுமே லைசென்ஸ் ரத்து என்று அறிவித்தாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்​பட்டார்கள்!
தவறு என்று தெரிந்தும், பல நாள் வரை ஏன் ஒப்பந்தத்தை ரத்து 
செய்யவில்லை? காரணம், தேவாஸ் நிறுவனம் ஏற்கெனவே இந்த 
ஒப்பந்தத்தை வைத்து முதலீடுகளைப் பெற்றுள்ளதோடு இந்தியன் 
ரயில்வேக்கும், இன்டர்நெட் சேவைகளை வழங்க சில 
முன்னோட்டங்களையும் செய்து காட்டி வருகிறது. இதோடு, 
இஸ்ரோவின் ஆன்ட்ரிக்ஸுக்கும், தேவாஸுக்கும் இடையேயான 
ஒப்பந்தத்தை ரத்து செய்தால் அதற்குக் கோடிக்கான தொகையை 
ஆன்ட்ரிக்ஸ் கொடுக்க வேண்டியது வருமாம். 


முறைகேடான 2-ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களையே ரத்து செய்ய முடியாது என்று சொல்லி வருவது மாதிரி இதிலும் சிக்கல்கள் உண்டு. ஆக, 2-ஜிக்கு  இணையான சிக்கல்களில் இப்போது 4-ஜியிலும் மாட்டிக்கொண்டுள்ளது.
இரண்டு செயற்கைக் கோள்களையும், அதில் இருந்து அலைவரிசைகளை பகிர்ந்தளிக்கும் 10 டிரான்ஸ்​பாண்டர்களையும், தாரை வார்க்கும் விவகாரத்துக்கு இஸ்ரோவின் தலைவராக இருந்த மாதவன் நாயர், அப்போது பிரதமரின் முக்கியச் செயலாளராக இருந்த டி.கே.ஏ. நாயர் ஆகிய இருவர் மட்டுமே பொறுப்பா? அவர்களைப் பின்னால் இருந்து இயக்கிய மனிதர்கள் யார் யார்? இதெல்லாம் அடுத்த கட்ட விசாரணைகளில் தெரியவரும். பிரதமரின் இன்றைய செயலாளர் சந்திரசேகருக்குத் தெரியாமல் எதுவும் நடந்திருக்காது என்கிறார்கள். 

தற்போது, 'பி.கே.சதுர்வேதி, ரோடாம் நரசிம்மா ஆகிய இரு அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று பிரதமர் உத்தரவிட்டு இருக்கிறார்.

இந்த நாடும் அதன் மக்களும் - உலக நாடுகள் மத்தியில் இன்னும் எத்தனை-எந்தனை விஷயங்களுக்கெல்லம் வெட்கித் தலைகுனிய வேண்டுமோ தெரியவில்லை!



நன்றியும் மூலமும்: பல்வேறு நாளிதழ்கள் / வார இதழ்கள்.

Sunday, February 6, 2011

பண்பாட்டுக் கண்ணாடி.


சாலைகளில் மக்கள் நடந்துகொள்ளும் முறை, அந்த நாட்டின்  பண்பாட்டினைக் 
காட்டும் என்பர்.   இந்த அளவுகோல்படி பார்க்கப் போயின், நாமும் நமது நாடும், 
பண்பாடு குறைந்தவர்களாகவோ, ஏன், பண்பாடே அற்றவர்களகவோதான் 
கருதப்பட வேண்டும்.  


பாதசாரிகள் எனப்படுவோர் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் எப்படி 
வேண்டுமானாலும் சாலை கடந்து செல்லக் கூடும். இவர் "கடக்க வேண்டும்" என 
தீர்மானித்த கணமே அதை நிறைவேற்றி விடுவார்.  பத்திரமாக அந்தப்பக்கம் 
போவதை பிற வாகனங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.  


"ஆட்டோ" க்கள் மஹா விஷ்னு போல. எந்த நேரத்திலும், எந்த இடத்திலிருந்தும் 
தோன்றலாம்.  இவர் காட்டும் 'சிக்னல்கள்' கிட்டத்தட்ட அவரது 
மனதிற்குள்ளே இருக்கும். "ஒன்வே"  என்பதும் "ராங் சைடு" என்பதும் இவரது 
அகராதியிலிருந்து நீக்கப்பட்டு விட்டன். "இந்த வாகனத்தின் உடன்பிறப்பான 
'ஷேர் ஆட்டோ'  எனும் அவதாரம் எங்கு வேண்டுமானலும் எந்த கணத்திலும் 
நிற்கலாம்; டிக்கட் ஏற்றலாம்-இறக்கலாம்.  எச்சரிக்கையும்- பொறுப்பும், பின்னால் 
வந்து கொண்டிருக்கும் வாகனங்களுக்குத்தான். 


