Monday, September 22, 2025

NRI கள்.

NRI க்கள், குறிப்பாக அமெரிக்க வாழ் இந்தியர்கள் குறித்து, பல ஆண்டுகளுக்கு முன் திரு சுஜாதா அவர்கள், தனது மேன்மையான, தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் விவரித்திருப்பார். இன்றுகூட செல்லுபடியாகும் கட்டுரை அது.

ட்ரம்ப் அவர்களது புதிய 'டாரிஃப்' (வரிகள்) அதிரடிகள் ஆரம்பித்தபின், American NRI க்களை திரும்ப அழைத்துக் கொண்டால் என்ன / திரும்ப வந்துவிட்டால் என்ன என்னும் விவாதங்கள் பொது வெளிகளில் தவங்கியுள்ளன.

Facebook பதிவுகளில் எழுதுவது போல, அவ்வளவு எளிய காரிமா அது?  நடைமுறைப் படுத்தப்படுவது  கடப்பாரையை விழுங்குவது போல சாகசமான விஷயம்.

பொதுவாக NRI கள் என விளிக்கப் பட்டாலும், அடிப்படையில், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்தில் இருக்கும் NRIs-க்கும், கல்‍ஃப், ஆப்பிரிக்கா நாடுகளில் இருக்கும் NRIs-க்கும் வித்தியாசம் மிக அதிகம்.

கல்‍ஃப் அல்லது ஆப்பிரிக்காவில் இருக்கும் NRI ஒருபோதும் அங்கே நிரந்தரமாக வாழமுடியாது என்பதை மனதளவில் ஏற்றுக் கொண்டுவிட்டார். என்றேனும்  ஒருநாள் இந்தியா திரும்பியே ஆகவேண்டும் வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்கிறார். அவர்களில் பலர் ஒவ்வொரு வருடமும் இந்தியா வந்து செல்கிறார்கள். குழந்தைகள் பெரும்பாலும் கல்லூரி படிப்புக்கு இந்தியாவையே தேர்வு செய்கிறார்கள்.. ஆரம்ப சிக்கல்கள் இருக்கும், ஆனால் படிப்படியாக அனைத்தும் வழக்கமாகி விடுகிறது.  மேலும் கல்‍ஃப் NRIக்கு எவ்வித இல்யூஷன்களும் இல்லை; — “நான் வேலை செய்யவும், பணம் சம்பாதிக்கவும் தான் இங்கே வந்திருக்கிறேன்” என்பதை உணர்ந்துள்ளனர். 

அங்கே குடியுரிமை கொடுக்கப்படும் வாக்குறுதிகளெல்லாம் கிடையாது. இது ஒரு ஒப்பந்தம்; எல்லா விதிகளையும் தெரிந்து கொண்டே கையெழுத்திடுகிறார்கள்.

அங்கே குடியேற்றக் கொள்கைகளை ஒரே வார்த்தையில் சொல்வதானால், நேரடி “NO!”.   இது தெளிவானது; சிக்கல் மிகுந்த விதிகள் அற்றது.   இருதரப்புக்கும் பயனுள்ளதும்கூட.  ஆப்பிரிக்காவின் டான்சானியா, சாம்பியா, போட்சுவானா, கென்யா, உகாண்டா, நைஜீரியா, காணா போன்ற பல நாடுகளிலும் இதே போலத்தான்.

(இப்போது கல்‍ஃப்பில் அறிமுகமான Golden Visa வேறுவகை; செலவு பிடிப்பது. Workforece க்கானது அல்ல.)

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா! இங்கேதான்  விஷயம் சிக்கலாகிறது.

இந்த நாடுகளுக்கள் நுழைவது நீங்கள் ஒரு “highway”-க்கு நுழைவது போல!  service lane-இல்லை, U-turn இல்லை, shortcut இல்லை. திரும்பி வருவது கிட்டத்தட்ட முடியாத ஒன்று.

சிக்கல்களின் நிலைகள்:


1. நீங்கள் நாட்டுக்குள் வந்த விதமே நேராக இல்லை. Student Visa, Skilled Worker Visa என்று பெயரிட்டு வந்தாலும், உங்களது உள்ளார்ந்த நோக்கம் குடியுரிமை தான் என்பதைக் குடியேற்ற அதிகாரிகள் நன்றாகவே அறிவார்கள். இந்த “நடிப்பு”தான் முதல் பெரிய மனஅடைப்பு. 


