https://youtu.be/vYom7SuLZ7g?si=8ALuccK8zs5A7Bg_
பலராமன் பக்கங்கள்
எல்லோரும் இன்புற்றிருக்க நினப்பதுவேயல்லாமல் வேறோன்றும் அறியேன்...
Saturday, August 31, 2024
Thursday, August 29, 2024
USA and India at present.
'If Trump wins then the Deep State plans to destabilize india politically and on the economic front with the help of opposition Pappus, like
Bangladesh ( 2024)
Srilanka ( 2022)
Pakistan ( 2023)
Indonesia ( work in progress, with Pope visit on)
Thailand ( work in progress)
Will go waste. I think deep state needs a vaccum head and Kamla winning decides it's very existence.
US sponsored " Arab spring" couldn't shake Saudi , the largest country in Middle East. It took the right steps to crush the idiots and rascals , keeping the stability and economy of the country in mind. ( In the process saved UAE as well). There is a lesson for India that Saudi can impart.
The deep state' won't hesitate to eliminate any world leader, including it's own leader, if their ambition is shaken; or even questioned.
Failed firing is a lesson not only for that country, but also for the nations who are showing some objection to their heinous plans. They know, how to arm twist India. For their gain. Pappu, BD and PAK will readily help their big masters happily.
Unfortunately, in inland , Pappu & co parties lost it's integrity over India , and turned as a great boot lickers of US. May be Pappu have alliance with PAK, BD, kambodia etc. to throw out the our nation.
Picture are getting clear now: they need a dummy president and Kamala is readylily available. Hard days ahead for Bharat. We have to save Modiji at any cost. They perfectly ubnormalused our relationship with PAK , BD SL etc. With our limited choices , it could be hard task.
We r almost Targetted.
Let's fight with our force and strategy.
Tuesday, August 27, 2024
,இந்தீயாவின் மீது அமேரிக்கப் பீடீ
அமெரிக்க டீப் ஸ்டேட் என்பது பத்து தலை ராவணனில்லை. நூறு தலை ராவணன். இதை ஒரு போஸ்டில் எழுத முடியாது. அதன் விஷத்தலை.. ஜார்ஜ் சோரோஸ், அவரின் மகன் அலெக்ஸ் சோரோஸ், இப்போது இவர்களின் புதுத்தலை. சிஐஏ இவரையும் இவரின் பணபலத்தையும் நம்பி, டோனல்ட் லூ போன்ற ஆட்சி மாற்றம் செய்யும் ஆசாமிகள், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகளை, தங்களுக்கு சாதகமாக இல்லாத பட்சத்தில் மாற்ற பல தில்லாலங்கடிகளை செய்வார்கள். இப்போது ஆபரேஷன் ரிமூவ் மோதி சூடு பிடித்துவிட்டது.
இந்தியாவின் அமெரிக்க அம்பாஸிடர் கார்செட்டியின் நாட்கள் எண்ணப்பட்டு விட்டது. அங்கு கம்லா மாமி, ஜெயிக்கும் தூரத்தில் இல்லை என்பது நிதர்சனம். ஓபாமா போன்ற ஓநாய்களுக்கு, மாமி மாதிரி டம்மி பீஸ் கிடைத்தால், ஈரானை அடிக்கலாம். அமெரிக்க புது ராணுவ தளவாடங்களை ஏவி பார்க்கலாம். அமெரிக்க வரிப்பணம் இப்படி மிஸைலாக மாறும். இதில் இந்த டீப் ஸ்டேட் ஆசாமிகள் எண்ணை கிணறுகளை அள்ளுவார்கள்.. உக்ரெயினின் வளப்பமான நிலங்களை பட்டாபோட்டு விட்டார்கள். யூரோப் முழுக்க.. எதுவும் விளைக்காதீர்கள் பணம் தருகிறேன் என்று செயற்கையான பஞ்சத்தை உருவாக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவில்..நிழலான ஆசாமிகளை அவர்களின் வீட்டுக்கே சென்று கவனிக்கிறார்கள் அமெரிக்க அத்தான்கள். ஓவைசி முதல், விவசாயி என்கிற போர்வைக்குள் ஒளிந்திருக்கும் பெர்மனன்ட் ஃபுல் டைம் போராளிகள்.. ஓமர் அப்துல்லா வரை, சந்தித்து டூல் கிட்டுகின்றனர். பாஜகவை ஓரம்கட்டுங்கள் என்று நட்பு கட்சிகளுக்கே மிரட்டல்கள். ரெட்டிகள், நாயுடுவை நெருக்கும் நாடகம் ஆரம்பிக்கும்போல் இருக்கிறது. கமலா மாமியின் உதவி பிரஸிடன்ட் எக்ஸ்ட்ரீம் இடது. இவர்கள் ஜெயித்தால் உலகம் நாசமாகும் என்பது உறுதி.
