நாடகாசிரியர்,
நடிகர்,
எழுத்தாளர்,
பத்திரிகை ஆசிரியர்
வழக்கறிஞர்,
அரசியல் விமரிசகர்,
பேச்சாளர்,
புத்தி சாதூர்யம்,
பன் மொழிகள் அறிந்தவர்....
எல்லாவற்றிற்கும் மேலாக மகா தைரியசாலி.
தனக்கு சரியென்று தோன்றுவதை, எழுத சொல்ல தயங்காதவர்.
அவருடைய பதில்களில் இருக்கும் புத்திசாலித்தனமும், ப்ரஸன்ஸ் ஆஃப் மைண்டும் ரசிக்கக் கூடியவை.
அகில இந்திய அளவில் மிகப்பெரும் நபர்களுடன் தொடர்பில் இருந்தவர். அவர்கள் யாவரும் இவர் மேல் மிகப்பெரிய அளவில் மரியாதை கொண்டிருந்தனர்.
அரசியல் நிகழ்வுகளில் சோ என்ன சொல்கிறார் என்பதை அனைவரும் அறிய ஆவல் கொண்டிருந்தனர்.
அவரது ஆலோசனைகள் யாவும் பின்பற்றப்பட்டதோ இல்லையோ, உன்னிப்பாக கவனிக்கப்பட்டன.
அலாதியான நகைச்சுவை உணர்வு கொண்டவர்.
தமிழகத்திற்கு பெருமை சேர்த்த பலருள் சோ முக்கியமானவவர்.
அவரது தொலைக்காட்சிக் காட்சி நாடகங்கள் யாவும் இன்றும் ரசிக்கக்கூடியவை.
இந்து மகா சமுத்திரம் போன்ற உன்னத புத்தகங்களை எழுதியவர்.
தமிழ்நாட்டில் அருகிப் போயிருந்த Satire கலையை முழுமையாக தனதாக்கிக் கொண்டவர்.
அனைத்து நிகழ்ச்சிகள் பற்றியும் துக்ளக் என்ன சொல்கிறது என்பதை அறிய அனைவரும் ஆவல் கொள்வர்.
அரசியல் சாணக்கியன்.
நாட்டில் ஏற்பட்ட பல்வேறு கூட்டணிகள்/மாற்றங்களுக்குப் பின்னால் அவரது மூளை, உழைப்பு இருந்திருக்கிறது.
அவருக்கு இருந்த ஆகப்பெரிய மனிதர்களின் தொடர்பை தனக்காக ஒருபோதும் பயன்படுத்திக் கொள்ளாதவர்.
நேர்மையாளர்.
இந்தியக் கலச்சாரத்தின் உயரிய மாண்புகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்காதவர். அவை போன்ற மனிதர்களை இனி காண்பதரிது.
தமிழகத்தைவிட்டு மற்றுமொரு மலர் உதிரந்துவிட்டது.
சிரம் தாழ்ந்த அஞ்சலி.
No comments:
Post a Comment