தமிழக விந்தை
அரசியல்வாதிகளுக்கு, பிறந்த நாள் வந்து விட்டால், தினசரிப் பத்திரிக்கைகளுக்கு கொண்டாட்டம்
தான். உடனடியாக விளம்பரங்களைச்
சேகரித்து, ஒரு கால் கிலோவிற்கு, ‘பிறந்த
நாள் வாழ்த்து’ சப்ளிமென்டரி போட்டுவிடுவார்கள்.
ஒரே மாதிரியான ஃபோட்டோவை, பக்கம் பக்கமாகப்
போட்டு, ‘வாழ்த்த வயதில்லை-வணங்குகிறோம்’ என்பது மாதிரியான “ஸ்டேண்டேர்டு வசனங்களோடு”, “தமிழே”, “தமிழின் எதிர்காலமே”, “தமிழ் நாடே”, “தமிழ் நாட்டின் எதிர்காலமே”, “சூரியனே”
, “சந்திரனே”, “சுக்கிரனே”, “இதயமே”, “சுவாசமே”, “இதய சுவாசமே”, “விழியே”, ‘நுரையீரலே”, “கிட்னியே” என
சப்ளிமென்டரி முழுதும், துதித்து மகிழ்வார்கள்.
எப்படி, இவர்களால் அர்த்தமே இல்லாமல், ‘இதயமே’, ‘அதுவே...,
இதுவே..’ என வெட்டியாக துதிபாட முடிகிறது எனப் புரியவில்லை.
‘சுயமரியாதை’, ’தன்மானம்’ போன்ற முழக்கங்கள் எல்லாம், இப்படித்தான் தமிழகத்தில் பொருள்கொள்ளப்
படுகிறதா அல்லது இது நமக்கே உண்டான தனிப்பட்ட கலாச்சாரமா புரியவில்லை!
பத்திரிக்கைகள் இது போன்ற கூத்துக்களை, தனி ‘சப்ளிமென்டரியாகப்’ போடுவதில் ஒரு
சௌகரியம் என்ன வென்றால், இதை அப்படியே கொத்தாக எடுத்து பழைய “பேப்பர் பண்டலோடு” சேர்த்து
விடலாம்.
இந்த சகிக்கவொண்ணா விளம்பரங்களை, தன்மான, இனமானத் தலைவர்கள் யாராவது
பார்க்கிறார்களா? பார்த்து ரசிக்கிறார்கள? அல்லது எரிச்சலுறுகிறார்களா? அல்லது இன்னென்னார்
விளம்பரித்திருக்கிறார்கள், இவர் விளம்பரிக்கவில்லை என ‘அட்டெண்டன்ஸ்’ எடுப்பார்களா?
அவ்விதம் விளம்பரம் செய்யாதவர்கள் மீது ‘அன்புக்கணை’ ஏதும் பாயுமா?
– இவை யாவும் நம் போன்ற சாமாணியர்களுக்கு விளங்காது.
இந்த உற்சவத்தில், லேட்டஸ்ட் வரவாக, ‘சச்சினின் 100 வது சதமும்” சேர்ந்து விட்ட
வினோதத்தினையும் காணும் பேறு கிடைத்த்து! 10டூல்கரின், நூறாவது சதத்தினைப் வாழ்த்தி, “தி ஹிண்டு”
18-03-2012 ஞாயிறு) பாண்டி எடிஷனில், ஒரு
முழுப்பக்கத்திற்கு, கம்பனிகள் விளம்பரித்திருக்கிறார்கள்!
ம்ம்ம்ம்? புதுச்சால்ல இருக்கு?
சரி.. வாழ்த்தின கையோடு, விளம்பரதார்ர்கள் நம்மையெ என்னவெல்லாம் செய்யச்
சொல்லி விளம்பரிக்கிறார்கள்?
(1)
வீட்டிற்கு ஒரு இன்வெர்ட்டர் வாங்கலாம் (2) ஏ.ஸி மிஷின்கள் வாங்கலாம் (3) ஒரு வீடு கட்டிக்
கொள்ளலாம் (4) கண் கண்ணாடி மாற்றிக் கொள்ளலாம் (5) புது சொக்காய் வாங்கிக்
கொள்ளலாம் (6) கேமிராவோ,வாட்சோ,புது மொபைலோ, ஏன் ஒரு சௌன்ட் சிஸ்டமோ கூட வாங்கிக்
கொள்ளலாம். (7) சச்சினின் 100 வது சதத்தினை
ஒட்டி, ‘மாஸ்டர் ஹெல்த் செக்கப்” கூட செய்து கொள்ளலாம்.
......இது அப்படி இருக்கு?
;-)))))))))))))
ReplyDelete