காலை
இட்லி டிஃபன், மதியச் சாப்பாடு, பின் தூக்கம் என எத்தனை நாட்களுக்குத்தான்
போரடித்துக் கொண்டிருப்பது? மகளுக்குத் திருமணம், பேரன்களைப் பார்த்தல் என அனைத்தும்
முடிவடைந்துவிட்டது. பணி ஓய்வுக்குப் பின் பெறும் பென்ஷனைச் சேர்த்துவைத்து, அவ்வப்போது
காணடித்துக் கொண்டிருப்பது (தொலத்துவிடுவது) சலிப்பாக இருக்கவே, பட்ஜட்டுக்கேற்ற
வெளி நாட்டுப் பயணங்களை மேற்கொள்வது எனத் தீர்மாணித்தபொழுது, டெம்ப்ளேட்டாக
அனைவரும் முதலில் விரும்பும் சிங்கப்பூர்-மலேஷியாவைத் தேர்ந்தெடுக்காமல், இலங்கை
சென்றேன்.பின் பாலி, துபை சென்றேன். இன்னமுமா ‘சிங்கை’ செல்லவில்லை என்ற இரங்கற்பா
துரத்த, சிங்கை-மலேஷியா-தாய்லாந்து செல்ல, ‘சேர்க்க’ ஆரம்பித்தேன்.
சிங்கப்பூர் குறித்து ‘மயக்கம்’ ஏதுமில்லை. யாரும் பார்க்காத, எழுதாத புதிய விஷயங்கள் ஒன்றுமில்லை.
ஆனால் கன்வென்ஷன்லான
ரிவர் சைட் சிட்டி, பார்க், பறவைகள் பூங்கா, மிருகக்காட்சி சாலை
ஆகியவற்றைத்தவிர, என்னைக் கவர்ந்த ஒரு இடம் ‘கார்டன்ஸ் பை தெ பே’ !
அது ஒரு மகாப் பெரிய தோட்டம். உலகின் அனைத்துத் தாவர
மாதிரிகளையும் மிகப் பிரமாண்டமான குளிரூட்டப்பட்ட அரங்கில்
நிர்மாணித்திருக்கிறார்கள். அடேயப்பா... அதை அரங்கமென்று சொல்வது தவறு! ஒரு குட்டி
நகரமே! எவ்வளவு பெரிதாக செய்திருக்கிறார்கள்? ஆர்கிடெக்கின் அற்புதம் அது.
‘அவதார்’ படம் நினைவிருக்கிறதா? அதில் ஒரு மாய அருவி
கொட்டுமே, அதை நினைவூட்டும் வகையில் ஒரு செயற்கை அருவி! என்னே அழகு! இருபத்தைந்து மெகா செயற்கை மரங்களும், பயோ
டோம்களும் பிரமிக்க வைக்காவிட்டால்தான் ஆச்சர்யம். இந்த அலங்காரங்களை இரவில்
பார்க்க வேண்டும். ஒரு குட்டித் தீவில், இத்தனை ஜாலங்கள் சாத்தியமா?
யூனிவர்ஸல் ஸ்டுடியோ என்று ஒரு ஹைடெக் தீம்பார்க். 4டி
தியேட்டர்கள், மாளாத ரோலர் கோஸ்டர்கள், ஒலி-ஒளி ஏற்பாடுகள் என ஒரு சுற்றுலாத்
தலத்திற்கு என்னென்ன செய்யமுடியுமோ, அத்தனையும் இங்கே! ஜுராஸிக் பார்க் ரைட், எகிப்து மம்மி ரைடுகள் கிரங்கடிக்கும். அருகே ஒரு
மிகப் பெரிய அக்கோரியம்.
சிங்கப்பூர் சரவணா ஸ்டோரான ‘முஸ்தஃபா’ கடைக்கு, ஏதோ
நேர்த்திக் கடன்போல அழைத்துச் செல்கிறார்கள். ‘வேணாம்யா... நான் வர்ல...எல்லா ஊர்லேயும் எல்லாமும்
கிடைக்கிறது.. ‘ என்றாலும் விடமாட்டேன்
என்கிறார்கள். லிட்டில் இந்தியாவை மட்டும் தண்ணீர் தெளித்து விட்டார்கள் போல. இங்கே
மட்டும் தெருவில் குப்பைகள்.
மாலையில்,
கடற்கரையில், கடல் நீரைப் பீய்ச்சியடித்து-அதன் நீர்த்துவாலைகளில், லேசர்
ஒளிக்கற்றைகளால், வர்ணஜாலம் காட்டுகிறார்கள். ஸ்டன்னிங் ஷோ.