'பஸ்கள்' நிறுத்தத்தில்தான் நிற்க வேண்டும் என்ற அவசியமில்லை.  அதற்கு 
முன்பாகவோ, பின்பாகவோ நடு ரோட்டில் நிறுத்தலாம். அந்த பஸ்களிலிருந்து 
"குதித்து வெளியேறும்" பயணிகள் மீது மோதாமலிருக்க நீங்கள் "உங்கள் இஷ்ட்ட 
தெய்வத்தை" வேண்டிக்கொண்டு புறப்படுவது உசிதம்.


இது தவிர 'ராங்' சைடில் எப்போதும் வந்து கொண்டிருக்கும் சைக்கிள்கள், 
மோட்டார் சைக்கிள்கள் போன்ற உப தூதர்கள் தனி ரகம். இவர்கள் "காதுக்கும்-
தோள்பட்டைக்கும் இடையே" எப்போதும் "செல்பேசிகளில்"  கதைத்துக் 
கொண்டுருப்பதை கவனிக்காதது உங்கள் குற்றம். 


இது தவிர கட்டிடம் கட்டுவோர் சாலையில் குவித்து வைத்திருக்கும் மணல், கற்கள்,முனிசிபலிடி நோண்டி வைத்திருக்கும் மரணக்குழிகள் போன்ற "போனஸ்" 
உபத்திரவங்கள் உண்டு. ஏதேனும் விபத்து நடந்து விட்டால் சம்பந்தப்பட்டோரும்,  
சமாதானப்படுத்தி "காசு பார்க்க வரும்"  இதற்காகவே காத்திருக்கும் அழையா 
"கட்ட பஞ்சா யத்துக் காரர்"  களும்-அவர்களது "தீந்தமிழ் "சொற்களும் தமிழ் கூறும் 
நல்லுலகிற்கே உரித்தானவை .


வெளி நாட்டில் 'ஹார்ண் அடிப்பதே' நாகரிகமற்ற செயலாக கருதுவார்களாம்.  



"Road behaviour" என்பது தானாகவோ மந்திரத்தாலோ வந்துவிடாது! நாமேதான்
அவற்றை கற்றுக்கொள்ள வேண்டும்.  கற்பிக்க வேண்டும். முதலில் நமது 
"இம்மாதிரியான செயல்கள் நாகரிகமற்றது எனவும்-சக பயணிகளுக்கு 
உபத்திரவம் தரக்கூடியது எனவும்-முன்னேறிய நாடுகளில் இம்மாதிரியெல்லாம் 
நடந்து கொள்ள மாட்டார்கள்" எனவும் உணர வேண்டும். நடக்குமா இது? 




Friday, February 4, 2011

அநித்யம்.


நேற்று எனது பின் வீட்டுக்காரர் காலமானார். வாழ்வின் அநித்யம் ஒன்றும் புதிய 
விஷயமில்லை. பிறந்த கணம் முதற்கொண்டே இறப்பை நோக்கிய பயனம் தான். 
இறப்புத் தேதி தெரிந்து விட்டால் அதைப்போல நரகம் வேறோன்றுமில்லைதான்.  


ஆயினும் காலையில் ஆரோக்கியமாக என்னுடன் பேசிக் கொண்டிருந்த மனிதர்
மதியம் மறைந்தார் என்பது திடுக்கிட வைக்கிறது.


இறப்பிற்கு 10 நொடிகள் முன்வரை கலகலப்பாக பேசிக்கொண்டு, வேலை 
செய்துகொண்டிருந்தாராம். நொடியில் மரணம் சம்பவித்து விட்டது.  வாழ்வின் 
"நிச்சயமான அநித்யம்"   நேராக முகத்திற்கெதிரே வந்து நிற்கும்போது - 'மனித 
வாழ்வு' எவ்வளவு அற்பமானதாகத் தெரிகிறது?


இவை யாவும் தெரிந்தும் நாம் "விட்டேனா பார்",  "வெட்டி வீழ்த்து அவனை" 
என்ற சூளுரைகளை விடுவதாக இல்லை. தனி மனிதனுக்கும் - ஏன் நாட்டிற்கும் 
கூட இது பொருந்தும்!


'யக்ஞ ப்ரஷ்னத்தில்" யக்ஷன் கேள்வி கேட்டானாம்..."உலகில் ஆச்சரியமானது 
எது?" "நிதமும் மனிதன் மடிந்து கொண்டே இருக்கிறான்.. அதை பார்த்துக்
கொண்டேயும் இருக்கிறான். ஆனாலும் தான் மட்டும் சாசுவதமாக இருப்பது போல 
பாவித்து கொண்டு நடந்து கொள்கிறானே அது தான் ஆச்சரியம"  என தர்மர் 
பதிலளித்தாராம்.



"ஆர்கெஸ்ட்ரா"

திரும்ண வரவேற்பு நிகழ்ச்சிகளில் "ஆர்கெஸ்ட்ரா" என்று ஒரு சமசாரம் உள்ளது.  இதை எந்த புன்னியவான் கண்டுபிடித்தாரோ தெரியவில்லை. அவரைப்பிடித்து முதல் வரிசையில் உட்கார வைத்து "அனுபவிக்க" வைக்கவேண்டுமென அவா.  