சோரோஸின் மகன் ஹூமா அபேதீன் எனும் சவுதிவாழ் பாகிஸ்தானியை திருமணம் செய்யப்போகிறார். மர்ம நபர்கள்.. இந்த தேசத்தில் பல இடங்களில் ஏதாவது விளையாட்டை நடத்துவார்கள். அடிக்கடி ரயில் விபத்து, நேற்று ஜெய்புர் வந்தே பாரத் போகும் பாதையில் கான்க்ரீட் ஸ்லாப் வைத்த மர்ம நபர்கள் போன்ற செய்திகள் அதிகம் வரலாம்.
வாட்ஸப் என்க்ரிப்டட் என்று எதையும் எழுதலாம் என்று நினைத்தால் எல்லா கண்றாவிகளையும், எவனோ படித்துக்கொண்டிருக்கலாம். டெலக்ராம் ஸேஃப் என்று நினைக்கும்போது, அதன் தலைவரை ஃப்ரான்ஸில் கைது செய்து விட்டார்கள். அவரை பலதிலும் சிக்க வைத்து பல விஷயங்களை கறக்கும் வாய்ப்பு உண்டு.
சோஷியல் மீடியா புயல் 8-9 மாசம் முன்பு, ஜெர்மனியில் இருந்து அரைகுறையாக அள்ளிவிடும் துருவ் ராத்திகள் உருவானார்கள்.. காரணம் DS.
இதைப்பார்த்த அரசு.. வெளிநாட்டு உறவுகளில் அடித்துவிளையாடுவது போல்.. உள் நாட்டு விவகாரங்களிலும் நிறைய பாலிஸி மாற்றங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது. வக்ஃபு முதல் அக்னிவீர் வரை.. அக்னி வீர் ஒரு டாக்டிகல் மூவ். இதை பல மூதேவிகள் எதிர்ப்பதில்கூட இந்த DS பங்கு இருக்கிறது..
இந்தியாவின் பிளவுக்கோடுகளை இவர்கள் மிகச்சரியாக, ஜனநாயக ஆட்சி மாற்றத்திற்கு உபயோகிப்பார்கள். பங்க்ளாதேஷ் போன்று இங்கு ஒரு சிவில் வார் வருமா என்றால் தெரியாது. ஆனால்.. மொஹப்பத் கி துகான் பல இடங்களில் விஷச்செடியை நட்டு வைத்து விட்டது.
நாம்.. டெபாஸிட் வட்டி, இன்டக்ஸேஷன், வரி, ஜிஎஸ்டி, என்று கடுப்பில்.. சரியாக ஓட்டு போடாமல்.. ஷேத்ராடனம் போகும் நேரத்தில்.. நம் வீடு, தேசம் அனைத்தையும் மொத்தமாய் இழந்திடும் வாய்ப்பு நிறைய இருக்கிறது..
At the end of life
1. Teach mental models
Mental models are tools for your mind:
•Inversion
•Incentives
•First Principles
•Feynman Technique
The more tools you have, the more problems you solve.
Great books on the topic:
-“Seeking Wisdom”
-“Poor Charlies Almanac”
At the end of life - 2
Teach your KIDS how to THINK, not WHAT to think.
Here’s 11 THINGS you should TEACH your KIDS
(that most adults were never taught)
At the End of life -1
1. Your freedom begins the day you realize nobody is coming to save you
Your life is completely in your own hands.
And that's what makes life beautiful.
Success is your responsibility alone.
And this is a GOOD THING.
Because independence is freedom, and freedom is power.
(This series may continue..)
Wednesday, July 21, 2021
ஏன் அனைவரும்.கீதை பயில வேண்டும்.
Almost everyone, whom I interact with regarding Srimad Bhagavad Gita, agrees that one should definitely read this holy scripture, at least once. Many of them do admit that one should also follow the teachings of Gita. But only a handful of them are able to recognise the real purpose of Gita. Why is there more stress on Gita than any other holy book? Of course, there are plenty of other holy scriptures available, especially in the Santana Culture.
Primarily, there are two reasons why you should read, understand and then implement the teachings revealed in Srimad Bhagavad Gita. These are summarised as under:
Srimad Bhagavad Gita is the essence of all the Vedic knowledge that the truth seekers have been able to gather till date or will ever be able to gather in the future, using the faculties of mind and body possessed by human beings. It may sound like a comparatively bold statement to you, but it is true. One is able to understand this statement when one witness the truths revealed in Gita being verified, very often, by modern science.
Srimad Bhagavad Gita teaches you how to handle that knowledge. It not only inculcates in you, the right and unbiased perspective of observing and knowing your own self as well as the entire creation but also teaches you how to handle that knowledge acquired through such observance. The beauty of the text is that all this has been done while explaining the narrative between two friends who are at the verge of entering into the most fierce battle of their lifetime.
Srimad Bhagavad Gita is, thus, a compendium of knowledge with detailed description on how to put that knowledge to practical use. It reveals the absolute truth and at the same time, it discourses you, while treating like a child who is bewildered on receiving a new toy but does not know how to handle that. It does not leave you to discover your own ways to handle and use that knowledge. It does not leave you brainwashed. Chapter by chapter it takes you on a journey to understand the various aspects of this Supreme knowledge and keeps on narrating how to master them and use them to raise yourself to the highest possible position in life.