சிங்கை முடித்து, சாலை வழியே மலேஷியா!
பத்துமலை முருகன் கோயிலையும், அதன் சுற்றுப்புரத்தையும் எதற்காக இவ்வளவு குப்பையாக வைத்திருக்கிறார்களொ
தெரியவில்லை. கிட்டத்தட்ட நம் ஊர் கோயில் போல மாற்றிவைத்திருக்கிறார்கள்.
(அருகில் இருக்கும் டார்க் கேவ்ஸ் அவசியம் செல்லுங்கள்.)
பேக்கேஜ் டூரில் சென்றால்,
இரட்டைக் கோபுரத்தைப் பார், முருகனைப் பார், ஜென்டிங்
மலை-கேசினோக்களைப் பார், பார்லமெண்டைப் பார்.. என்று சம்பிரதாயமான இடங்களுக்கு. என கடிவாளம் கட்டி
அழைத்துச் செல்வர். சுல்தாணின் அரண்மணையை தூர இருந்து பார்க்கலாம். உண்மையில் ஜெம்
ஐலண்ட், பினாங்க், செலங்கோர், Teluk Senangin, Perak என மறைவாக இருக்கும் சொர்க்கங்கள் ஏராளம்.
மலேஷியாவை அனுபவிக்க, சென்னையிலிருந்து இயங்கும் பேக்கேஜ் டூர் உகந்தது அல்ல. நாமே டூரிஸ்ட் விசா வாங்கிக்கொண்டு, கோலாலம்பூர்
சென்று, உள்ளுர் டூர் ஆபரேட்டர்களிடம் சொல்லி நமக்குத் தேவையான இடங்களுக்குச்
செல்வது தான் உசிதம்.
பின்,
கோலாலம்பூரிலிருந்து, பாங்காங்கிற்கு ஏர் ஏஷியா விமானம். நம் ஊர் பெரியார் பஸ் போல நெருக்கடியான
சீட்டிங்குகள். பைலட் என்னவோ, தொண்டை கட்டிக் கொண்ட சவுண்ட் சிஸ்ட்த்தில், கிணற்றுக்குள்ளிருந்து
பேசினார். நல்ல வேளையாக ‘டாய்லட் போக’ காசு கேட்கவில்லை.
விமானத்தில் சதா,
‘லபா..லபா’ வெனப் பெருங்குரலில்
கத்திக்கொண்டே இருக்கும் சீனர்கள். லேண்ட் ஆன மறுகணம், பாய்ந்து சென்று கேபின் லக்கேஜ்களை
உருவுகிறார்கள். விட்டால் ஜன்னல்களைத் திறந்துகொண்டு கீழே குதித்துவிடுவார்கள் போல!
இடித்துப் பிடித்திக்கொண்டு இறங்கி ஓடுகிறார்கள்.
சீனாவில் பெண்கள் மொபலைப்
பிரசவித்துவிட்டு, பின் இலவச இணைப்பாக, ஒரு குழந்தையைப் பிரசவிப்பார்கள் போல! ஸ்மார்ட் ஃபோண் அவர்களுக்கு மற்றுமொரு உடல்
உருப்பு. இமிக்ரேஷன் கவுண்டரில் நிற்கும்போது
கூட சோஷல் மீடியாவை நோண்டல்! இமிக்ரேஷன் அதிகாரி, ஸ்கேலால் அதட்டி ‘காமிராவை’
பார்க்கும்படி முறைக்கிறார்கள். இந்திய எல்லைக் கோட்டில், சீன ராணுவத்தினருக்கு
ஆளுக்கொரு மொபைலை இந்தியாவே கொடுத்துவிட்டால், அவர்கள் பாட்டிற்கு ஃபோனில் தலையை
விட்டுக் கொண்டிருப்பார்கள். டோக்லாம் பிரச்சினை தீர்ந்தது.
தாய்லாந்தில்
இந்தியர்களுக்கு ‘விசா ஆன் அரைவல்’. ஆனால்,
இமிக்ரேஷன் ஃபாரம்களை எங்கே பதுக்கியிருக்கிறார்கள், அதை ஃபில் செய்து எங்கே
கொடுக்க வேண்டும் என்பது தெரிய, நீங்கள் ஏகாதசி விரதம் இருக்க வேண்டும். விபரமாக
ஒரு வழிகாட்டும் போர்டு வைக்க்க் கூடாதா? இவ்விஷயத்தில், துபையின் ஏற்பாடுகள் அற்புதம்.
