எனது ‘செல்ஃபோனை ’ பேசுவதற்கும்,
தேவைப்படும்போது இன்டர்நெட்டிற்கும், சில சமயம் ‘மேப்பிற்கும்’ பயன்படுத்துவேன். அவ்வளவுதான். கொஞ்சநாள்
முன்பு, எனது உறவினர் ஒருவரது பையன், என் வீட்டிற்கு வந்திருந்தான். வயது நான்கு!
அடுத்த கனமே, எனது செல்ஃபோனைக் கேட்டான். சில நொடிகளில் ஃபோனை நோண்டி, அதில்
இருக்கும் கேம்களை விளையாட ஆரம்பித்து விட்டான். இத்தனை வருடத்தில், அந்த ‘கேம்’ பக்கமே நான் போனதில்லை!
பையனின் திறமை கண்டு பெருமையாகக்கூட இருந்தது!
சில மாதங்களில், அச்சிறுவன், தனது பெற்றோரை நச்சரித்து
ஒரு ‘பிளே ஸ்டேஷன்’ வாங்கிக் கொண்டான். அவனுக்கு இதை வாங்கிக் கொடுத்தது அதிகப்படியாகத்
தோன்றினாலும், அதில் தலையிடுவது ‘வரம்பு மீறிய’ செயலாகக் கருதப்படும்
அபாயமிருந்ததால் வாளாவிருந்தேன்.
இல்லை.. இல்லை..சிறுவர்களிடையே வரம்பின்றி வளர்ந்துவரும்
வீடியோ கேம் மோகம்,
கவலை கொள்ளத்தக்கதுதான்
என்பதை, சில நாள் முன்பு வெளியான ஒரு ‘குரூர’ நிகழ்ச்சி
நிரூபித்துவிட்டது.
‘பிளேஸ்டேஷன்’ (விலை ரூபாய்
எட்டாயிரம்) ஒன்று வாங்குவதற்காக, சிறுவன் ஒருவன், சென்னையில், சிலரின் துணையோடு,
பக்கத்து வீட்டு ‘மூதாட்டியை’ கொலையே செய்துவிட்டானாம். சொத்திற்காக, பணத்திற்காக, பெண்ணிற்காக,
பெரிசுகள் அடித்துக் கொள்வதையும், வெட்டிக் கொள்வதையுமே சகித்துக் கொள்ள இயலாத
நிலையில், சிறுவன் ஒருவனின் இந்த ‘மகா பாதகச் செயல்’ உண்மையிலேயே மிரளச் செய்துவிட்டது!
அப்படியானால், சிறுவனின் மனதிலும்,
மூளையிலும் ‘வீடியோ கேம் மோகம்’, எந்த அளவு ‘வெறி’ கொண்டிருக்க வேண்டும்?
இத்தனைக்கும் அந்த சிறுவனின், தகப்பனார் சாதாரண ‘செக்யூரிட்டி’ வேலையில்தான்
இருக்கிறாராம். ‘வீடியோ கேம்கள்’ சிறார்களின் புத்தியையும், மனதையும்
தலைகீழாகப் புரட்டிப் போடும் வல்லமை பெற்றது போலும். அந்த அளவிற்கு இவ்வகை கேம்கள்
சிறுவர்களின் மனதில் வன்முறையினை விதைக்கின்றன. வழியில் பார்க்கிறவர்களையெல்லாம்
சுட்டு வீழ்த்திக்கொண்டும், அடித்து நொறுக்கிக் கொண்டும் போகும், இந்த வகை ‘அரக்க’ விளையாட்டுகள்,
குழந்தைகள் மனதில் வன்முறையன்றி வேறதை விதைக்கக் கூடும்? அடிதடியும், கொலைகளும்,
கொள்ளைகளும் சாதாரண விஷயம்தான் என்னும் அளவிற்கு, சிறுவர்களின் மனதை பாழ்படுத்தி
விடுகின்றன.
மிக, மிக அபாயன போக்கு இது!
இந்த கேம்களின் பெயரைப் பாருங்கள்! நமக்கே அச்சமாக இருக்கும்! ‘அடித்து நொறுக்கு’, ‘எரித்துத்
தள்ளு’, ‘ரோட் ரேஷ்’. என்ன ஒரு
சாந்தமான பெயர்கள்!
பள்ளியில், வாரம் ஒரு பீரியட் ‘மாரல்
சயின்ஸ்’ போதித்துக் கொண்டு, மற்ற நேரம் முழுவது இந்த வன்முறை
விளையாட்டுகளில் ஈடுபட்டால், இவ்வாறான சொற்கள் மனதில் ஆழமாகப் பதிந்துவிடாதா? மாரல்
சயின்ஸால் என்ன பயன் விளையும்? இவர்களுக்கு, குற்றங்களின் பால், குற்றமற்ற உணர்வு,
இயல்பாகவே வந்துவிடும். ‘வன்முறை’ குறித்து, இவர்களுக்கு அச்சமேதும்
இருப்பதில்லை! பெற்றொர்களில் சிலர், தங்களது விடுமுறை தினங்களை சிறுவர்கள் பறித்துவிடாமலிருக்க, 'பொது பிளே ஸ்டேஷன் செண்டர்களுக்கோ' அல்லது வீட்டிலேயே வீடியோ கேம்களையோ வாங்கிப் போட்டு
விடுகின்றனர். அடுத்த முறை தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தால் ‘பிளேஸ்டேஷன்’ வாங்கித்தருவதாக,
வாக்குறுதி வேறு அளித்து விடுகின்றனர். இது ஆரோக்கியமான போக்கே அல்ல!