Srimad Bhagavad Gita does not even prescribe one particular path or solution for you. Lord Krishna, while speaking as the Brahman itself, promises that your individual faith and choice will be honoured. He will fix your faith and will make you achieve whatever goal you choose for yourself in your life, be it the most demonic or the most divine. He definitely makes it clear that when you actually have the choice to wish for something in life then why run after petty things? Why not wish for the highest seat available in the creation, the seat of the Brahman? He lovingly invites you to His heavenly abode. It is up to you to decide. He has even elaborated the highest achievable positions, in almost every category, that you can desire for.
Srimad Bhagavad Gita is not only a book of wisdom. It is ‘the Book’ of the absolute truth, the absolute knowledge appended with a detailed manual on how to use that knowledge for your ascension. The entire absolute knowledge is revealed by the Lord in the second chapter only. After that, he takes on the challenge to satisfy the queries of Arjuna and makes sure that there is not even an iota of doubt left, in Arjuna, that remains unanswered. He keeps on delivering until Arjuna is convinced that he is ready to take on the world with the divine knowledge that he has just received.
It’s high time you also start equipping yourself with the absolute knowledge.
நன்றி:-unknown friend
Sunday, September 6, 2020
விடாக் கண்டன்! கொடாக் கொரோணா!
கொரோணா வைரஸ், சீனாவால், சீனாவில் ஊருவாக்கப்பட்டதால் வெகு நாட்களுக்கு நாட்களுக்கு வராது; சீக்கிரமே ரிப்பேர் ஆகிவிடும் என்ற கனவில் மண் விழுந்துவிட்டது.
உருவாக்கிய புண்ணியவான் ஜம்மென கால்மேல் கால் போட்டுக்கொண்டு, வ்ளாடிவாஸ்டாக் என்னுடையது; லடாக், ஜப்பான், பசிஃபிக் எல்லாம் என்னிது என அழிச்சாட்டியம் செய்து கொண்டு, கோயிலுக்கு நேர்ந்துவிட்ட கன்றுக்குட்டி போல, துள்ளிவிளையாடுகிறான். உலகமே, குறிப்பாக இந்தியா விழிபிதுங்குகிறது. சீன 'ஹிரண்யனை' வதம் செய்ய ஏதாவது ஒரு கடவுள் அருள் புரியட்டும்.
விஞ்ஞாணிகள் எப்போதாவது வாக்ஸின் கண்டுபிடிக்கட்டும்; இல்லை... கண்டுபிடிக்காமலே போகட்டும்; வாழும் வரை லாபமே; அழப்படாது; எப்படியாயினும் எல்லோருக்கும் முடிவு உறுதி; அது இன்றா நாளையா என்பதுதான் வினா- என்ற கீதாச்சார்யன் மனோபாவத்திற்கு வந்துவிட்டதால் பயம் அற்றுவிட்டது.
இந்த 'பக்குவத்தால்' கோவிட் குறித்த பல்வேறு நபர்களின் எதிர்விணைகளை ரசிக்க முடிகிறது.
அரசியல்வாதிகள் பாடு நிம்மதி; கோவிட் 19 அல்லது கோவிட்20 , எதுவாக இருந்தாலும் , 'ஆக.. பழனிச்சாமி ஊடனே பதவி விலகணும்' என்று ஒரேமாதிரி ஒப்புவிப்பார் ஒருவர். '
மதச்சார்பு பிஜேபி ஒழிக ' என்பார் பப்பு'.
கம்மிகளுக்கு பிரச்சினை இல்லை; யாராவது வாய்க்கு வந்த நபரைக் குறித்து 'முர்தாபாத்' கோஷமிட்டுவிட்டு கலையலாம்.
பிஜேபிக்கு கைவசம் தயாராக இருக்கு, 'தேச விரோதி' பட்டம். அதை சகட்டுமேனிக்கு வினியோகம் செய்வர்.
எனக்குத் தெரிந்த பலர் பதட்டத்தின் உச்சியில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் 'பழனிச்சாமி வேஸ்ட்' என்றார்; சரிசார் என்றேன். அப்புறம் 'மோடி , ஒழிக' என்றார்; சரி சார்.. ஒழிச்சுடலாம். என்ன நினைத்தாரோ 'இந்த விஞ்ஞாணிகள் எல்லாம் தெண்டம்' என சான்றுரைப்பார்.
அப்புறம் இந்த முருகன் எல்லாம் சக்தியில்லாதவர்; இத்தனை நாட்களுக்குள் மருந்து கண்டு பிடிக்கலியே என்றார்.
இவரது ஒவ்வொரு ஐயத்திற்கும் பதில் சொல்லி மாளலை. எனவே, எனது நிம்மதி கருதி, அவர் என்ன சொன்னாலும் 'சரி..சரி ' எனபதோடு சரி.
