இந்த கோடை விடுமுறைக்கு உறவினரின் குழந்தைகள் வந்திருந்தனர்.
இது எல்லோருடைய இல்லத்திலும் நடப்பது தானே எண்கிறீர்களா?
ஒருமாதம் வீட்டில் குழந்தைகள் இருந்ததாலும், அவர்கள் கூடவே இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததாலும், இக்காலத்திய குழந்தைகளின் போக்கு குறித்து, நெருங்கி பார்க்கும் அனுபவம் ஏற்பட்டது.
எக்காலத்திலும் விடுமுறை என்றதும் பிள்ளைகள், உறவினர் வீடுகளுக்கு செல்வது வழக்கத்திலிருந்து வந்திருக்கிறது என்றாலும், விடுமுறையை குழந்தைகள் எதிர் நோக்கும் விதமும், விடுமுறையை கழிக்கும் விதமும், அவர்கள்து தினசரி நடவடிகைகளும் சற்றே மிரள வைகின்றன. நண்பர்ளுடன் பேசிப் பார்த்ததில், அவர்களும் கிட்டத்தட்ட இதே அனுபவத்தினை பகிர்ந்து கொண்டார்கள். பிள்ளைகளின் நாட்களை டி.வி, கம்ப்யூட்டர், செல்ஃபோன் ஆகியவை நீக்கமற பங்கிட்டுக் கொள்கின்றன.
இது தலைமுறை இடைவெளியின் கோளாறா அல்லது உண்மையாகவே பிள்ளைகளின் நடவடிக்கைகள் திருத்தப்பட வேண்டுமா என்பதை வாசகர்கள் தீர்மாணிக்கலாம்.
1. காலையில் எழுந்ததும் டூத் பிரஷை தேடுகிறார்களோ இல்லையோ, டி.வி ரிமோட்டினை தக்கவைத்துக் கொள்கிறார்கள். அதுவும் இக் காலத்தில் இந்த "பெட்டியை" படுக்கை அறையில் வேறு வைத்து விடுகிறார்களா? எந்த நேரமும் படுத்த படுக்கையாய் ஏதாவது ஒரு கார்ட்டூன் சேனலை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். எங்கள் காலத்தில் இருந்த பம்பரம், கோலி, பச்சை தாண்டல், சடுகுடு, அடிபந்து,கில்லி போன்ற 'பத்தாம் பசலித்தனமான' விளையாட்டுக்கள் வேண்டாம். நவீன விளையாட்டுக்களையாவது விளையாடலாமல்லவா? பிள்ளைகள் என்றால் ஓடி ஆடி விளையாட வேண்டாமா?
டி.வி, குழந்தைகள் பால் ஏற்படுத்தும் விரும்பத்தகாத விளைவுகள் பற்றி பெற்றோர்களுக்கு அவசியம் பாடம் எடுத்தாக வேண்டும். (அவர்களே சீரியல்களில் மூழ்கிக் கிடந்தால் விமோசனமில்லை).
சராசரியாக குழந்தைகள் 2 மணி நேரம் டி.வி பார்ப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. மேலும் ஒரு மணி நேரம் வீடியோ கேமோ அல்லது கம்ப்யூட்டரில் கேமோ பார்க்கிறார்கள்.
உடல் ரீதியாக சுறுசுறுப்பாகவும், துரு துருப்பாகவும் இருக்க வேண்டிய நேரத்தையும், நண்பர்களுன் விளையாடும் நேரத்தையும், பெற்றோர்களுடன் இருக்க வேண்டிய நேரத்தையும் டி.வி எடுத்துக் கொள்கிறது.
இந்த பெட்டி சிறந்த ஆசிரியராகவும், பொழுது போக்கு கருவியாகவும் உள்ளது தான். ஆணால் நல்லதை விட இது செய்யும் கெடுதலே அதிகமாக உள்ளது.
எனவே டி.வி யை பார்க்கும் விதத்தினை கட்டுப்படுத்துவது அவசியமா கிறது.
