பஞ்சாப்-பாடியாலாவிலிருந்து ஆறு தீவீரவாதிகள் தப்பித்துள்ளனர். சர்ஜிகல் ஸ்ட்ரைக் போல மிக மிகத் துல்லியமாக திட்டமிட்டு தாக்குதல் நடத்தி, கைதிகளை எடுத்துச் சென்றுள்ளனர்
.
தாக்குதல் நடத்தியவர்களின் திட்டம், அவர்களது மோடஸ் ஆபரண்டி அவ்வளவு துல்லியம்.
.
தாக்குதல் நடத்தியவர்களின் திட்டம், அவர்களது மோடஸ் ஆபரண்டி அவ்வளவு துல்லியம்.
இவ்வளவு கடுமையான தீவீரவாதிகள் அடைக்கப் பட்டிருக்கும் ஒரு சிறையில், எவ்வளவு மெத்தனமாக, அதிகாரிகளும், காவலர்களும் செயல்பட்டிருக்கிறார்கள் என்பது கவலைக்குரியது. இம்மாதிரியான சிறைகள் எவ்வளவு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இருந்திருக்க வேண்டும்? எப்படி விதிமுறைகளில் இவ்வளவு தொய்வாக இருந்திருக்கிறார்கள்? சிறைக் காவலர்கள் கேஷூவலாக இருந்திருக்க வேண்டும் அல்லது கூட்டுச் சதியாக இருந்திருக்க வேண்டும்.
எங்கே ஓட்டை, எங்கே கருப்பு ஆடுகள், ஏன் சுணக்கமாகச் செயல்பட்டார்கள் என்பது விரிவாக ஆராயப்பட வேண்டும்; ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள்.
எல்லை மானிலமான பஞ்சாபில் கூட, இப்படி ஒரு Drama நடத்த முடியும் என்பது உள்துறை அமைச்சகத்திற்கு விடப்பட்ட ஒரு சவால்.
பஞ்சாப் தீவிரவாதத்தின் பிடியிலிருந்து விலகி இயல்பாக இருந்து கொண்டிருக்கும் ஒரு மானிலம். இத்தகைய தீவீரவாதிகள் தப்பித்திருப்பது, அம்மானிலம் மீண்டும் தீவீரவாத்த்தின் பிடியில் அகப்பட்டுக் கொள்ளுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்மானிலத்தில் தேர்தல் நடக்க வெகுகாலம் இல்லாத சூழலில், இவர்கள் தப்பித்து இருப்பது, ஜனநாயக சக்திகளுக்கு கவலை தரும் அம்சம்.
இந்த தப்பித்தலுக்குப் பின்னால், பாகிஸ்தான் இருக்கிறது என திருவாய் மலர்ந்திருக்கிறார் துணை முதல்வர் சுக்பிர்சிங் பாதல். பாகிஸ்தான் கை இருக்கிறதோ இல்லையோ, கைதிகள் இந்தியச் சிறையில்தானே இருந்திருக்கிறார்கள்? அந்தச் சிறையிலிருந்துதானே தப்பித்திருக்கிறார்கள்? எதிரிகள்(பாக்) என்றால் அப்படித்தான் இயங்குவார்கள்.
ஏற்கனவே PoK ல் ஒரு போர்முனை ஏற்படுத்தியிருக்கிறது பாக். இன்னொரு முனையாக பஞ்சாபையும் தேர்ந்தெடுப்பதை எதிர்பார்த்திருக்க வேண்டும். காஷ்மீரைத் தவிர்த்து, பஞ்சாபையும் பதட்டமான மானைலமாக மாற்ற பாகிஸ்தான் முயலும்தான். மானில அரசும், மத்திய அரசும்தான் நெருப்பாக இருக்க வேண்டும். தப்பித்த தீவீரவாதிகள் வெளியேற நேபாளம் ஒரு நல்ல வழி. அதை சீல் வைத்திருப்பார்கள் என நம்புவோம்.
நடந்தவற்றை பாடமாகக் கொண்டு, இனியாவது விதிமுறைகளையும், கண்காணிப்பையும் சுணக்கமின்றை மேற்கொள்ள வேண்டும்.
தப்பித்த ஹர்மீந்தர் மின்டூ என்ற தீவீர வாதியை தில்லியருகே கைது செய்திருப்பதாக சமீப தகவல்கள் கூறுகின்றன.
தப்பித்த ஹர்மீந்தர் மின்டூ என்ற தீவீர வாதியை தில்லியருகே கைது செய்திருப்பதாக சமீப தகவல்கள் கூறுகின்றன.
பயங்கரவாதிகளை, விரைவாக விசாரணைக்குட்படுத்தி, தண்டனை தாருங்கள். போட்டுத் தள்ளுங்கள். நிரூபிக்கவில்லையனில் விடுதலை செய்யுங்கள். எத்தனை நாட்கள் அன்டர் டிரையலில் வைத்திருப்பது?
No comments:
Post a Comment