'இன்னிக்கு ராத்திரிக்குள் வாக்ஸின் ரெடியாயிடுமா... ' என நிஜமாகவே பீதியடைந்து கேட்பார். 'தெர்ல சார்' என மையமாகச் சொல்லி வைப்பேன்.
'அந்த பழனி முருகனின் நவபாஷாணத்தில் கொஞ்சம் சுரண்டி சாப்பிட்டால் சரியாகாது?'
அதுக்கென்ன அவரது ஒரு விரலை ஒடித்து எடுத்து வந்திடலாம்.
'அப்புறம், அந்த நடராஜர், சிவபெருமான், அம்மன்கள் எல்லாம் என்னதான் பன்றாங்க?'
'அவுங்கெல்லாம் த.நா நியூஸோ அல்லது சீரியலோ பாத்துக்கிட்டிருப்பாங்க போல.. போய் எழுப்பிகிட்டு வரேன்..'
'சார்.. நீங்க தமாஷ் பண்றீங்க; நான் எவ்வளவு சீரியஸா பேசிகிட்டிருக்கேன்..'
'சேச்சே..அப்படியெல்லாம் இல்லை; வாக்ஸின் கண்டுபிடிக்காத சாமி இருந்தால் என்ன .. இல்லாவிட்டால் என்ன?'
'அப்பறம் அந்த வேளாங்கன்னி, நாகூர் சாமி கூட , மருந்தைக் கணாடுபிடிக்கலை பாருங்க..'
ஐயய்யோ.. இப்ப இவரிடமிருந்து தப்பிக்க என்னதான் செய்யறது..?
'எல்லா சாமியும் தெண்டம் எனத் தீர்மாணம் போட்டுடலாம் சார்.. இப்ப குட் நைட் சார்'
வேறோருவர் உள்ளார்.. எல்லாருமே இறந்துடனும். புதுசா ஒரு நல்ல உலகம் வரட்டும் என்பார். அவருக்கும் 'சரி சார் ' தான் பதில்.
மற்றும் ஒருவர் இருக்கிறார். தன்னைத்தவிர மற்றெல்லோரும் மூடர்கள்; ஊழல்பேர்வழிகள்' என்பார். ஆனால் மறைவாக வேண்டிய எச்சரிக்கைகளைச் செய்து கொள்வார்.
இன்னொருவர், 'கொரோணா என்ற வியாதியே இல்லை; மோடி சதி' எனபார். 'ஆமாம்..ஆமாம் உலகமே பொய் சொல்கிறது' என பதிலுரைக்க வேண்டியதுதான்.
ஒர் உறவு, தொடர்ந்து , 'நீங்க ஏன் வயசான காலத்தில் கஷ்டப்படுறீங்க.. எங்க கூட வந்துடுங்க' என சொல்லிக் கொண்டே இருந்தார். பொறுத்துப் பொறுத்து சலித்துப்போய், நாளை மறுநாள் அங்கு வந்துவிடட்டுமா?" என்றேன். திடுக்கிட்ட அவர், 'வீட்டில் இப்ப அரளிப்பூ நன்றாக பூக்கிறதா?' என டிராக் மாறினார். இனி அவர் 'என் வீட்டிற்கு வரலாமே..' என மறந்தும் சொல்ல மாட்டார்.
பலருக்கும் கோவிட்19 பிரச்சினையில் லோக்கல் கட்சி அரசியலைச் சம்பந்தப் படுத்தாமல் சிந்நிக்கவே இயலவில்லை. 'இது இயற்கைக்கும் மனித இனத்திற்குமிடையேயான போராட்டம்; இப்படித்தான் நிகழும். சரித்திரத்தில் பல சான்றுகள் உள்ளன. அவற்றைச் சமாளித்துதான் வாழணும்; உள்ளூர் அரசியலை இணைப்பது வெட்டி வேலை ' என்றால் அடித்துவிடுவார்கள் போல.
பல இடங்களை; கோயில்களைத் தரிசிக்கணும் என்பது என் அவா. கோவிட் முடிந்து, அதுவரை நாமும் உயிரோடிருந்து, அதற்குப்பின் விரும்பிய இடங்களுக்குப் போக 'டைம்' இருக்குமா? தெம்பும் ஆரோகயமும் இருக்குமா என ஒரு நப்பாசை. இதற்கும் வேறொரு நன்பர் பதில் வைத்திருந்தார். 'உங்க வீட்டில் நீங்கள் விரும்பும் சிவன், அமர்ந்திருப்பதாகப் பாவித்துக் கொள்ளுங்கள்' என்றார். . 'சாயங்காலம் கடைக்குப் போகாமல், வீட்டில் சாப்பிடும் பிஸ்கோத்தையே அடை-அவியலாகப் பாவித்துக் கொள்வதுதானே' என சொல்ல விரும்பி மென்று விடுவேன்.