ஆளுயுர ஸ்பீக்கர்கள்-ஹால் முழுவதும்.  "சிந்தஸைகர்கள்" புன்னியத்தில் இதயம் வாய் வழியே வந்து விழுந்து விடுமோவென அஞ்சுமாறு அலறுகின்றன். இதய நோயாளிகள் கொல்லைப்புரமாக கவரைக் கொடுத்துவிட்டு ஓடிவந்து விட வேண்டும்.


இதில் சில இலக்கண்ங்கள் வைதிருப்பார்கள் போலுள்ளது.  
"கீ போர்டு மற்றும் டிரம்ஸ்" வாசிப்பவர்கள் நீள்முடி வளர்க்க வேண்டும். 
ஒரு காதில் கடுக்கன் இருந்தால் கூடுதல் தகுதி.  இவை இல்லையெனில் "ட்ரூப்பில்" இடமில்லை. 


நோஞ்ஞான்- நோஞ்ஞான்களாக பாடகர்கள்-கிகள் இருந்தால் நல்லது.


வால்யூம் கண்ட்ரோலை முழுவதுமாக திருகி வத்திருத்தல் உசிதம். 
பாடகர்களின் 'அபஸ்வரங்கள்' தெரியாமலிருக்க 'எக்கோ' வையும் உச்சத்தில். 


இனி வரவேற்பு பத்திரிகைகளில் - "ஆர்கெஸ்ட்ரா" இருந்தால் 'கவரை' மட்டும் யாரிடமாவது கொடுத்தனுப்பிவிட உத்தேசம்.



Sunday, January 30, 2011

எதற்காக "பிலாக்"கில் எழுத வேண்டும்?


இந்த 'தனி வலை' அல்லது "பிலாக்கில்" ஏன் எழுத வேண்டும் என 
யோசித்தால் சிறு வயதில் 'கணக்கு நோட்டின் கடைசி பக்கத்தில்" 
எழுதிப்பார்த்த 'வெண்பாக்களின்'  அல்லது கட்டுரைகளின் - ஆசைத்தொடர்ச்சி போல் தெரிகிறது.  கிட்டத்தட்ட ஆரம்ப எழித்தாளர்கள் அனைவரும் முயன்று பார்த்த "கையெழுத்து பத்திரிகை" போல.    நானும் எழுதுவேன் என கிணற்றுக்குள்ளிருந்த்து கத்தும் முயற்சியோ என்னவோ?    "சுஜாதா" சொன்னது 
போல 15 நிமிட புகழுக்கு ஆசையா? அல்லது தன்னைப் பிரகடனப் படுத்திக்கொள்ளும் ஆசையா?   வடிக்கட்டிப் பார்த்தால் தோன்றியதை 
யோக்யமாக எழுதிவைக்க ஒரு இடம்..என்னைப்பொருத்தவரை அவ்வளவுதான்.


======================================================


கடந்த ஒரு மாதமாக BSNL -ல் "தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான"   பிரச்சாரங்கள் 
ஒரு திருவிழாபோல நடந்து முடிந்தது.  எது வெல்லப் போகிறது என்பது 03/02/2011 
அன்று தெரியும். போட்டியிடும் இரு முக்கியமான சங்கங்களும் ஓரளவு 'இடது' 
சிந்தனை உள்ளவர்கள் தாம்.  "உலகத் தொழிலாளர்களை" ஒன்று படச் 
சொல்லிவிட்டு 'உள்ளூர் தொழிலாளர்களுக்காக' தேர்தல் நடத்துகிறார்கள். 


BSNL- ன் மார்க்கெட் அதல பாதாளத்தை நோக்கி!    நிதி நிலை படு மோசம்.
வரும் வருமானத்தை வைத்துக் கொண்டு இரண்டு லட்சம் பேருக்கு சம்பளம் 
கொடுக்கவேண்டும்!  கருவிகள் வாங்க வேண்டும் ! ஊதாரி செலவுகள் 
செய்யவேண்டும்!  நேர்மைக்கு புறம்பான வழியில் சம்பாதிக்க முயற்சிகள் தனி! 
அரசாங்கமே தன்னுடைய நிறுவனத்திற்கு எதிராக செயல்படும் வினோதம்! 
எதைப்பற்றியும் கவலை கொள்ளாது - காலத்தை ஓட்டும் -  பொறுப்பற்ற நிர்வாகம்! 
மேல் முதல் கீழ் வரை பணிக்கலாசரம் மறந்த நிலை! 
வேடிக்கை என்னவென்றால்   BSNL  காக்கப்பட வேண்டும் என "அனவரும்"
 "கோட்-சூட்" போட்டுக்கொண்டோ.."ஜோல்னா பை"  போட்டுக்கொண்டோ விடாது 
உபதேசிக்கின்றனர்.