வீடியோ கேம் விளயாடும் சிறார்களை
சற்று உற்று நோக்குங்கள்! அவர்களது உடலும், மூளையும் ‘பர-பர’
வென்றிருக்கும். மூளையின் இந்த தேவையற்ற, நெகட்டிவான ‘ஹைபர் ஆக்டிவ்னஸ்’ தீங்கையே
விளைவிக்கும். விளையாட்டு மைதானங்களில், நிஜமான விளையாட்டுக்களை விளையாடி,
உடலையும், மனதையும் ஆரோக்கியமாக்கிக் கொள்வதை விடுத்து, வீட்டிற்குள்ளேயே அடைந்து
கிடந்து ‘உடலையும், மனதையும்’ பாழ்படுதிக் கொள்கின்றனர். இதனால்தான்
சின்னஞ்சிறு வயதிலேயே ‘பருத்த’ உடல் வாய்த்துவிடுகிறது!
வீடியோ கேம்களில் மூழ்கிப் போன
சிறுவர்களிடம், ‘இனிமேல் வீடியோ கேம்கள் விளையாடக் கூடாது’ என்று
சொல்லிப் பாருங்கள். அவர்கள் எவ்வளவு ‘வயலன்டாக’ ரியாக்ட்
செய்கிறார்கள் என்பது புரியும்!
வியாபார நிறுவனங்கள் யாவும், ‘பிளே-ஸ்டேஷன்கள்’, ’சைபர் கஃபே’, ’கம்யூட்டர்கள்’, ‘ஸ்மார்ட்
ஃபோன்கள்’ என எல்லாவற்றிலும் வீடியோ கேம்களை நிறைத்து
விடுகின்றனர்.
அவர்களுக்கு காசு ஒன்றே குறி!
இது குறித்து எவரேனும் கவலைப்
படவேண்டாமா?
பெற்றோர்கள் இந்த பாதக சூழ்நிலையினை,
எவ்வாறு சமாளிக்கப் போகிறார்கள் என்பது கவலைக்குரியதாக இருக்கிறது! பெற்றோர்கள், தங்களது குழந்தைகளுடன்
நேரத்தை தாராளமாக செலவிட தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக, தந்தைமார்கள் தங்களது
குழந்தைகளோடு விளையாட வேண்டும். அவர்கள் தங்களது உபரி நேரத்தை எவ்விதம்
செலவழிக்கிறார்கள், அவர்களது சேர்மானம் எப்படி இருக்கிறது (நண்பர் வட்டாரம்) என
தெரிந்து கொள்ள வேண்டும்!
வீடியோ கேம்களுக்கு அடிமையாக்க் கூடிய
ஆரம்ப அறிகுறிகள் தெரிந்தாலே (தனது ரூமிற்குள்ளேயே அடைந்து கிடப்பது - நன்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், உணவு,
குளிப்பது எவையும் வேண்டாம்), அதற்கான, தீர்வு நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.
கவனிக்காது விட்டால் psychiatric disorder-ல் தான் முடியும்!
காலத்தே எச்சரிக்கை
மணி ஒலித்து விட்டது! பெரியவர்கள் கவனிப்பார்களா?
மிக அவசியமான பகிர்வு சார். கண், மூளை அனைத்தையும் கெடுக்கிறது இந்த விளையாட்டுகள்
ReplyDeleteநீங்கள் சொன்னது போல் நானும் பல குழந்தைகளை கவனித்துள்ளேன், ஏன் நானே தாறுமாறாய் விளையாண்டுள்ளேன், அது போதை மாதிரித்தான், தடுக்க வேண்டியது பெற்றோரின் கைகளில் மட்டுமு உள்ளது. இக்களத்திற்கு தேவையான பதிவு
ReplyDeleteபடித்துப் பாருங்கள்
தமிழ்நாடு டூரிசமும் மேனரிசமும்
குழந்தைகளுக்கு, பொழுபோக்கிற்கும் பழக்கத்திற்கு அடிமை யாவதற்கும் வித்தியாசம் தெரியாது! பெரியவர்கள்தான் வழி நடத்த வேண்டும். பிரச்சினை என்னவென்றால், வயது வந்தோரில் கனிசமானோர் மது,மாது புகை,ஏதாவது ஒன்றிற்கு அடிமையாகியுள்ளனர். சமீப காலங்களில் இந்த லிஸ்டில் 'போர்ன்' சேர்ந்துள்ளது.
ReplyDeleteகவலையை பகிர்ந்து கொண்ட, திரு மோகன் குமார் மற்றும் திரு.சீனு அவர்கட்கு நன்றி.
Sir, I have written about your blog in my recent post. Please read it in this link:
ReplyDeletehttp://veeduthirumbal.blogspot.in/2012/06/blog-post_20.html
குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பதற்கான மன முதிர்ச்சி பெற்றோர்களிடம் இருக்க வேண்டியது மிக அவசியம்.
ReplyDeleteநீங்கள் எழுதினால் போல் , பெரியவர்களே , பல பழக்கங்களுக்கு ஆளாகி, குழந்தைகளை கவனிக்க, நேரமில்லாமல் கண்டதை வாங்கி கொடுத்து , பொறுப்பு கழிந்ததே என்று,தன் வேலையை பார்க்க போனால் , என்ன ஆகும்!
இப்போதெல்லாம் பெற்றோர் பொறுப்பு மிக அதிகம் . பொறுப்பில்லாத பெற்றோர்களால், சமூகத்துக்கு தலைவலிதான்.