நித்தியப்படியாக வாங்குவது மறந்து மாஸ்க்குகளையும், சானிடைசர்களையும் வாங்கிக் குவிக்கின்றனர் பலர். கபசுரக் குடிநீர் ஒரு மூட்டை.. மார்க்கெட்டில் இஞ்சியை இல்லாமல்ஸசெய்துவிட்டார்கள். கைகழுவியே கையைக் கரைத்துவிட்ட பலர்.
தெருவிற்கே சானிடைஸர் அடிக்கும் பலர். ஆறுமாதகாலமாக கதவை அடைத்துக் கொண்டு, பதுங்கிக்கிடந்து, கண்களை மட்டும் வெளியே நீட்டும் பலர்.
எனக்கொன்றும் வராது என எகத்தாளமாகச் சொல்லிக்கொண்டே அட்மிட்டாகி மேலுலக ப்ராப்தி அடைந்தோரும் உண்டு. இத்தகைய மனிதர்களின் செய்கைகளின் கண்டுகொண்டது என்னவென்றால், வெளிப்புற ரியாகக்ஷன் எப்படியிருந்தாலும், உண்மையில் அவர்களை ஆட்டிப்படைப்பது பீதி. உயிர்ப்பயம்.எந்தவிதமான தைரியமூட்டல்களும் பயன் தருவதில்லை.
ரிப்வான் விங்கிள் மாதிர், கொஞ்ச வருடம் தூங்கி, எல்லாம் சரியானபின் எழுந்து வர வாய்ப்புள்ளதா....?
ஹலோ..ஹலோ நில்லுங்க! ஓடாதீங்க@
Monday, August 31, 2020
வியாபார ஆரோக்கியம்.
வீட்டில் களேபரம். ஆளாளுக்கு யோசனை! பரபரப்பு! இங்கும் அங்குமாகப் பாய்கின்றனர். என்ன ஆச்சு? யாராவது காசுள்ள பசையான விருந்தினர் வந்துவிட்டாரா?
ஒன்றுமில்லை; வீட்டிற்கு காய்கறிகளும் மளிகை சாமான்களும் வாங்கி வந்தாயிற்று. இவைகளை வீட்டினுள்ளே அழைத்து வருவதற்கான முஸ்தீபுகளுக்குத்தான் இப்படியான ரணகளம். உப்பு, மஞ்சள், வினிகர்,வெண்ணீர் என அனைத்துவகையான அபிஷேகங்களுக்குப்பின்னும் இரண்டு மணிநேர சன்பாத் (வெயிலில் வை)ஆனால்தான் ஃபிரிட்ஜ்க்குள் காய்கனிகள் குடிபுகும்.
கொரோணா காலம். வாயைத் திறக்கப்படாது. என்னவோ செய்து கொள்ளட்டும். நமக்கு விபரம் போதாது.
ஏதாவது சொன்னால், 'உனக்கு வயசாயிடிச்சு; யூ டோன்ட் நோ எனிதிங். யூ மஸ்ட் அவேர் ஹவ் த வைரஸ் ஸ்பரெட்ஸ் அண்ட் ஹவ் அக்ரஸிவ் இட் ஈஸ். வி டோன்ட் டேக் எனி சான்ஸஸ்.. ஓ.கே?' என மருமகள் வாயை அடைத்து விடுவாள்.
நமக்குப் புகட்டப் படும் செய்திகள் யாவும் பீதியூட்டுவதாகத்தானே இருக்கு? அல்லது பீதியடைய வைக்கும் செய்திகளை மட்டுமே சொல்கிறார்கள்.
மாதம் ஒருகிலோ உப்பு வாங்கியது மாறி, பத்துகிலோ உப்பும், ஒருகிலோ மஞ்சள் போடி வாங்குகிறோம். 50 கிராமைத் தாண்டாத மிளகு, ஜீரகம், மஞ்சள் பொடியெல்லாம் இப்ப கிலோக் கணக்கில் வாங்கப்படுகிறது..
உபரியாக, இஞ்சியும் எலுமிச்சையும் சாக்கில் கிடக்கிறது.
ஷோகேஸில் சரித்து வைக்கப்பட்டிருந்த, ஒட்டடை அண்டிய போட்டோக்கள் எல்லாம் பரணில் ஏற, அந்த இடத்தை இம்யூனிட்டி பூஸ்டர்கள் பிடித்துக் கொண்டன. தினுசு தினுசான வண்ணங்களில் வைட்டமின் மாத்திரைகளையும் ஜிங்க் டப்பாக்ஙளும் வாங்கிக் குவித்து விட்டனர். எலுமிச்சையையும் இஞ்சியையும் கண்டால் தலைதெரிக்க ஓடியவர்கள், லிட்டர் லிட்டராக குடிக்கின்றனர். ரவாதோசையில் கவனமாக மிளகைப் பொறுக்கி எறிந்தகாலம் காணாமற் போச்சு.