இருவரது பிரச்சாரங்களை கவனித்தால் ....


"எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் கான்பது அறிவு" என்ற குறளில்...
"அறிவு"  என்பதினை "அரிது"  எனப்படித்தால் சரி எனத் தோன்றுகிறது. 


ம்ம்ம்ம்ம்..........................................
=========================================================

Wednesday, January 26, 2011

போட்டாலும் தெரியல..போடாட்டியும் தெரியல...

சிறு வயதில் மூக்குக் கண்ணாடி மீது ஒரு கிரேஸ். இதை அணிந்தால் "ஒரு அறிவு ஜீவித்தனமான லுக்"  வந்துவிடும் என விரும்பியிருக் கிறேன்.  வயது தேயத் தேய இந்த "எக்ஸ்டிரா அட்டேச்மெண்ட்"  தரும் உபாதைகள்  மறந்து எங்கேயாவது வைத்துவிடுவது, உடைந்துபோவது 
என பல விதமானவை.  "தினமும் இதே வேலயாப்போச்சு" என்ற "இன் சொல்லுடன்"  மனைவி தேடிக்கொடுப்பதும் பழகி விட்டது.


மூன்று மாதமாக கண்ணாடி போட்டால் அருகில் இருப்பதும்போடா விட்டால் தொலைவில் இருப்பதும் தெரியாமல் போக, அருகில் உள்ள கண் மருத்துவமனைக்குச்  சென்றேன்.  பழைய கார்டுகள்  (முன்பே அங்கு வந்து சென்றவர்கள்)  பகுதிக்குச் சென்று பதிவு செய்துவிட்டு காத்திருக்க, 
 சற்று நேரத்தில் எனது "கேஸ் ரெகார்டுடன்"  இங்கு 
"பாலாராமன் யார் சார்" மலையாள வாசனையுடன் விளிக்கப்பட்டேன்.  


இந்த ஆஸ்பத்திரியில் "42-கிலோவிற்கு" மேல் போனால் வேலை கிடையாது என்பது போல்,  அனைத்து நர்ஸ்களும் ஈர்க்குச்சி-ஈர்குச்சியாய், பெரும்பகுதி மலையாள உச்சரிப்புடன் உலவுகின்றனர்.


லென்ஸ்களை மாற்றி மாற்றி போட்டுக்காட்டி எது பரவாயில்லை என்று கேட்க, ஒரு கட்டத்தில் எது நன்றாக தெரிகிறது அல்லது இல்லை என குழம்பிப்போனேன். இந்த ஆளுக்கு "டைலேஷன் தான் சரிப்படும்" என தீர்மானித்து,  பாப்பாவை அகலப்படுத்தும் சொட்டு மருந்து போட்டு கண்மூடியிருக்கச் சொன்னார்கள். கண் திறந்தால் அடுத்த  மூன்று மணி 
நேரத்திற்கு உலகமே பிரகாசம்.


ஒருவழியாக எனக்கு வேண்டிய "பவர்" என்ன என்று தீர்மானிக்கப்பட்டு,  
இரண்டு மணி நேரம் காத்திருந்து "கம்ப்யூட்டருக்கு" ஒரு கண்ணாடியும் மற்ற நேரத்திற்கு ஒன்றுமாக இரண்டு பெற்றுக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.


"நடந்தது என்ன..?" என்று விவரித்து விட்டு,  சாப்பாடு போடுவாயா என பிராட்டியாரிடம் வினவ,  "அதெல்லாம் சரி...எங்கே கண்ணாடி?"


ஆஹா...  "ரிசப்ஷன்"  டேபிளிலேயே அவற்றை மறந்து வைத்து விட்டு வந்தது நினவுக்கு வர...மீண்டும் ஆஸ்பத்திரிக்குப் போய்..........



குடியரசு தினத்தன்று செய்தித்தாளில் சில செய்திகள்

  • வெளிநாட்டு வங்கிகளில் ரகசிய கணக்குகளில் இந்தியர்கள் குவித்து வைத்திருக்கும் கறுப்புப் பண  விவரங்களை வெளியிடமுடியாது -மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி திட்டவட்டம் .
  • காஷ்மீரத்தில் "நமது நாட்டு" தேசியக் கொடியேற்றச் சென்ற தலைவர்கள் கைது. (திருப்பூர் குமரன் எதற்காக, யாரால் அடித்துக் கொல்லப்பட்டார்?) 
  • மகாராஷ்டிரா மாநிலத்தில் பெட்ரோல், டீசல் கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்த உதவி கலெக்டர் உயிரோடு எரிப்பு.
  • உத்திரப்பிரதேசத்தில் 2008-ல் அநியாயமாகக்  கொலை செய்யப்பட்டுக்கிடந்தாள் சிறுமி ஆருஷி . போதிய ஆதாரங்கள் இல்லையென வழக்கை முடித்துக் கொள்வதாக கூறியது சி.பி.ஐ.  அச்சிறுமியின் தந்தை புதியதாக விசாரணை வேண்டும் என மனு தாக்கல் செய்ய வந்தபோது கத்தியால் குத்தப்பட்டார். 

