Sunday, February 6, 2011

பண்பாட்டுக் கண்ணாடி.


சாலைகளில் மக்கள் நடந்துகொள்ளும் முறை, அந்த நாட்டின்  பண்பாட்டினைக் 
காட்டும் என்பர்.   இந்த அளவுகோல்படி பார்க்கப் போயின், நாமும் நமது நாடும், 
பண்பாடு குறைந்தவர்களாகவோ, ஏன், பண்பாடே அற்றவர்களகவோதான் 
கருதப்பட வேண்டும்.  


பாதசாரிகள் எனப்படுவோர் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் எப்படி 
வேண்டுமானாலும் சாலை கடந்து செல்லக் கூடும். இவர் "கடக்க வேண்டும்" என 
தீர்மானித்த கணமே அதை நிறைவேற்றி விடுவார்.  பத்திரமாக அந்தப்பக்கம் 
போவதை பிற வாகனங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.  


"ஆட்டோ" க்கள் மஹா விஷ்னு போல. எந்த நேரத்திலும், எந்த இடத்திலிருந்தும் 
தோன்றலாம்.  இவர் காட்டும் 'சிக்னல்கள்' கிட்டத்தட்ட அவரது 
மனதிற்குள்ளே இருக்கும். "ஒன்வே"  என்பதும் "ராங் சைடு" என்பதும் இவரது 
அகராதியிலிருந்து நீக்கப்பட்டு விட்டன். "இந்த வாகனத்தின் உடன்பிறப்பான 
'ஷேர் ஆட்டோ'  எனும் அவதாரம் எங்கு வேண்டுமானலும் எந்த கணத்திலும் 
நிற்கலாம்; டிக்கட் ஏற்றலாம்-இறக்கலாம்.  எச்சரிக்கையும்- பொறுப்பும், பின்னால் 
வந்து கொண்டிருக்கும் வாகனங்களுக்குத்தான். 


'பஸ்கள்' நிறுத்தத்தில்தான் நிற்க வேண்டும் என்ற அவசியமில்லை.  அதற்கு 
முன்பாகவோ, பின்பாகவோ நடு ரோட்டில் நிறுத்தலாம். அந்த பஸ்களிலிருந்து 
"குதித்து வெளியேறும்" பயணிகள் மீது மோதாமலிருக்க நீங்கள் "உங்கள் இஷ்ட்ட 
தெய்வத்தை" வேண்டிக்கொண்டு புறப்படுவது உசிதம்.


இது தவிர 'ராங்' சைடில் எப்போதும் வந்து கொண்டிருக்கும் சைக்கிள்கள், 
மோட்டார் சைக்கிள்கள் போன்ற உப தூதர்கள் தனி ரகம். இவர்கள் "காதுக்கும்-
தோள்பட்டைக்கும் இடையே" எப்போதும் "செல்பேசிகளில்"  கதைத்துக் 
கொண்டுருப்பதை கவனிக்காதது உங்கள் குற்றம். 


இது தவிர கட்டிடம் கட்டுவோர் சாலையில் குவித்து வைத்திருக்கும் மணல், கற்கள்,முனிசிபலிடி நோண்டி வைத்திருக்கும் மரணக்குழிகள் போன்ற "போனஸ்" 
உபத்திரவங்கள் உண்டு. ஏதேனும் விபத்து நடந்து விட்டால் சம்பந்தப்பட்டோரும்,  
சமாதானப்படுத்தி "காசு பார்க்க வரும்"  இதற்காகவே காத்திருக்கும் அழையா 
"கட்ட பஞ்சா யத்துக் காரர்"  களும்-அவர்களது "தீந்தமிழ் "சொற்களும் தமிழ் கூறும் 
நல்லுலகிற்கே உரித்தானவை .


வெளி நாட்டில் 'ஹார்ண் அடிப்பதே' நாகரிகமற்ற செயலாக கருதுவார்களாம்.  



"Road behaviour" என்பது தானாகவோ மந்திரத்தாலோ வந்துவிடாது! நாமேதான்
அவற்றை கற்றுக்கொள்ள வேண்டும்.  கற்பிக்க வேண்டும். முதலில் நமது 
"இம்மாதிரியான செயல்கள் நாகரிகமற்றது எனவும்-சக பயணிகளுக்கு 
உபத்திரவம் தரக்கூடியது எனவும்-முன்னேறிய நாடுகளில் இம்மாதிரியெல்லாம் 
நடந்து கொள்ள மாட்டார்கள்" எனவும் உணர வேண்டும். நடக்குமா இது? 




1 comment:

  1. I hope, when our primary school education is strengthened, these 'ususal' habits may be somewhat reduced.

    Jothivel,
    Kurinjipadi.

    ReplyDelete