இச்சந்ததியினர் கவனமாக, எச்சரிக்கையாக இருக்கின்றனர். அதெல்லாம் சரி. அதென்ன இம்யூனிட்டி பூஸ்டர்? ஆக்ஸிலரேட்டர் மாதிரி அழுத்தினால் வேகம் பிடிக்குமா இம்யூனிட்டி? எந்த வெப் பக்கத்தைத் திறந்தாலும் இந்த பூஸ்டர் விளம்பரம்தான்.
முன்பு, காலையில் கம்பு அல்து கேழ்வரகு களி உருண்டைகளைத் தண்ணீரில் கரைத்துக் குடித்தோம். சிலர் பழைய சோற்றினைப் பச்சைமிளகாய் துணைகொண்டு சாப்பிடுவர். 'பொறுக்குமா ஹெல்த் பிஸினஸ் வியாபாரிகட்கு?'
காலையில் கார்ன் ஃபளேக்ஸ் சாப்பிடு என்றனர். சிரமேற்கொண்டு கார்ன் அவலை வெட்டித் தள்ளினோம். அப்புறம் ஓட்ஸ் என்றனர். குதிரைகள் கோபித்தனவா தெரியவில்லை. அதையும் வெளுத்துக் கட்டினோம். நமக்கு 'ஹெல்த் கான்ஷியஸ்' முக்கியமல்லவா? பின் படிப்பிற்கு பொருள் இல்லாமற் போய்விடுமே!
அப்பறப் க்ரீன் டீ குடி என்றனர். கான்ஸர்-எய்ட்ஸ்-TB ஏதும் அண்டாது; உடம்பு இளைக்கும் என்றார்கள். Really? கேன்ஸரை அண்டவிடாதா? இதைக்குடித்தால் இனி சூப்பர் மேன்தான் என்றனர். மாய்ந்து மாய்ந்து குடித்தோம். வியாபாரம் பில்லியன் கணக்கில்.
அப்பறம் ஒல்லிதான் ஆரோக்கியம், அழகு என்றனர். ஜுரோ சைஸ் இடுப்பு என்றனர். அப்படியே ஆகட்டும் என்றோம்.
உடம்பு இளைக்க, 'தின்பதைக்குறை' என்பதற்குப் பதிலாக ஜிம்மிற்குப் போ' என்றனர். ஓட்டமாய் ஓடி வருடாந்திர சப்ஸ்கிருப்ஷன் கட்டினோம். அவர்களுக்குத் தெரியும், ஜிம்மெல்லாம் பிரசவ வைராக்கியம் போலத்தான் என.
பின், 'க்ளூடன் ஃப்ரீ உணவு' என ஆரம்பித்து வைத்தனர். இரண்டு சதமான மக்களுக்கு க்ளூட்டன் அலர்ஜி இருக்கக் கூடும். ஆனால் MNC க்களின் வெற்றி 20% மக்களை க்ளூட்டன் ஃப்ரீ உணவுகளைத் தேர்ந்தெடுக்க வைத்ததுதான். இவ்வகை ஊணவுகள் சாதாரண கோதுமை ரொட்டிகளை விட பன்மடங்கு விலை அதிகம். 42 பில்லியன் டாலர் பிஸினஸ், இந்த க்ளூடன் ஃப்ரீ ஊணவு.
நம் ஊர் நெய், வெண்ணை, தேங்காய் உணவுகளின் மீது கொழுப்பு என்று பழி சுமற்றி சனோலா சஃபோலாக்களைச் சாப்பிடு என்றனர். மறுபேச்சின்றி நெய்யை ஓரம்கட்டினோம்.
ஓய்ந்த களைப்பான நேரத்தில் கோலாக்களைக் குடி என்றனர். 'அப்படியே ஆகட்டும் எஜபமானரே' என பாட்டில் பாட்டிலாக விழுங்கினோம்; ஒவ்வொரு கோலாவிலும் 40 கிராம் சர்க்கரை உள்ளது என்பதை மறந்து.
பசும்பாலை கொழுப்பு எனச்சாடி, பதாம்பாலையும் சோய் மில்க்கையும் முன்னிறுத்துகின்றனர். நாமும் கொழுப்பற்ற பாலைஸநோக்கிப் படையெடுத்தோம்.
ப்ரோட்டீன் பௌடர் என ஆரம்பித்தனர். ஆம்வேயில் டின்டின்னாக வாங்கிக் குவித்தோம். 46 கிராம் புரொட்டீன் சாப்பிடவில்லை யெனின் யாரும் நம்மைச் சிறையில் தள்ளமாட்டார்கள். உடம்பு அட்ஜஸ்ட் செய்து கொள்ளும். ஆனாலும் பதறினோம். 5.2 பில்லியன் டாலர் பிஸினஸ் ஆயிற்றே!
வெள்ளை அரிசி, சிவப்பரசியை விட மாற்று குறைந்ததுதான்.ஆனால் விலையைக் கவனித்தீர்களா? 40 ரூபாய் மற்றும் 80 ரூபாய்.
நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க அவர்கள் பசும்பாலிருந்து நீக்கிய கொழுப்பை என்ன செய்கிறார்கள? கடல் உப்பிலிருந்து நீக்கிய பல மினரல்களை என்ன செய்கிறார்கள்? வெண்மையாக் கப்பட்ட சோடியம் குளோரைடை மட்டும்தானே நாம் வாங்குகிறோம். நீக்கப் பட்டவையும் அவர்களுக்குத் துட்டு!
அப்பறம் 'வைட்டமின் வாட்டர்' தனிக்கதை.
வூஹான் வைரஸ் வந்தது. இதோ..உலகு அல்லோல கல்லோலப் படுகிறது. மரண பீதியை மிகைப் படுத்தி விதவிதமான இம்யூனிட்டி பூஸ்டர்கள், சானிடைசர்கள், மாத்திரைகள், மாஸ்க்குகள் என சந்தையில் இறக்கி கல்லா கட்டுகின்றனர்.
சர்வதேச வியாபாரிகளின் வெற்றி ரகசியம் என்னவென்றால், ஆரோக்கிய விழிப்புணர்வு என்ற பெயரில் அனைத்து மக்களையும் பாதுகாப்பற்றவர்களாக (Insecure) உணர வைப்பதுதான். இந்தப் பதட்டத்தை, பாதுகாப்பின்மை போன்ற சூழலை, பீதியை உருவாக்கிவிட்டால் வியாபாரம் பிய்த்துக் போகாதா?
பாரம்பர்யமோ அல்லது நவீன ஜங்க் ஃபுட்டோ அனைத்திற்கும் பின்னால் உலக வணிகர்கள் இருக்கிறார்கள்.
இப்போது நிலவும் கொரோணா காலத்தைப் பயன்படுத்தி துட்டு பார்க்கிறார்களா அல்லது துட்டு பார்க்க கொரோணா ஏற்படுத்தப்பட்டதா? ஏனெனில் உணவு, உடை, ரசனை, பழக்கம், கலாச்சாரம் என எல்லாவற்றையும் மாற்றும் திறனும் வல்லமையும் பணமும் கொண்டவர்கள் சர்வதேச வியாபாரிகள்.
சரித்திரத்தில் பல கேள்விகளுக்கு விடையில்லை. இந்த பெண்டமிக்கும் அதில் ஒன்றாகி விடுமா?
Thursday, February 13, 2020
Friday, October 4, 2019
நினைவுகள் பேசினால்...
Tuesday, October 1, 2019
வெட்டுக்கிளிகள்
Sunday, November 18, 2018
பா(வா)ல் கிண்ணம்
Friday, August 3, 2018
ஹீலர்கள்!!
பத்தாவதோ, +2 வோ படித்துவிட்டு, நவீன மருத்துவர்களுக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கின்றனர்.
எங்கேயாவது 'சடாரென' தீர்வு கிடைக்காதா எனப் பரிதவிக்கும், நோயாளி மக்களின் சைக்காலஜி தான், இந்த டுபாக்கூர்களின் மூலதனம்.
டயபடீஸ் என்று ஒரு நோயே இல்லை;
டெங்கு வந்தால் ட்ரீட்மெண்ட் எடுக்காதே;
BP க்கு மாத்திரை வேண்டாம்;
டேண்ட்ரஃப் (பொடுகு) என்பது கபால எலும்பு உடைந்து மேலே வருவது;
பிரசவத்திற்கு மருத்துவமனைக்குச் செல்லக்கூடாது.....
தடுப்பூசிகள் தேவையில்லை...
இவையெல்லாம் ஹீலர்களின் அபத்தங்களுக்கு ஒரு சில எடுத்துக்காட்டுகள்.
பிரசவ மரணங்கள் அக்காலத்தில் எவ்வளவு சதவிகிதம், இன்று எவ்வளவு என்ற ஸ்டேடிஸ்டிக்ஸ் ஒன்றே போதும்; இம்மாதிரியான பேத்தல்களை முறியடிக்க! அக்காலத்தில் பத்து பெற்றால் நாலு போய்விடுமே? இன்று துணிந்து ஒன்றோடு நிறுத்திக் கொள்கிறோமே, அந்த நங்பிக்கையையும், துணிவை யும் தந்தது யார்? நவீன மருத்துவம் தானே?
இந்த ஹீலர் கிறுக்கர்களின் முன்னோடி ஒருவன் உள்ளான்.
இவன் பேச்சைக் கேட்டு, வீட்டிலேயே இயற்கைப் பிரசவம் என ஆரம்பித்த ஒருவனின் மனைவி சில நாள் முன்பு இறந்தே போனார். எவ்வளவு பெரிய விஷயம்?
மாற்று மருத்துவம் என்பது வேறு; ஏமாற்றுக் கோஷ்டிகள் என்பது வேறு; லாட்ஜ் 'டாக்டர்கள்' எல்லாம் மாற்று மருத்துர்கள் அல்ல;
ஹீலர் ஃபிராடுகள் போல, 'வாலிப வயோதிக அன்பர்களே' கோஷ்டிகள் தனிரகம். ஆண்களின் அறியாமையும், வெட்கமும்தான் இவர்களின் கேபிடல்.