Tuesday, January 18, 2011

சபரி மலை சோகம்


நம் நாட்டில் 100 அல்லது 200 பேர் சாவது என்பது பெரிய
 விஷயமில்லை போலிருக்கிறது. நாம் மறத்துப்
போய்விட்டோமா
அல்லது 120 கோடியில் 
கொஞ்சம் 

போனால் என்ன என்று நினைக்கிறோமா அல்லது நாம் 

சாகாதவரை பரவாயில்லை என் சொரிந்துகொண்டு
போகத்துணிந்து விட்டோமா... ஒன்றும் புரியவில்லை..




பல இலட்சம் பேர் - ஒரே நாளில் - ஒரே நேரத்தில் கூடும் 
சபரிமலையில் எந்த நேரத்திலும் - எந்த இடத்திலும் 
இம்மாதிரியான விபத்துக்கள் நிகழக்கூடும் என்பதினை 
கணிக்க முற்றிலுமாக தவறிவிட்டோம்.

மின் வசதி உட்பட எந்தவிதமான அடிப்படை வசதிகளும் 
இல்லாத "புல்மேடு" பகுதியில் லட்சக்கணக்கில் மக்கள் 
குவிய எப்படி அனுமதித்தார்கள்?  4  போலீஸ்காரர்கள்
 போதுமென்றா?  ஒரு மந்திரியோ ஒரு வி.ஐ.பி யோ 
வருவதாக இருந்தால் இப்படித்தான் 4 காவலர்களோடு 
நிறுத்தியிருப்பார்களா?  பல லட்சம்பேர் கூடிய இடத்தில்
இப்படி  ஒரு "மேம்போக்கான" ஏற்பாடா?

வருடா வருடம் கூட்டம் கூடிக்கொண்டே போவதையும் 
அதற்கேற்றாற் போல பாதுகாப்பு  ஏற்பாடுகள் வேண்டும் 
என்பதினையும் யூகிக்கவே  இல்லையா?  
 அரவனை தயார் செய்து "துட்டு" பார்த்தால் போதும் என 
நினைத்தார்களா?

ஒரு ஆபத்து நிகழும்போது - தற்குறித்தனமாக-
 பித்து பிடித்தாற்போல நடந்து கொள்ளும்  நமது 
மக்களின் மனோபவாம் பற்றி ஏதேனும் அறிவார்களா?

சபரிமலை பற்றி தேவஸ்தானக்கமிட்டி தீர்மாணிக்க
 வேண்டிய வேளை வந்து விட்டது. கீழ்க்கண்ட வற்றில் 
ஏதாவது நடந்தால்   எதிர்காலத்திலாவது இம்மாதிரியன
 துயரங்கள் நடவாமல் தடுக்கலாம்.

(1) ஒரு மலைப்பிரதேசத்தில் - ஒரு அளவுக்குமேல் கூட்டம் 
சேர முடியாது   என்பதினை தேவஸம் போர்டு உணர வேண்டும்.
  ஆண்டு முழுவதும் -   வேண்டுமானால் ஒரு சில நாட்கள் 
   நீங்கலாக - சன்னிதானம்   திறந்திருக்க  வேண்டும்.
   Highly Orthodox தந்திரிகள் இக்கால்      தேவைகளையும் -  
   கூட்டத்தினையும் உணர்ந்து ஆட்சேபிக்காமல் - 
    கொஞ்சம் practical ஆக இருக்க   வேண்டும்.

(2)  சீஸன் தரிசனத்திற்கு - முன்னதாகவே பதிவு செய்யதல் 
      கட்டாயமாக்கப் பட வேண்டும்.  குறிப்பிட்ட அளவுக்குமேல்    
      அனுமதியில்லை என கண்டிப்பாக   சொல்லியாக வேண்டும் - 
      குறிப்பாக மகர ஜோதிக்கு!.

 (3)  ISRO - உபயக்கரம் நீட்டியதை பிடித்துக்கொண்டு 
       சன்னிதானத்திற்கு   செல்லவும்- திரும்பவும் மாற்று வழிகளை    
      ஆராய வேண்டும்.

(4)   மலையில் எந்தவொரு இடத்திலும் கூட்டம் சேர 
       அனுமதிக்காமல்        தரிசனம்  ஆனவுடன் "ஆச்சு ....போதும்" 
        என    கீழே அனுப்பிவிட    வேண்டும். இதற்கு   போதுமான 
        காவலர்களை - பக்கத்து    மாநிலத்திலிருந்தாவது கேட்டுப் 
         பெறவேண்டும்.

     ஏதாவது செய்வார்களா...இல்லை அடுத்து ஏதாவது நிகழும் 
    வரை  காத்திருப்பார்களா?