2. ஒரு வருடம் கூட service போடாமல் இல்லாமல் சொத்துகள் வாங்க அனுமதி கிடைக்கும். வீட்டுக் கடன் சுமை உங்களை கட்டிப் போடும். வயிற்றிலிருக்கும் குழந்தை பெரிதாகும் வரைகூட கடன் வாங்க வைப்பார்கள். Great Credit Nation the USA.


3. குடியுரிமை / Green Card / H1B என்று கிடைத்தவுடன் “புது பாஸ்போர்ட் = புது அடையாளம்” என்ற போலியான பெருமை வரும். உண்மையில், பாஸ்போர்ட் மாறினாலும், நீங்கள் இன்னும் வெளிநாட்டவராகவே, அங்கே  பார்க்கப்படுகிறீர்கள். இனரீதீயான பார்வை (ஆப்ரிக்க, காக்கேஷியன் இருவரிடமிருந்தும்) தொடரும். இருப்பினும், இந்தியாவுடனான இணைப்பு பாஸ்போர்ட் மாற்றத்துடன் துண்டிக்கப்படுகிறது. வயது அதிகமாகியதால், மீண்டும் மாற்றத்தை ஏற்கும் துணிவு கூட இல்லை. 

4. குழந்தைகள் அங்கே பிறந்துவிட்டால், அவர்களின் அடையாளம் அமெரிக்கர்/பிரிட்டிஷ் என்பதாகி விடுகிறது. நீங்கள் எவ்வளவு கீதா வகுப்பு, பாரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் கற்றுக் கொடுத்தாலும், அவர்கள் தங்களை அமெரிக்கராகவே கருதுவார்கள். No இண்டியன்.

5. ஒருவேளை ஆண் விரும்பினாலும், பெண் விரும்பமாட்டாள். குடும்பத்திற்குள் கருத்து வேறுபாடு. 

உண்மை நிலை ஏன்ன வென்றால், நீங்கள் விட்டுச் சென்ற இந்தியா, இன்றைய இந்தியா அல்ல. இங்கே நீங்கள் “special” இல்லை. சலுகையெல்லாம் கிடையாது.  

அமெரிக்கர்களோடு சேர்ந்து கொண்டு, பாம்பாட்டிகளும்-பரதேசிகளும் வாழும் நாடு இந்தியா என, இனி  வர்ணிக்க இயலாது.மும்பையில் iPhone வாங்க நிற்கும்  வரிசை, அமெரிக்க க்யூக்களை  விட பெரியது.

நீங்கள் கால்குலேட்டரில்,  டாலரை ரூபாயாக மாற்றி mall களில் கணக்கிடும் போது, அடுத்த டேபிளில் இந்தியக் குழந்தை, Mercedes-ல் வந்து, iPhone 17-ல் Apple Pay செய்து விட்டு போய் விடுகிறது.

பெங்களூரில் பள்ளி மாணவர்களே AI start-up நடத்துகிறார்கள்; ஆனால் நீங்கள் Excel Sheet, PMP, Zoom Call-களில் ஆண்டுகளை வீணாக்கியிருக்கலாம்.

அமெரிக்கா / இங்கிலாந்து / கனடா செல்லும் முடிவு — தீர்மானமான முடிவே.  திரும்ப வரும் வாய்ப்பு மிகவும் குறைவு.

அதனால் உணர்ச்சிவசப்பட்ட முடிவுகள் வேண்டாம். Pragmatic-ஆக இருங்கள். அங்கேயே நிலை கொண்டு, உங்களது hard work, value system, work ethics-ஐ நிரூபியுங்கள். அங்கேயே போராடி உங்களை நிரூபித்து தங்கிக் கொள்ள முயல்வதே புத்திசாலித்தனம்.

நீங்கள் இந்திய தூதராக — இந்திய கலாச்சாரத்தை உலகத்திற்கு பரப்பும் ஒரு பரப்பாளியாக நினைத்துக்கொள்ளுங்கள்.

இங்கேயும் பாதைகள் யாவும் மலர்ககளால் நிறைந்திருக்க வில்லை. போட்டிகள் இங்கேயும் உண்டு. Intellectual warfare  இங்கே அதிகம். தவிர மத, பிராந்திய மோதல்கள் இருக்கு! 

Be there! Best of luck NRIs! 

No comments:

Post a Comment