வண்முறை:
பல கார்ட்டூன் தொடர்கள், "நல்லவர்களை" காப்பாற்றுவதற்காக என்ற பெயரில், வன்முறைக் காட்சிகளையே தொடர்ந்து காட்டுகின்றன. இது குழந்தைகள் பால் மாற்றமுடியாத, குண ரீதியான, தாக்கத்திய ஏற்படுத்தியே தீரும். என்னதான அம்மாககளும், அப்பாக்களும் பிறரை தாக்குவது தவறு என சொல்லிக் கொடுத்தாலும், இந்த டி.வி க்கள் 'நல்லவன்' அவ்வாறு செய்வது தவறில்லை என வற்புறுத்தி சொல்லிக் கொடுக்கின்றன. இந்த "டி.வி நல்லவர்கள்", "தீயவர்கள்" மேல் செலுத்திடும் வன்முறை குழந்தைகளை ஒன்று பயமுறுத்துகின்றன அல்லது அவர்களையே வன்முறையாளராக மாற்றி விடுகின்றன. ஏனெனில் பிள்ளைகள் fantasy -க்கும் reality-க்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள இயலாத வயதினர்.
உடல் பருமனாதல் மற்றும் ஆரோக்கியம்:
விடாமல் டி.வி பார்த்தல், உடல் நலத்தை பாதித்து, சிறு வயதிலேயே பருமனாகி விடுகின்றனர். பணம் ஒன்றையே நோக்கமாக கொண்ட வியாபார நிறுவனங்கள், நிகழ்ச்சிகளினூடே வரும் விளம்பரங்கள் மூலம், பிள்ளைகளை உடல் நலக் கேடான உணவுகளை (ஜங்க் ஃபுட்ஸ்) உண்ணுமாறு வற்புறுத்துகின்றன. சிப்ஸ், பர்கர், பீட்ஸா, ஒன்றுக்கும் உதவாத 'கோலா' பாணங்கள் - இவைகளை உதாரணமாகச் சொல்லலாம்.
அதிகமாக டி.வி பார்க்கும் குழந்தைகள் சுறுசுறுப்பின்றியும், நொறுக்குத் தீனி பிரியர்களாகவுமே இருக்கிறார்கள்.
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இவற்றைப் பற்றியெல்லாம் பத்திரிக்கைகளில் விபரமாக வந்துள்ளன.
சரி.. இவற்றை தடுப்பது எப்படி?
1. டி.வி பார்க்கும் நேரத்தினை கண்டிப்பாக கட்டுப்படுத்த வேண்டும்.
(ஒரு நாளைக்கு 30 நிமிடம் தான்)
2. குழந்தைகள் அறையினை, புத்தகங்கள், puzzles, board games ஆகியவற்றால்
நிரப்பலாம். அவற்றை பயன் படுத்த உற்சாகப்படுத்தலாம்.
3. டி.வி யினை படுக்கை அறையினை விட்டு வெளியேற்ற வேண்டும்.
4. சாப்பிடும் போது, ஹோம் வொர்க்- போது டி.வி.க்கு ஆஃப்.
5. வாரம் ஒரு நாளாவது 'டி.வி இல்லாத நாளாக' இருக்க வேண்டும். அன்று
'ஸ்டேடியம்', 'ஸ்விம்மிங் பூல்' எங்காவது செல்லலாம்.
6. பெற்றோர்கள்ளே டி.வி முன் பழி கிடக்காமல் 'உதாரணமாக' இருந்து
காட்டலாம்.
7. குழந்தைகளுடன் டி.வி. பற்றி பேசுங்கள். நிதானமாக. ஆதரவாக.
பொறுமையாக, புரியும்படியாக. (டி.வி பார்க்காதே என காட்டுக்
கத்தலாக அல்ல)
8. உபயோகமான புரோகிராம்களை பிள்ளைகளுக்கு சொல்லிக்
கொடுங்கள் - கூட இருந்து.
9. அவர்களுடன் விளையாடுங்கள். கூடுமானல் வெளியே.
10. குழந்தைகள் முன்னால், பிறரிடம் பேசும்போது, என் குழந்தைகள் டி.வி
பார்ப்பதை விரும்புவதில்லை என் பெருமையாகச் சொல்லுங்கள் -
அவர்கள் காதில் விழும்படியாக.
----