Adharsh Building:

I don’t find any rationality behind the orders of Ministry of Environment to demolish the structure.  Either the dubious allotments may be cancelled or the structure may be acquired by government and used for any useful purpose or the flats may be allotted only to the KARGIL victims by sending out the influential occupants. 

Whether the crores of public money spent for this construction was taken into account before arriving this decision?   It is unbelievable such a massive structure is completed – without the hands of corrupt personnel and bureaucrats, who are trying to exploit the cause of Kargil war widows?

I doubt this “decision” to demolish the structure is an usual ‘GIMMIC’ of our politicians.  One may presume that the demolition will never be carried out and building will stand as an insult to war victims

Saturday, January 15, 2011

திருப்பதி சென்று வந்தேன்.

நண்பர் திரு. செந்தில்குமாரும் நானும்,  என்று சென்றால் கூட்டம் குறைவாக இருக்கும் என ஊரெல்லாம் விசாரித்து "போகி-பொங்கல்" அன்று சென்றால் "சுலப தரிசனம்" பெறலாம் என தீர்மானித்து போகி அன்று திருப்பதி சென்றோம்.


ரூபாய் 50 முதல் வெங்கடாசலபதி தரிசன டிக்கட்டுகள் துவங்க - நாங்கள் எங்களுக்கு கட்டுப்படியாகும் ரூ.300/-த்  தேர்ந்தெடுத்து 'கியூ' வரிசையில் நின்றோம்.  டிக்கட் கௌண்டர்களும் - தரிசன காத்திருப்பு இடங்களும் ஆடு - மாடுகள் அடைக்கப்படும் பட்டிகளை நினைவூட்ட - நாங்களும் அவைகள் போலவே விரட்டப்பட்டோம்.  


நமது மக்களனைவரும் போகியன்று  குப்பைகளை கொளுத்தி காற்றை மாசுபடுத்துவதிலுமோ  - "இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் ஆயிரமாவது முறையாக" தமன்னாவை தரிசித்து பொங்கல் கொண்டாடுவதிலிமோ 'பிஸி'யாகியிருப்பார்கள்"  என நினத்தது தவறோ என்பது போல எங்கெங்கு காணிணும் மனிதத் தலைகள்.


சன்னிதானம் நெருங்க-நெருங்க பக்தர்கள் 'மாக்களாகவே" நடத்தப்பட்டனர் -  நடந்தும் கொண்டனர்.  பெருங்கூட்டத்தினால் செலுத்தப்பட்டும், பிழியப்பட்டும் கண  நேர தரிசனம் பெற்றோம்.


"இல்லை சார்..இன்று கூட்டம் மிகவும் கம்மி,    மற்ற நாட்களில் இதப்போல ஆயிரம் மடங்கு" என கலவரப்படுத்தினார் - திருப்பதிக்கு சீசன் டிக்கட் வைத்திருக்கும் ஒருவர்.


தேவஸ்தானத்திற்கு மனிதாபினமே இல்லையா?  வருபவர்களை பக்தர்களைப் போலன்றி கால் நடைகளைப் போல ஏன் நடத்த வேண்டும்? கொஞ்சம் கௌரவமாக தரிசனம் செய்யவிடலாமே என்ற சலிப்புடனும் - எரிச்சலுடனும் எனது மனைவியை ஓரிடத்தில் அமர்த்திவிட்டு - பெருமாளைப்போலவே பிரசித்தம் பெறற் 'லட்டு" வாங்கச் சென்றோம்.  அப்போது இரவு மணி ஒன்பது. 


லட்டு கவுண்டரிலிருந்து திரும்பும்போது "அங்கிள்,   உங்க ஆண்ட்டி மயக்கமடைந்து, நினைவில்லாமல் கீழே விழுந்து கிடக்கிறார் "   என எதிர் கொண்டு அழைத்தனர், செந்தில் குழந்தைகள்.  எனது மனைவியைத்தான்  சொல்கிறார்கள் .  35 வருட மண வாழ்க்கை மின்னல் போல் வந்து மறைந்தது.  


எனக்கு முன்னால் பாய்ந்து ஒடினார் செந்தில். இம்மாதிரியான இக்கட்டான நேரத்தில் எல்லாம் உடன் இருக்க வேண்டிய சாபம் அவருக்கு! வரம் எனக்கு.