பாங்காக்கில்
பார்க்கும் இடமெல்லாம் தங்க புத்தர்கள். அற்புதமான கட்டிடங்கள், புத்த விகாரங்கள்,
அரண்மணைகள். இரவுகளில் படகில் ஆடல்-பாடல்
இத்தியாதிகளோடு அனுபவிக்கலாம். என்ன? வயது
காணாது! ஒரு இருபது வருடமாவது முன்பாக வந்திருக்கலாம். எழுபது வயதில் ஆடவா இயலும்? வைல்ட் லைஃப் சஃபாலி..சாரி சஃபாரி, டால்பின் ஷோ, டைகர்
பார்க், பறவைகள் பார்க் எல்லாம் உன்னதம்.
பட்டாயாவில் நுழைந்தபோது ஏராளமான மழை. கடற்கரைச் சாலையில்
சாக்கடை பெருக்கெடுத்தோடியது. இதை ஃபோட்டோ எடுத்து முகனூலில் போடட்டுமா என்றேன். கைடு முறைத்தார்.
அவர்களது
ஆங்கில உச்சரிப்பு, பாடாய்ப் படுத்துகிறது.. சஃபாலி என்றல் சஃபாரி. மெத்தோ என்றால்
மெட்ரோ, தாக் என்றால் டாக். லைத் என்றால் அது ரைட். மேலும் ஒரு மாதிரியாக வெட்டி வெட்டி
பேசுகிறார்கள். நல்லவேளையாக, அவர்களது ஆங்கில உச்சரிப்பு எப்படி இருக்கும் என
கூகுளித்துவிட்டுப் புறப்பட்டதால் ஓரளவிற்கு தப்பித்தேன். என்றாலும் நான் தங்கியிருந்த ‘கோல்டன் பீச்’
ஹொட்டலுக்கு வழிகேட்டு மாய்ந்துவிட்டேன்.
பட்டாயவில்
டூ வீலர் டாக்ஸி இருக்கிறது. கூசாமல் 100 பாட் என்பார்கள். நாமும் அதிரடியாக 5 பாட்
என்று கேட்கணும். பத்து பாட்டுக்கு வருவார்கள்.
பட்டாயா
தூங்கா நகரம். அங்கே இரவுதான் பகல். மதுவும்-மாதுக்களும் ஏராளம். நகரெங்கும் ஏராளமான
இரவு விடுதிகள். மதுபான விடுதிகள். ஆண்கள்தான் பட்டாயாவிற்கு என எண்ண வேண்டாம்.
ஏராளமான பெண்களும் வருகிறார்கள் .
அவர்களுக்கென தனியாக மஸாஜ் சர்வீஸ்கள் உண்டு.
எனக்கு
என்ன ஆச்சர்யம் என்றால், கேன் கேனாக, தொடர்ந்து பீரைக் குடித்துக்கொண்டே இருந்துவிட்டு,
இலை போன்ற வயிறும் - மெல்லிய கைகால்களும் இந்தப் பெண்களுக்கு எவ்விதம்
சாத்தியமாயிற்று என்பது தான். பெருந்தொந்தியோடு இருந்தால் அவர்கள் அனேகமாக,
இந்தியர்களாகவோ இல்லை அமெரிக்கர்களாகவோதான் இருப்பார்கள்.
வாக்கிங்
ஸ்ட்ரீட், பீச் ரோட், சோய் 6, செகண்ட் ஸ்ட்ரீட் போன்றவை பிரசித்தம்.
இந்த
வயதில், இந்த ஊரைச் சுற்றிப் பார்க்க தேர்ந்தெடுத்தது எம்பாரஸிங் தான். ‘ஹாய்
இண்டியன் ஓல்ட் மேன், வாட் டூ யூ வாண்?
அடப் போங்கப்பா...
ஆனாலும்
என்ன? அருகில் இருக்கும் கோரல் ஐலன்டில், ஸ்பீட் போட்டில் சென்று, எனக்குப்
பிடித்த ஸ்கூபா டைவ், பாரா செய்லிங், அண்டர் சீ வாக் ஆகியவற்றைப்
அனுபவித்தாயிற்றே!
ஒரு
சில புகைப்படங்களைக் காண இங்கே சொடுக்குங்கள்! Click here
உங்கள்
ReplyDeleteஅனுபவம்
எங்களுக்கு
வழிகாட்டுகிறது !!
பார்க்க வேண்டிய தேசங்கள் தாய்லாந்து சாப்பாடுகளும் மிகவும் இனிமையானது. இந்த தேசங்களுக்கு நீங்கள் சொன்னது போல தனியாக போவதே மேல் குறுப்பாக போகாது!
ReplyDeleteGood narration sir
ReplyDelete