நானும் alternative medical system களில் ஓரளவு நம்பிக்கை உள்ளவனே!
மாற்று மருத்துவம் என்பது அங்கீகரிக்கப்பட்ட வேறு பல மருத்துவ முறைகள்! ஆயுர்வேதம்,சித்தா, யுணாணி போன்றவை! ஹீலர்களின் DVD உரைகள் அல்ல!
மாற்று மருத்துவத்திலும், எந்தெந்த முறை, எது வரை, எந்தெந்த வியாதிக்கு என்பதில் தெளிவான பார்வை வேண்டும்! உதாரணமாக மூட்டுவலிகளுக்கு ஆயுர்வேதம் நல்லது! ஓரளவுவரை..ஆனால் மூட்டையே மாற்ற வேண்டுமெனில் அல்லோபதிதான்.
திருப்பூர் பெண் போல, ஹீலர்களின் பேச்சைக்கேட்டு இன்னும் எத்தனை பேர் உயிரழக்கப் போகிறார்களோ?
நம்மவர்கள், தற்போது பெருவாரியாக உள்ள சில நோய்களுக்கு, எங்கேயாவது சுலபமாக, சகாயமாக தீர்வு கிடைக்காதா எனத் தேடுகன்றனர். சர்க்கரை நோய்க்கு, BP க்கு மருந்தற்ற தீர்வு இருக்காதா எனஅலைகின்றனர்.
ஒன்று தெரிந்து கொள்வோம்..அப்படி டயபடீஸுக்கு எளிய 'மந்திர' சிகிச்சை அல்லது மருந்து இருந்தால், அதைக் கண்டுபிடித்தவன் தான் இன்று மிகப்பெரிய பணக்காரனாக இருப்பான்.
நிரூபிக்கப்பட்ட முறையாக வேறு எதுவும் இல்லாததால்தான் 'மெட்ஃபார்மின்' வியாபாரம் அத்தனை கோடிகளில்!
தற்போது ஒரு ஹீலரைப்பிடித்து உள்ளே
போட்டுவிட்டனர் போலீஸார்.
இது போதாது! இவ்வித போலி மருத்துவர்கள் அனைவரையும் உள்ளே தள்ளினால்தான், நாட்டிற்கு நல்லது!
அல்லோபதி மட்டுமே, அப்படியே உன்னதம் என்று கூறவில்லை!நோகாமல் காசுபிடுங்க அவர்களும் ஏராளமான வழிமுறைகள் வைத்திருக்கின்றனர்.
விஞ்ஞானம் என்பது வேறு; அதை வைத்து காசு பார்ப்பது என்பது வேறு!
ஹீலர்களிடம் விஞ்ஞானம் சற்றும் கிடையாது! காசு மட்டுமே குறி!
இந்த கோஷ்டிகளில் பலரையும் ஒரு ரவுண்டு வந்தவன் என்ற வகையில் 'எச்சரிக்கும்' உரிமையும்-கடமையும் உள்ளதாக நினைக்கிறேன்.
Life style காரணமாக, நாமே உருவாக்கிக் கொள்ளும் சில ஆரோக்கியச் சிடுக்குகளுக்கு, நம்முடைய 'நடைமுறைகளை' மாற்றிக் கொண்டாலே போதுமானது என்பது வரைதான் அவர்கள் சொல்வதை எடுத்துக் கொள்ளவேண்டும்.
உதாரணமாக,பசித்துப் புசி என ஒளவையும, நோயென வேண்டா வென ஐயன் வள்ளவரும் சொன்னதுதானே?
பசித்துப் புசிப்பதும், அகால உணவும், ஃபாஸ்ட் ஃபுட், சோடா வகையறாக்களை புறந்தள்ளுவதும் நல்ல பழக்கம். ஆங்கில மருத்துவம் இவற்றைத் தின்றால் நல்லது எனச் சொல்லவில்லைதானே?
அதற்காக, BP, uncontrolled diabetes, cancer யாவற்றிற்கும் மருத்துவம் வேண்டாம் என்பது சமுதாயத்திற்கு தவறான வழிகாட்டல்.
வீட்டிலேயே பிரசவம் என்பது விஷமம். ஸ்டேடிஸ்டிக்ஸ் ஏராளமாக உள்ளது.
Human evolution ல், நான்கு கால்களிலிருந்து இரண்டுகால் ஜீவன்களாக நாம் மாறியதனால் ஏராளமான நன்மைகள். சில சிக்கல்களும் உண்டு. பிரசவ அவசரங்கள், முதுகுவலி, ஹெர்ணியா போன்றவை!
வீட்டில் பிரசவம், தடுப்பூசிகள் வேண்டாம் ,
மருந்துகளே தவறு என்பது கண்டிக்கப் படவேண்டியவை!
10% உண்மையும், மீதி கைச்சரக்கும் இருந்தால் ஒரு ஹீலர் தயாரென்பது சமூக அபாயம்.