அங்கேயிருந்த 'செக்கியூரிடிகள்" 108 -க்கு போன் செய்ய அடுத்த வினாடி வந்தது தேவஸ்தான 'ஆம்புலன்ஸ்'.  அதற்கு அடுத்த மூன்று மணி நேரத்தில் நடந்தவை யாவும் நம்ப இயலாதவை.  'எமெர்ஜென்ஸி' யில் இருந்த டாக்டர் செய்த முதலுதவிகள் - அக்கறையுடன் கூடிய சிகிச்சைகள். அடுத்து அவர் 'ரெஃபெர்' செய்த அப்போலோ 'கார்டியாலஜிஸ்ட்டின் ' ட்ரீட்மெண்ட். அந்த மாதிரியான நேரத்தில் இருக்க வேண்டிய வேகம்- தீர்மானம்- மனித நேயம்-  நம்பிக்கையளித்தல்- உடன்  வந்தவர்களுக்கு "பேஷன்டின் கண்டிஷன்" பற்றி எடுத்டுரைத்த பாங்கு... "மேல் நாடுகளில் மட்டுமே சாத்தியம் " என்று நினத்துக் கொண்டிருந்த யாவும் நனவாயிற்று. ஒரு இக்கட்டான நிலையிலிருந்து மனைவியை மீட்டுக்கொடுத்தனர்.   "திருமலை திருப்பதி தேவஸ்தான அஸ்வினி மருத்துவமனைக்கும் பணியிலிருந்த அனைவருக்கும்"  உடனுறை செந்திலுக்கும் அனந்தகோடி நமஸ்காரங்கள்' 


பட்டிகளில் அடைக்கப்பட்டும் விரட்டப்பட்டும் பெற்ற தரிசனத்தினையும் - மருத்துவ மனையில் கிடைத்த முதல்தர அனுபவமும் முரண்படாக தோன்றின.   யோசித்ததில் கோளாறு தேவஸ்தானதில் அல்ல!!   நம்மிடையேதான்.


இதைவிட வேறுவிதமாக கூட்டத்தினை தேவஸ்தானத்தினரால் "மேனேஜ்' செய்யவே முடியாது என்கிற அளவில் பக்தர்கள் கோடிக் கணக்கில்.    சுய கட்டுப்பாடே இல்லாத இந்த கூட்டத்தினை கட்டுக்குள் கொண்டுவருவது வேறு எங்ஙனம்? 




"தீக்குள் விரலை வைத்தாலும் - உணர வேண்டிய " அனுபவத்தினை "திருமலையில் மட்டுமே உணர முற்பட்டதால்"  வந்த வினை!.  


வாழ் நாளில் ஒருமுறை வந்தால் மட்டுமே போதும் - "ஜென்ம சாபல்யம்" கிடைத்துவிடும் என்கிற  லிஸ்டில் அவசரமாக சேர்க்கப்பட வேண்டிய ஊர்களில் சில - திருப்பதி - சபரிமலை - காசி.

Thursday, January 13, 2011

BSNL என்ன ஆகும்?

ஆரூடமோ அல்லது ஜோஸியமோ சொல்வதாக உத்தேசமெதுவுமில்லை. BSNL வீழ்ச்சி நாடறிந்த ஒன்று.  இதற்கு TRAI மற்றும் அரசியலை குறை சொல்வது உண்மையாகவும் கொஞ்சம் சௌகரியமாககூட இருக்கிறது.  அதையும் மீறி அவர்களால் ஒன்றுமே செய்யமுடியாதா? வீழ்ச்சிக்கு அவர்கள் எந்த வகையிலும் காரணமில்லையா?  - தனியார்களின் போட்டியில் கானாமல் போகப்போகிறார்களா?  "வண்ண - கண்ணாடி" யேதும் அனியாமல் பார்தால் செய்யக்கூடியவற்றை கூட செய்யவில்லை என்பது புரியலாம். 


ஒரு வருடம் முன்பே அரசு 3ஜி-க்கு அனுமதி அளித்து விட்டது - வேறு போட்டியே இல்லாமலிருந்த அந்த சந்தர்பத்தை முழுமையாகப் பயன்படுத்திக்  கொண்டார்களா?


எதிர்காலம் பிராட் பேண்ட்-ல் இருக்கிறது எனத்தெரிந்தும் என்ன திட்டமிட்டோம்? உதாரணத்திற்கு நெய்வேலியிலும் - அண்ணாமலை நகரிலும் - புதுப்பாளயத்திலும்
நம்மால் கேட்டவுடன் இணைப்பு தந்தோமா? மோடமும் -மற்ற கருவிகளும் முன்னதாகவே வாங்க ஏன் திட்டமிடவில்லை? அப்படி திட்டமிட்டு கேட்டவர்களுக்கு மேலிடத்தில் கருவிகள் கொடுத்தார்களா?  எது POTANTIAL AREA  என்பது கண்டறியப்பட முடியாத இரகசியமா? இந்த இலட்சணத்தில் பிராட் பேண்ட் வேணுமா வென நிமிஷத்துக்கு ஒரு SMS. 


புது கருவிகள் வாங்க "டெண்டர்" போட்டதில் எத்தனை குளறுபடிகள்?


ஏகச் சக்ரவர்த்தியாக கோலோச்சிக்கொண்டிருந்த காலம் மலை ஏறிவிட்டது என்பதினை நிஜமாகவே புரிந்து கொண்டார்களா? 


பழுது வந்தால் நீக்குவதற்கு எத்தனை மணி நேரம் எடுத்துக்கொள்கிறார்கள்? பழுது நீக்க தேவையான இன்ன பிற SPARES கைவசம் உண்டா?  குறைந்த பட்சம் புது கனைக்ஷன் கேட்டவர்களுக்கு INSTRUMENT உண்டா?


அவர்களுக்கு சற்றும் பழக்கமில்லாத - அனுபவமில்லாத - ஒரு கழுதத்றுக்கும் போட்டியினை (Cut throat competition) சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதையாவது உணர்கிறார்களா?  துரதிர்ஷ்டம் என்னவென்றால் BSNL மேனேஜர்களும் தொழிலாளர்களும் போட்டிக்கு தயாராக இல்லை என்பது மட்டுமில்லை. படு மட்டமாடன "சிவப்பு நடா" முறைக்குத்தான் இவர்கள் பழக்கப்பட்டவர்கள் என்பது உண்மயா?   எந்த பிரச்சினைக்கும் "கைகாட்டி"  வேலைதான் நடக்கிறதா?


எத்தனை "விதுரர்கள்" வயிற்றுக்கு BSNL"-  மனதிற்கு "தனியார்" என  வைத்திருக்கிறார்கள்?  RETIRE -ஆன மறுதினம் தனியாரிடதில் வேலைக்கு சேர்ந்த உய ரதிகாரிகள்" எத்தனை பேர்? இவர்கள் பணியிலிருக்கும்பொது என்னவெல்லாம் தனியா ருக்கு சாதகமாக "தில்லுமுல்லு" செய்திருப்பார்கள்? 


எரியும் வீட்டில் பிடுங்கியது வரை லாபமென "எல்லா வகையிலும் "  "திருடுபவர்கள்" எத்தனை நபர்கள்? 


மேலேயிருந்து கீழ்வரை எத்தனை பேர் பத்து மணிக்கு பணிக்கு வருகின்றனர்?  கூடுமான வரையாவது கஸ்ட்டமர்களுக்கு உதவி செய்வோம் என்கிறர்களா அல்லது அங்கேபோ- இங்கெபோ என விரட்டுகிறர்களா?  ITI -போல ஆக தயாரகிவிட்டார்களா? 


ஒருவருக்கொருவர் அடித்துகொள்வதை கொஞ்சகாலம் விட்டுவிட்டு ஊழலுக்கும் - ஊதாரித் தனத்திற்கும் -  - வேலை செய்யாதவர்களுக்கும் எதிராக போரா டுவார்களா? 


சேவை மேம்பட்டுக்காக நம்மால் முடியக்கூடிய திட்டங்களை தயாரித்து அதனை நடைமுறைப்  படுத்துவர்களா?


இல்லை சம்பளமே தரமுடியாத நிலை வந்தால்தான் புரிந்து கொள்வார்களா?....


BSNL என்ன ஆகும்?

Monday, January 10, 2011

Fact or Myth?

Different Phases of a man:
After engagement: Superman
After Marriage: Gentleman
After 10 years: Watchman
After 20 years: Doberman
------------ --------- --------- --------- --------- ---------

There is only one perfect child in the world and every
Mother has it.
There is only one perfect wife in the world and every
Neighbour has it
------------ --------- --------- --------- --------- ---------

Prospective husband: Do you have a book called "Man,
The Master of Women"?
Sales girl: The fiction department is on the other side, sir.




------------ --------- --------- --------- --------- ---------

The world's thinnest book has only one word written in
it: "Everything" ;
and the book is titled: "What Women Want!"

------------ --------- --------- --------- --------- ---------

A man who surrenders when he's WRONG, is HONEST.
A man who surrenders when he's NOT SURE, is WISE.
A man who surrenders when he's RIGHT, is a HUSBAND


------------ --------- --------- --------- --------- ---------


Girlfriends are like chocolates, taste good anytime.
Lovers are like PIZZAS, Hot and spicy, eaten frequently.
Husbands are like Dal RICE, eaten when there`s no choice.


------------ --------- --------- --------- --------- ---------

Man receives telegram: Wife dead - should be buried or
Cremated?
Man: Don't take any chances. Burn the body and bury the ash.


------------ --------- --------- --------- --------- ---------


Q: Why dogs don't marry?
A: Because they are already leading a dog's life!


------------ --------- --------- --------- --------- ---------


Fact of life: One woman brings you into this world crying &
The other ensures you continue to do so for the rest of your Life!


------------ --------- --------- --------- --------- ---------


Q: Why doesn't law permit a man to marry a second
Woman?
A: Because as per law you cannot be punished twice for the
same offence .

------------ --------- --------- --------- --------- ---------

Man: I want a divorce. My wife hasn't spoken to me in six
months.
Lawyer: Better think it over. Wives like that are hard to get!

------------ --------- --------- --------- --------- -------


The bride, upon her engagement, went to her mother & said,
"I've found a man just like father!"
Mother replied, "So what do you want from me, sympathy?"


------------ --------- --------- --------- ---------